எதுவா இருந்தாலும் ரேகாவை கேளுங்க… -ஹன்சிகா ஆவேசம்!

எவ்வளவு ஸ்டிராங்கான பில்டிங்காக இருந்தாலும் அஸ்திவாரத்திலிருந்து நாலைந்து செங்கல்லை பிடுங்கினால் கட்டிடமே காலி. ஹன்சிகா சிம்புவின் காதல் பில்டிங்கில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஆட்டம் கண்டு கிடக்கிறது அஸ்திவாரம். நயன்தாராவின் மறுவரவு சிம்புவின் வாழ்வில் சிலபல வசந்தங்களை கொடுக்கும் என்பதை சொல்லவே வேண்டாம். ஏனென்றால் நிகழ்கால காதலை விட கடந்த கால காதலுக்கு தெம்பு அதிகம்.

திருவள்ளுவருக்கே காதல் அதிகாரம் சொல்லிக் கொடுக்கிற அளவுக்கு திரியும் தாடிக்கார வள்ளுவரின் மகனுக்கு தெரியாதா இந்த வேதாந்தமும், வியாக்யானமும். இனிமேல் தினந்தோறும் வரப்போகும் கிசுகிசுவுக்காக தமிழகம் காத்துக்கிடக்க, ஹன்சிகா வாயிலிருந்து உதிரப்போகும் அந்த வார்த்தைக்காக காத்துக்கிடக்கிறது ஊர். சூடோடு சூடாக ஹன்சிகாவிடம் பேசிவிட நினைத்த நிருபர்கள் அவரது செல்போனை தொடர்பு கொண்டால், அவர் சொல்லும் பதில் பயங்கர ‘அப்பா டக்கர் ’ ரகம்.

‘எங்கிட்ட எதுவும் கேட்காதீங்க. என்னோட மேனஜேர் பிஆர்ஓ ரேகாவை கேளுங்க. டொக்….’ இப்படிதான் வருகிறது பதில். சரி, ரேகாவிடமே கேட்டுவிடலாம் என்று அவருக்கு போன் அடித்தால், ‘சார்… இதென்ன வேடிக்கையா இருக்கு? அவங்க காதலை பற்றி நான் எப்படி சொல்ல முடியும்’ என்கிறார். சரி, வேணாம். அவருகிட்ட கேட்டாவது சொல்லுங்க. சிம்புவோட ஹன்சிகாவின் லவ் தொடருதா? கட்டிங் பிளேரை போட்டு கட் பண்ணிட்டாங்களான்னு? ‘சார்… இதென்ன வம்பாப் போச்சு. இதையெல்லாம் நான் எப்படி அவங்கிகிட்ட கேட்க முடியும்? அது தப்பா படாதா?’ – இது ரேகா.

இப்படி மாற்றி மாற்றி மத்தாப்பூ கொளுத்தும் இவ்விருவரின் பதில்களை கேட்டு புஸ்வாணமாகிறார்கள் நிருபர்கள். காதல்னாலே ஒரே கொழப்பாச்சுதான்!

Shaken, Hansika now avoids media  

The hot news of Simbu and Nayanthara teaming up together after 7 years must have shaken Hansika. Though they are teaming up only in the film, Nayan was the ex-girl friend of Simbu, has been the thorn in the love affair between Simbu and Hansika. When wanted to know her reaction on the news, the media contacted her only to be told to speak to her PRO Rekha. The PRO on her part suggested diplomatically it is not good on her part to speak about the affair of her boss. The secrecy therefore continues while the speculation galore!

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ஜெயிச்சாகணும்….’ அதற்காக கார்த்தி எடுத்த புதிய முடிவு

கண்ணு இன்னும் முழுசா கெடல. அதனால் சூரிய நமஸ்காரம் தப்பில்ல என்று நினைத்திருக்கலாம். சமீபத்திய தோல்விகளுக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள் கார்த்தியும்,...

Close