எங்களுக்குள்ள ஒரு சண்டையுமில்ல… பிரியாத சமுத்திரக்கனி- சசிகுமார்

சமுத்திரக்கனியும், சசிகுமாரும் கும்பகோணம் டிகிரி காபி மாதிரி அப்படியொரு காம்பினேஷன். யார் பால், யார் காபி பவுடர் என்பதெல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்று. ஆனால் ருசியாக இருந்த இந்த காம்பினேஷன் புட்டுக்கொண்டதாக கோடம்பாக்கத்தில் தகவல் பரவ, சொல்றவங்க சொல்லிட்டு போகட்டும் என்று அலட்சியமாகவே இருந்துவிட்டார்கள் இருவரும். அண்மையில் நிமிர்ந்து நில் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த சசிகுமார் இந்த புட்டுக்கொண்ட மேட்டரை போட்டு உடைத்தார்.

சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி, ஈசன்னு எல்லா படத்துலேயும் சேர்ந்து நடிச்சோம். பிறகு நாங்கதான் வேற தயாரிப்பாளர்கள் படங்களிலும் வேலை செய்யணும் என்று பேசி வைத்துக் கொண்டு தனித் தனியாக வொர்க் பண்ண ஆரம்பிச்சோம். அதற்குள் எங்களுக்குள் பிரச்சனை. நிரந்தரமா பிரிஞ்சுட்டோம்னு எழுதுனாங்க. அதுல உண்மையில்ல. ரெண்டு பேரும் சீக்கிரம் இணைஞ்சு மீண்டும் நடிக்கப் போறோம் என்றார்.

இந்தியை தவிர மீதி அத்தனை மொழிகளிலும் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார் சமுத்திரக்கனி. அப்படியே முன்னணி சேனல் ஒன்றில் ஒரு மெகா சீரியலை தயாரிக்கவும் போகிறார். இப்படி எல்லா நேரமும் பிஸியாகவே இருக்கும் சமுத்திரக்கனியை மேலும் பிசியாக்கும் போலிருக்கிறது நிமிர்ந்து நில் படம். அந்த படம் ஹிட்டான பிறகு, அவர் சசிகுமாருக்கு கிடைப்பாரா என்பதுதான் டவுட். ஏனென்றால் படத்தின் பிரமாண்டம் சமுத்திரக்கனி பக்கம் அஜீத் சூர்யாவை இழுத்து வரும் போலிருக்கே!

We have absolutely no quarrel – Director Sasikumar

Whenever a hit combination does a job separately, it will be taken up by unscrupulous elements to make a story out of it. The same thing had happened for Samutharakani and Sasikumar combo recently. Samuthrakani and Sasikumar are enterprising youngsters who have given good films for Kollywood. But they were not seen together of late, which wagged the tongues saying that both of some quarrels and parted ways.

However, Sasikumar took the opportunity to lambast the rumour mongers on the occasion of Samudhrakani directed Nimirundhu Nil audio launch. Speaking on the occasion director-actor-producer Sasikumar said that there is absolutely no truth in the news that he and Samuthrakani are separated due to quarrel. He then went on to explain that it is they only decided to work under different production houses and directors which they have been doing now. He also indicated that soon he and Samudhrakani would join hands for a new project.

Nimirndhu Nil is an action genre film and the talks are vibrant in the trade circle, which means that Samuthrakani may catch up to the next level in Kollywood.

1 Comment
  1. ananthvenkat says

    onka natbuku nan adimai..natbin thilagam samuthirakani um natbin nayagan sasikumar um sernthu work pona valthukal…………..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தனுஷ் கிண்டல்… கே.வி.ஆனந்த் எரிச்சல்! அனலில் சிக்கிய அநேகன்

ஒரு பாடல் காட்சியை எத்தனை நாட்கள் எடுப்பார்கள்? ஷங்கராக இருந்தால் ஒரு மாதம் கூட எடுப்பார்கள். தமிழ்சினிமாவில் டிஞ்சர் வாங்கியே பழக்கப்பட்ட உப்புமா டைரக்டராக இருந்தால், தயாரிப்பாளர்...

Close