எட்டு நிமிஷம் கழிச்சுதான் விஜய் வர்றாரு… இது ஜில்லா படம் திடுக்!

எந்த பஞ்சாயத்தும் எடுபடவில்லை. வீரமும், ஜில்லாவும் ஒரே நாளில்தான் திரைக்கு வரவிருப்பதாக தகவல். இதற்கிடையில் ஜில்லா குறித்த ஒரு விஷயம் விஜய் ரசிகர்களின் பி.பி ஐ கொஞ்சம் தடுமாற வைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

பொதுவாகவே அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்…. (சொல்ல்லியாச்சா… வேற யாரும் லிஸ்ட்ல இருக்காங்களா?) போன்ற முன்னணி ஹீரோக்கள் திரையில் தோன்றும்போது கை நிறைய பூக்களை வைத்துக் கொண்டு ஸ்கீரினில் கொட்டுவது ரசிகர்களின் வழக்கம். அவர்களை பொறுத்தவரை இந்த ஃபர்ஸ்ட் லுக் ரொம்பவே முக்கியம். இதற்காகவே காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றாமல் படம் ஆரம்பித்த சில வினாடிகளில் என்ட்ரி கொடுத்துவிடுவார்கள் இவர்களின் அன்பு ஹீரோக்கள்.

ஆனால் ஜில்லா வெளியிடும் தியேட்டர்களில் எட்டு நிமிஷம் கழித்துதான் டைட்டில் போடவே துவங்குவார்களாம். அதுவரைக்கும்?

இந்த படத்தை தயாரிக்கும் சூப்பர்ஹிட் நிறுவனம் பற்றிய ஒரு டாகுமென்ட்ரி திரையிடப்படுமாம். அவர்கள் இதுவரை எடுத்த படங்கள் எவ்வளவு? எத்தனை பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்? என்றெல்லாம் நீண்ட நெடிய விளக்கமாக இருக்குமாம் அது. ரசிகர்களின் பொறுமையை சோதித்தாலும் பரவாயில்லை. ஜில்லா திரையிடுவதற்கு முன் இது வந்தாக வேண்டும் என்று கூறிவிட்டாராம் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.

அப்புறமென்ன? விஜய்யின் ஆசை முகம் காண எட்டு நிமிஷம் காத்திருங்க ரசிகர்களே….

Vijay will enter the scene in Jilla only after 8 minutes

Despite the best efforts to have a gap in the release of Veeram and Jilla, no good solution emerged, leaving both the films to fight against each other at the BO. Fighting at BO is not a big issue, but fighting inside the theatres is a huge risk and it is to be seen how the fans will react in the theatres.

Coming to Jilla, it is also learnt that Vijay will enter the scene in the film after 8 minutes of film’s opening. The first 8 minutes will be a small documentary about Super Good Films elucidating about the production company journey in the cinema field. Producer RB Choudhary was very firm that this documentary should precede the main film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மீகாமன் படத்திலிருந்து ஆர்யாவின் அசத்தல் கெட்டப்…

[nggallery id=108]

Close