எங்களையா கேவலப்படுத்துறீங்க? ஏ.ஆர்.முருகதாசுக்கு நோட்டீஸ்!

இனி குடுகுடுப்பை காரரை படத்தில் காட்டினாலும் அவர் சார்ந்த சங்கத்திடமும் நோ அப்ஜக்ஷன் சர்டிபிகேட் வாங்கினால்தான் உண்டு போல. அண்மையில் வெளிவந்து சக்கை போடு போட்ட ராஜா ராணி படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாசுக்கு அப்படத்தில் வரும் வசனம் ஒன்றினால் விசனம். சம்பந்தப்பட்ட நிறுவனம் அவர் மீது வழக்கு போட்டிருக்கிறது. என்னவாம்?

படத்தில் ஜெய் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பார் அல்லவா? அந்த நிறுவனம் நிஜமான நிறுவனம். அங்கு வேலை பார்க்கும் அவர் நயன்தாராவிடம் சிக்கிக் கொண்டு அவஸ்தை படுவார். நகைச்சவைக்காக படத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இந்த காட்சியில் தங்களது நிறுவனத்தை டேமேஜ் செய்துவிட்டதாக கருதுகிறார்களாம் அவர்கள். ஃபுளோரை வாடகைக்கு விடும்போது இப்படி உங்க நிறுவனத்தைதான் பந்தாடப் போறோம்னு அவங்க சொல்லவே இல்லையே என்று வருந்துகிறார்களாம்.

இதையெல்லாம் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். ஆற அமர பேசி, கொடுக்க வேண்டியதை கொடுத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வராம பார்த்துங்க என்று நடுவில் சிலரை சமாதானத்திற்கு அனுப்பியிருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

வஞ்சரம் காய்ஞ்சா கருவாடு, நெஞ்சுரம் போச்சுன்னா முக்காடு, முடியாதுன்னு பைட் பண்ணுங்க முருகர்!

Case filed against director AR Murgadoss

A case has been filed against director-producer AR Murugadoss on behalf of Air Voice Company for misusing their name in the film Raja Rani. According to the complainants, in Raja Rani, produced jointly by AR Murugadoss, some scenes involving Jai and Sathyan showed that the customer service of the Air Voice was not up to the mark. Taking offense of this, the Air Voice Company has filed a case against the producer stating that those particular scenes must be removed from the film. This case came up for hearing recently and the Judge ordered AR Murugadoss to appear before the court on 27th Jan. for explanation.

Meanwhile, the director has initiated conciliatory talks through middlemen with the company to withdraw the case.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அந்த வசனம் அப்படியே இருக்கட்டும்… சிவாவுக்கு அஜீத் தந்த நம்பிக்கை!

வீரம் படத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் அல்டிமேட்டாக உருவாக்கிய டைரக்டர் சிவா, வசனங்களையும் பக்கா ‘பஞ்ச்’ தெறிக்க அமைத்திருந்ததை வெகுவாகவே ரசிக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். நீ என்ன சாதிரா?...

Close