என்னது… ஃபாரின்லயா? ஹன்சிகா எரிச்சல்!

பெல்ட் அறுந்தாலும் என்ஜின் சப்தம் நிற்காது போலிருக்கு. ஹன்சிகாவும் சிம்புவும் எங்களுக்குள்ளே இனிமே எதுவும் இல்ல. அவர் வழிய அவர் பார்க்கட்டும்… என் வழிய நான் பார்க்குறேன் என்று அறிக்கை வெளியிட்டு தங்களின் ஆறு மாத கால அமர காதலின் மீது அருவாளை வீசிக் கொண்ட போதும், இருவருக்கும் இடையிலான யுத்தம் அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது போலிருக்கிறது.

ஆச்சர்யம் என்னவென்றால் தனக்கும் ஹன்சிகாவுக்குமான உறவு முடிவுக்கு வந்ததாக சிம்பு ட்விட்டரில் அறிவித்தாரல்லவா? அந்த இடி மின்னல் நேரத்தில் அருகில் சில ஸ்டெப்புகள் தள்ளிதான் நின்றிருந்தாராம் ஹன்சிகா. இடம் வாலு பட ஷுட்டிங்.

இப்போது தொடரும் பிரச்சனையும் வாலுவினால்தான். படத்தில் ஒரு பாடல் காட்சியை ஷுட் பண்ண வெளிநாட்டுக்கு கிளம்புவதாக இருந்தார்கள். இந்த நேரத்தில்தான் இப்படியொரு சங்கடம் எல்லாருக்கும். இருந்தாலும் இருவரும் வருவார்கள் என்று நம்பினாராம் இயக்குனர். இந்த திட்டத்திற்கு சிம்பு ஓ.கே சொல்லிவிட்டார். ஆனால் ஹன்சிகா மட்டும் நான் வெளிநாட்டுக்கு வர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இந்த பாடலை இங்கேயே எங்காவது எடுங்க என்று ஹன்சிகா கூறியதால் இயக்குனரும் அப்செட்.

ஹன்சிகா ஏன் வர மறுக்கிறார்?

எந்த ஹீரோயின் வழிக்கு வரவில்லை என்றாலும், உடனே ‘ஃபாரின்ல ஒரு லவ் சாங் எடுத்துரலாம்’ என்று கணக்கு போடுவது ஹீரோக்களின் வாடிக்கை. தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, ஆந்திரா கன்னட சினிமா வட்டாரங்களிலும் தொடரும் இந்த தாங்காத உபத்திரவ யுக்தியை இங்கேயும் பயன்படுத்த சிம்பு நினைத்திருக்கலாம் என்பது ஹன்சிகாவின் யூகம்.

‘இவங்களோட சொந்த எரிச்சல் அவிச்சல்ல எங்க தாவங்கட்டைய பொளக்குறாங்களே…’ என்று புலம்புகிறாராம் இயக்குனர்.

Director proposes Hansika disposes!

Though the ‘love’ affair between Simbu and Hansika has come to an end officially, as announced by Simbu some time back, the affair seems to be playing its part in harbouring trouble for the film makers of Vaalu. The talkie portions, of the film is said to over, the director has planned a song sequence to be shot in a foreign location earlier. Though Vijay Chandar the director of the film was little worried about the break-up of the lead pair during the shooting of the film, he was confident that he could complete the film without any hassle. When he told that a song sequence is to be taken in foreign location, Simbu seems to have given the consent, while it was not so from Hansika’s side. She cryptly told the director that she would not shoot the song in foreign locations but willing to do it inside India. Her worry emanates from the view point that several heroes of Telugu, Kannada and other industries would mend fences with the heroines while on a foreign trip, and Simbu might use the same yardstick to her too. While nothing wrong in her thoughts, it is frivolous for the actress to look everyone with jaundiced eyes.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லட்சுமிமேனனை வணங்குகிறேன்… உணர்ச்சிவசப்பட்ட விஷால்!

‘நான் சிவப்பு மனிதன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அப்படத்தின் நாயகி லட்சுமிமேனன் வரவில்லை. வேறொன்றுமில்லை, பொண்ணுக்கு எக்ஸாம்! அவர் வரவில்லை என்றாலும் மொத்த ‘டாக்’கும் அவர்...

Close