எக்ஸ்ட்ரா பணம் தந்தால்தான் குளிப்பேன் படப்பிடிப்பில் அடம் பிடித்த மோனிகா

மோனிகாவை குளிக்கவிட்ட படம் என்றால் அது ஹிட்டாகும் போலிருக்கிறது. இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய படம் சிலந்தி. படம் வெளியாகி பல மாதங்கள் விக்ஸ் கம்பெனியே வற்றிப் போகிற அளவுக்கு ஜலதோஷம் பிடித்து திரிந்தார் மோனிகா அந்த நேரத்தில். படத்தில் அத்தனை குளியல் காட்சிகள் இருந்தன. அதற்கப்புறம் வீட்டு பாத்ரூமிற்கே பூட்டு போடுகிற அளவுக்கு குளியலை அளவாக வைத்திருந்த மோனிகா தற்போது நடித்து வரும் ‘நதிகள் நனைவதில்லை’ படத்தில் தன் குளியல் கொள்கையை தளர்த்திக் கொண்டார்.

நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தில் நாகர்கோவில் மழையில் நனைய நனைய படம் பிடித்திருக்கிறார்கள் மோனிகாவை. சிலந்தியில் தனியாக குளித்தவர், இந்த படத்தில் புதுமுக நாயன் ஒருவருடன் சேர்ந்து குளிக்கும்படி ஆனதாம். இதற்காக மூன்று நாட்கள் செயற்கை மழையை பொழிய வைத்தாராம் அன்பழகன். ஆனால் இப்படி நனைய நனைய நடித்தவர், பிழிய பிழிய அன்பழகனை அழ வைத்ததுதான் கொடுமை.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, ‘படத்துல இத்தனை குளியல் சீன் இருக்கும்னு எனக்கு தெரியாது. அதனால் பேசுன சம்பளத்தை விட எக்ஸ்ட்ரா போட்டுக் கொடுத்தால்தான் நடிப்பேன்’ என்று கூறிவிட்டாராம். அவ்வளவு குளிரிலும், வேர்த்துவிட்டதாம் அன்பழகனுக்கு. இந்த படத்தின் தயாரிப்பாளரும் அன்பழகன்தான். அதனால்தான் இந்த அதிர்ச்சி. அதெல்லாம் முடியாது. பேசுன காசுக்கு மேல பத்து பைசா கிடையாது என்று இவர் அடம் பிடிக்க, ‘அப்படின்னா ஷுட்டிங் வர மாட்டேன்’னு மோனிகா முரண்டு பிடிக்க, பஞ்சாயத்து வேறு ஒரு முக்கிய பிரமுகரிடம் போனதாம்.

நீங்க வேணா அதிமுக தலைமைக்கழக பேச்சாளரா இருக்கலாம். அதுக்காக மோனிகாவின் கண்ணீரை பார்த்துட்டு சும்மாயிருக்க முடியாது. போனா போவுதுன்னு கொஞ்சம் போட்டுக் கொடுங்க என்றாராம் பிரமுகர். சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவராச்சே? போட்டுக் கொடுத்துவிட்டு மிச்ச சொச்ச மழைக்காட்சியை முடித்தாராம். ஒரு குளியலுக்கு பின்னால் இத்தனை அடமா? நல்லா தும்முங்க… சினிமா வளரட்டும்!

Bathing scenes directly relate to remuneration for Monica?

Monica seems to be favourite artiste for film makers for bath scenes. There were many bathing scenes in her earlier film Silandhi. Having learnt the bitter lessons by acting in bathing scenes she avoided bathing scenes in her films of late. However, she had agreed to do a scene in which she and her hero will drench in the rains, for the film Nadhigal Nanaivathillai. The film is produced and directed by Nanjil Anbazhagan. The shoot of the film was done at Nagarkovil recently, for 3 days. The shooting was completed but not before Monica demanded ‘additional’ salary for the ‘rain bathing scenes’ in the film. She refused to participate in the shooting till the producer-director agreed for the additional salary, after listening to the mediator who reasoned Anbazhagan to pay extra amount. After he paid the additional amount, the shoot continued to the satisfaction of all.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Vanjagam Short Film Release Stills with Cast & Crew Details

[nggallery id=238]

Close