எங்க சார் நிம்மதியா படம் எடுக்க விடுறாங்க? குத்துசண்டை படத்துக்கே கும்மாங்குத்து!

நார்த் மெட்ராஸ் பக்கம் போனால், தெருவுக்கு தெரு குத்துசண்டை பயிற்சியாளர்கள் இருப்பார்கள். இளைஞர்களுக்கு இந்த சண்டையை கற்றுக் கொடுத்து ஒலிம்பிக்குக்கு அனுப்பப் போகிறார்களா என்றால் அதுதான் இல்லை. இப்படி வளரும் பலசாலிகள் யாராவது அப்பாவிகளை போட்டு ‘அடி’ப்பின்னிக் கொண்டிருப்பார்கள். ரவுடிகளாக ஃபார்ம் ஆவதற்கென்றே வளர்க்கப்படும் இந்த விளையாட்டு பற்றி ரொம்ப சீரியஸ் ஆக ஒரு படம் எடுக்கிறார்கள். அதுதான் ‘நாங்கல்லாம் ஏடாகூடம்’

நம்ம படத்துல ஹீரோ, ஒரு நல்ல குத்து சண்டை மாஸ்டர்ட்ட சேர்ந்து நல்லபடியா வளர்றான். அதுதான் சார் கதை என்கிறார் படத்தின் இயக்குனர் ஆர்.விஜயகுமார். இப்படி வளரும் ஒரு குத்து சண்டை வீரனுக்கும் சாஃப்ட்வேர் பெண்ணுக்கும் லவ் வருகிறது. அந்த லவ் ஒரு டிராக்கிலும், குத்து சண்டை இன்னொரு டிராக்கிலுமாக நகர்கிற படம் ஒரு புள்ளியில் முடிகிறபோது வருகிற சின்ன கசமுசாவுக்கு சுபமாம்! ஹீரோ மனோஜ் தேவதாஸ், தயாரிப்பாளர் நிர்மல் தேவதாசின் தம்பி. அப்படின்னா அவருக்கு குத்து சண்டை தெரியாதே, தெரிஞ்சது மாதிரியில்ல எடுத்துருப்பீங்க என்ற கேள்விக்கெல்லாம் லேசாக ரீயாக்ஷன் காட்டும் இயக்குனர், இந்த படத்தில் நடிச்ச துண்டு துக்கடா அத்தனை பேருக்கும் முறையா நடிப்பு பயிற்சி கொடுத்தோம். ஹீரோவுக்கு நிஜமாகவே குத்து சண்டை ஆறு மாசம் கத்துக் கொடுத்தோம் என்றார்.

படம்தான் ஃபைட்டை மையமாக கொண்டதென்றால், ‘நார்த் மெட்ராஸ்ல ஷுட்டிங்கே எடுக்க முடியல சார். கடலோரத்தில் கேமிரா வச்சாலே டார்ச்சர் ஆக்கிடுறாங்க. போலீசே, ஏன் சார் இங்க வந்து எடுக்கிறீங்க? சேஃப்ட்டியா வேற எடம் பார்த்துட்டு போயிருங்க என்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்க, நாட்ல ஒவ்வொருத்தரும் குத்துசண்டை கத்துகிட்டாதான் முடியும் போலிருக்கு’ என்றார் டைரக்டர் விஜயகுமார்.

படத்தில் எல்லாருமே நியூஃபேஸ்தான். ஆனால் படம் வந்த பின்பு தமிழ்சினிமாவுக்கே இந்த நியூபேஸ்கள் எல்லாரும் ‘நியூஸ்’ பேஸ்கள் ஆவார்கள் என்றார். அப்படியே ஆகக்கடவது…

Nangellam Eda Koodam is a film based on stunt people

Director R Vijayakumar and producer Nirmal Devadas are coming up with a film Nangellam Eda Koodam, purely based on stunt people. The director says that there are lot of stunt schools in North Chennai where youngsters are taught doing stunts, and mostly misusing them for their own benefits. In the film the hero who has learnt the art will use it for good purpose. He falls in love with a software engineer, and how their love succeeds despite hiccups is the crux of the story, tells the director.

Manoj Devadas brother of the producer is playing the lead and he has practiced the stunts for about 6 months says the director. The film will have all new faces but they will be much talked about after the release of the film, said the director confidently. He had also expressed his annoyance for not able to shoot the film in North Chennai due to unruly elements, with even city Police suggesting him to take the shooting at a much safer place.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
திருமணம் எனும் நிக்காஹ் பிரஸ்மீட்டில் நஸ்ரியா எனும் ‘வைட்டமின் ஆங்கிரி! ’

ஒரு பெரும் ரணகளத்திற்கு பிறகு நஸ்ரியா பிரஸ்சை சந்திக்கிறார் என்றால், கேள்வியில் மிளகாய் பொடியை தடவிக் கொண்டு வந்துவிட மாட்டார்களா நிருபர்கள்? இன்றும் அப்படிதான். நெடியுடன் கூடிய...

Close