எந்திரன் பார்ட் 2 – மீண்டும் இணைகிறார்கள் ஷங்கரும் ரஜினியும்
எந்திரன் படத்திற்கு ரஜினி நடிக்கப் போகும் புதிய படம் என்ன? ராணா என்றார்கள். ஆனால் அது ரஜினியின் உடல்நிலை காரணமாக தள்ளிப் போய் தள்ளிப் போய் கடைசியில் இல்லாமலே போய்விட்டது. ரஜினியின் அடுத்த படத்தை நான் இயக்கப் போவதில்லை என்று தெளிவாக இன்று பேட்டியளித்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.
அப்போது நடந்த ராணா பிரஸ்மீட்டில்தான் அந்த சம்பவமும் நடந்தது. இந்த படத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார் என்று படக்குழுவினர் சொல்வதற்கு முன்பே எழுதிய ஒரு நிருபரை பிலுபிலுவென பிடித்துக் கொண்ட ரவிகுமார் வா… போ… என்று ஒருமையில் திட்டிய சம்பவமும் நடந்தது. ராணாவுக்கு எத்தனை சுழி போடணும்னு தெரியுமா உங்களுக்கு? அதை நான் சொல்லணும்… என்றெல்லாம் வறுத்து எடுத்தார் ரவிகுமார். நிருபர்களின் வயிற்றெரிச்சலிலேயே அந்த படம் நின்று போனது.
எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி எதில் நடிக்கிறார்? இந்த கேள்வி மறுபடியும் சுற்றிக் கொண்டு சூறாவளியாக அடிப்பது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஏம்ப்பா… நடுவுல கோச்சடையான் என்றொரு படம் இருக்கு. மறந்தே போனீங்களா என்று கேட்கவும் முடியாது. ஏனென்றால் கோச்சடையான், ரஜினியின் படம் வரைந்து பாகங்களை குறிக்கிற படமாகவே தென்படுகிறது ரசிகர்களுக்கு. மறுபடியும் அதே கேள்வி. எந்திரனுக்கு பிறகு ரஜினியோட படம்?
இப்போது காதில் விழும் தகவல்கள் சந்தோஷமாக இருக்கிறது. இந்தியாவை மட்டுமல்ல, ஹாலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தப்படம் எந்திரன். இதன் பார்ட் 2 வந்தால் எப்படியிருக்கும்? அந்த வில்லன் ரஜினியின் அடுத்த அவதாரத்தை வேறொரு பரிமாணத்தில் ரசிக்க மாட்டோமா என்றெல்லாம் ரசிகர்கள் தவியாய் தவிக்கிறார்கள். அதற்கெல்லாம் தீனி போடுகிற மாதிரி இருக்கிறது இந்த செய்தி. ஷங்கரும் ரஜினியும் சந்தித்திருக்கிறார்கள். இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு அல்ல. எந்திரன் 2 பற்றிய சந்திப்புதானாம்.
ஐ படத்திற்கு பிறகு ரஜினி, ஷங்கர் படத்தில் நடிக்கப் போகிறார். அது எந்திரன் பார்ட் 2 என்று அரசல்புரசலாக பேசுகிறார்கள் கோடம்பாக்கத்தின் முக்கியஸ்தர்கள். நல்லது நடக்க எதுக்கு தள்ளிப்போடணும். அறிவிச்சுருங்க லெஜன்ட்ஸ்….
Super Star Rajini and Director Shankar to unite for Endhiran 2
Rajini-Shankar combo’s Endhiran enabled Tamil Cinema a place in World Cinema map. The film not only a financially super successful was also turned the heads of Hollywood and Bollywood film makers on Tamil Cinema. The pair may re-unite once again to take forward Tamil Cinema to new heights.
Currently Rajini having finished his Kochadaiiyaan is waiting for the film to hit the theatres once the graphics and BG score is over. The film is expected to hit the theatres during Tamil New Year. Shankar too will be wrapping up the shoot of his forthcoming film Ai by Jan.2014 end, and would begin work on graphics and post production work. Both of them will be free once their commitments are over, to take up their association for the sequel to Endhiran.
Recently director Shankar and Rajini met and according to reliable sources, the topic was to make sequel to Endhiran. Kollywood insiders say that both will join hands for Endhiran 2.
Like the fans of Rajini and Shankar, we also await this good news. Why postpone good things, why not announce to the delight of all!