‘எக்ஸ்ட்ரா போட்டுக் கொடுங்க…’ ஆரம்பத்திற்கு ஆர்யா தந்த நெருக்கடி!

மதாராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி மாதிரி எப்பவாவது ஹிட் கொடுக்கிற ஹீரோதான் ஆர்யா. ஆனாலும் சமுதாயத்தில் நிலவி வரும் ஹீரோக்களின் பஞ்சத்தை காரணம் காட்டி, இன்னமும் அவரை முதல் தர நடிகராகவே வைத்திருக்கிறது கோடம்பாக்கம். சர்வம் என்கிற படத்தில் லேசாக ஊசலாடிக் கொண்டிருந்த ஆர்யாவின் மார்க்கெட்டை அஷ்டகோணலாக்கிய டைரக்டர் விஷ்ணுவர்த்தன், மீண்டும் அதே போன்றதொரு உயரிய லட்சியத்துடன் ஆர்யாவை பிடித்துப் போட்ட படம்தான் ஆரம்பம்.

இதில் அஜீத் ஹீரோ என்ற போதிலும் என்ன தைரியத்திலோ ஆர்யாவும் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்தை பார்த்து முடிவு செய்கிற அளவுக்கு இல்லை. படத்தில் நடிக்கும்போதே நமது ஏரியா ஜீரோதான் என்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டாராம் அவர். இப்படி அழைத்து வந்து டம்மியாக்கிட்டாரே என்கிற கோபம் ஆர்யாவுக்கு இருந்தாலும், அதற்கும் ஒரு விலை இருக்கிறதல்லவா? அந்த விலையை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தலையில் கட்டிவிட்டாராம் அவர்.

அட… இதென்ன புதுக்கதையா இருக்கு? யெஸ்… திடீரென்று ரத்னத்தை சந்தித்த ஆர்யா, இந்த படத்தில் என் கேரக்டரை டம்மியாக்கிட்டாங்க. அதனால் பேசுன சம்பளத்தை விட எக்ஸ்ட்ரா ஒன்றரை கோடி கொடுத்திருங்க என்றாராம். சுமார் நாலு கோடி ரூபாயை ஏற்கனவே சம்பளமாக கொடுத்துவிட்ட ரத்னம், மூக்கால் அழுது கொண்டே இவர் கேட்டதை கொடுக்க ஒப்புக் கொண்டதாக காதை கடிக்கிறது சினிமா வட்டாரம்.

அழுக்கு டவுசரா இருந்தா கூட அதுக்கும் ஒரு விலை வைக்கும் சினிமா. பளிச் டவுசருக்கு கொடுக்க மாட்டாரா என்ன?

Unhappy Arya asks Arrambam producer additional salary

Arya is riding a high wave in Kollywood now and the recent success of Raja Rani has further boosted his market value. To capitalise on the current scenario Arya met with the Arrambam producer recently with a petition. We hear that he asked Rathnam additional salary of Rs.1.5 crores, to the contractual one, viz. Rs.4.0 crores, saying that his role has been made dummy in the film. Though he knew that sharing the screen space with Ajith would reduce his prominence in the film, he agreed to do it, for a price, perhaps. And the price is what he is demanding the producer. Rathnam, though shocked, is likely to accept Arya’s demand, say sources, close to the producer.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இன்னொரு நடிகையும் பஞ்சாயத்துல சிக்கிட்டாரே….

எதற்குமே கவலைப்படாத சாமியார்களை கூட காவியை கிழிச்சுகிட்டு கமண்டலத்தை உடைக்க வைக்கிற வித்தை நடிகைகளுக்கு மட்டுமே வாய்த்த கலை. சாமியார்களுக்கே அந்த கதி என்றால், சாதாரண தயாரிப்பாளர்...

Close