எட்டுத்திக்கும் ஃபிகர் வேட்டை! அடங்க மாட்டாரு ஆர்யாவின் தம்பி!

ஆர்யாவின் தம்பி சத்யாவும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை அவர் நடித்த படங்கள் ஒன்று கூட போணியாகவில்லை. இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனாக தொடர் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சத்யாவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக கிடைத்திருக்கிறார் ‘ராட்டினம்’ பட இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி. இவரது அடுத்த படமான ‘எட்டு திக்கும் மதயானை’ படத்தில் சத்யாதான் ஹீரோ. இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் புதுமுகம் ஸ்ரீமுகி.

சத்யாவின் லுக் ஆர்யா போலிருக்கிறது. ‘லக்’கும் ஆர்யாவை போலவே இருப்பதாக இன்டஸ்ட்ரியில் ஒரே பேச்சு. அதை அவரிடமே கேட்டு தர்மசங்கடப்படுத்த நினைத்தது மீடியா. அதற்கெல்லாம் அசருகிறவரா ஆர்யாவின் தம்பி? உங்க அண்ணன் ஆர்யா எல்லா ஹீரோயின்களையும் பிரியாணி போட்டே வளைப்பதாக கிசுகிசு இருக்கு. நீங்க ஸ்ரீ முகியை பிரியாணி சாப்பிட கூப்பிட்டீங்களா என்று கொம்பு சீவிவிட, அதற்காகவே காத்திருந்த மாதிரி உற்சாகமானார் சத்யா.

‘ஆர்யாவும் நானும் சேர்ந்தே பிரியாணி சாப்டுருக்கோம். சீக்கிரம் ஸ்ரீமுகிக்கும் பிரியாணி இருக்கு’ என்றார். இதற்கெல்லாம் நேரடியாக அர்த்தம் கொள்வதா? அல்லது எதையாவது நினைத்துக் கொண்டு உரலை இடிப்பதா என்பதே புரியாமல் அண்ணனும் தம்பியும் அடங்க மாட்டாங்க போலிருக்கு என்று அத்தோடு கிசுகிசு பிரியாணி கிண்டுவதை நிறுத்திக் கொண்டது மீடியா. அதற்கப்புறம் படம் தொடர்பாக பேசினார் டைரக்டர் கே.எஸ்.தங்கராஜ்.

திருநெல்வேலின்னாலே வீரத்திற்கு பெயர் போன பூமி. படத்தின் தலைப்பிலேயே அந்த வீரம் வெளிப்பட்டுருக்குன்னு நினைக்கிறேன். படத்தின் பெரும்பாலான பகுதியை எங்க சொந்த மண்ணிலேயே எடுத்துருக்கோம் என்றார். முதல் படமான ராட்டினத்தை வேறொருவர் தயாரித்தார். இந்த படத்தை தங்கசாமியே தயாரித்திருக்கிறார். படத்தில் முக்கியமான ரோலில் மொக்கை மன்னன் சாம் ஆன்டர்சன் நடித்திருக்கிறார். சமீபத்தில் அஜீத் விஜய் படங்களில் சிறு கேரக்டரில் தலைகாட்டியவருக்கு பெரிய ரோலே கொடுத்திருக்கிறாராம் தங்கசாமி.

பவர் ஸ்டார்களை வளர்த்து விடுறதில் அவ்வளவு அக்கறை? ஹ்ம்ம்ம்ம்…

Ettuthikkum Madhayanai press meet

Ettuthikkum Madha Yanai is the latest offering of the director KS Thangaraj who has earlier directed Rattinam. This time Thangaraj has produces the film by himself. Arya’s brother Sathya is playing the lead along with new face Srimuki, who plays the female lead opposite to Sathya. The press meet of the film was when the director along with Sathya and Srimuki addressed the media. Though there were some light hearted humour during the meet initially, when the press made some similarities between the siblings – Arya and Sathya, linking with those who play opposite to them, it turned serious once the director started briefing about the film.

The directed pointed out that he had shot the film at Thirunelveli which is known for bravery and which exactly is the reason for the title of the film too. Sam Anderson is doing an important role in the film, the director confided.

1 Comment
  1. Vijay Anand says

    ‘ராட்டினம்’ பட இயக்குனர் கே.எஸ்.தங்கசாமியின் அடுத்த படமான ‘எட்டு திக்கும் மதயானை’ மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
SUPERSTAR RAJINIKANTH LAUNCHES NAAN SIGAPPU MANITHAN AUDIO

[nggallery id=340]

Close