என்னது… இரண்டாம் உலகம் தோல்விப்படமா? ஆர்யாவின் அடுத்தபட இயக்குனர் அதிர்ச்சி!

தமிழ்சினிமாவுக்கு தமிழில் பெயர் வைப்பதையே பெரிய விஷயமாக பேசும்படி ஆகிக் கொண்டிருக்கிறது செம்மொழியான தமிழ் மொழியாம் நிலைமை. இருந்தாலும் பாராட்டியே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு வடிகட்டிய தமிழில் பெயர் வைத்திருக்கிறார் மகிழ் திருமேனி. தடையற தாக்க என்பது இவரது முந்தைய படம். அதற்கும் முன்பாக ஒரு படம் வந்தது. அதை அவரே நினைவில் வைத்திருக்கவில்லை. அல்லது விரும்பவில்லை. ஆனால் தடையற தாக்கவுக்கு பிறகுதான், இவருடைய வரலாறை விசாரிக்க ஆரம்பித்தது இன்டஸ்ட்ரி. அந்தளவுக்கு அப்படத்தில் ஒரு நேர்த்தியும் விறுவிறுப்பும் இருந்தது.

ஆர்யா நடிக்க, மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் புதிய படம் மீகாமன். அப்படியென்றால் கேப்டன் ஆஃப்த ஷிப் என்று அர்த்தமாம். தமிழ் அகராதியில் ‘மாலுமி’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இது கடல் சார்ந்த கதையா, அல்லது சினிமா டைரக்டரை கேப்டன் ஆஃப் த ஷிப் என்று சொல்கிறார்களே, அதனால் சினிமா சார்ந்த கதையா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் மெல்லிய சிரிப்பையே பதிலாக தந்தார் மகிழ். அடுத்தவரின் புரளிப்பேச்சில் அதிகம் மகிழ்(திருமேனி)பவர் போலிருக்கிறது. இன்னும் இந்த தலைப்பை பற்றி என்னவெல்லாம் யூகிக்க முடியுமோ, யூகிக்கட்டுமே. நான் அதை ரசிக்கிறேன் என்றார் பெருமையோடு. நான் கவுதம் மேனன் சாரோட அசிஸ்டென்ட். அவர் வாரணம் ஆயிரம் என்று பெயர் வைச்சப்போ இப்படிதான் பலரும் குழம்பினார்கள். சிலர் வானரம் ஆயிரம் என்றெல்லாம் குழப்பினார்கள். ஆனால் அந்த தலைப்பை எப்படி கம்பீரமாக அறிவித்து, வாரணம் என்றால் யானை என்ற பொருளை மக்களுக்கு அறிவுறுத்தினாரோ, அப்படிதான் இந்த தலைப்பும் அதுகுறித்த விளக்கங்களும் என்ற மகிழ் திருமேனி, இப்படத்தில் ஆர்யாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேரக்டர் பற்றி பேசும்போதும் அதே சிக்கனத்தை கடை பிடித்தார்.

போகட்டும்… அது பற்றிய பேச்சை விட்டு இரண்டாம் உலகம் பற்றி பேச ஆரம்பித்தோம். அந்த படத்தின் ரிலீசுக்கு முன்னாடிதான் நீங்க ஆர்யாவுக்கு கதை சொல்லியிருப்பீங்க. இரண்டாம் உலகம் தோல்விக்கு பிறகு உங்க மனநிலை என்னவா இருந்துச்சு என்றோம். முதல்ல அந்த படம் தோல்விப்படம் என்பதையே நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். தமிழில் வந்த மிக சிறப்பான படங்களை எண்ணுவதற்காக விரல் விட்டால், அதில் ஒரு படமாக இரண்டாம் உலகம் இருக்கும். அப்படத்தின் வியாபார விஷயங்களை தாண்டி நான் அந்த படத்தை ரசித்தேன் என்றார் மகிழ் திருமேனி.

எல்லாமே கொஞ்சம் புதிராத்த்த்தான் இருக்கு!

Magizh Thirumeni announces title for Arya’s film

Magizh Thirumeni who debuted with Mun Dhinam Parthene, was noticed by Kollywood and the audience only by his next film Thadayara Thakka an engaging action film. Now, he will be directing Arya’s next film has officially announced the title of the film, viz. Meegaman. It means the captain of the ship, he explained. When asked about the title, he said when he worked under Gautham Menon, he announced the title Varanam Aayiram but when people were making fun of, he created a sort of history by impacting the film in the minds of the people. He plans to do the same this time for Meegaman, Magizh pointed out.

When quizzed about bombing of Arya’s Irandam Ulagam he said he considers the film ranks amongst one of the best films and he thoroughly enjoyed the film, irrespective of its business records.

Speaking about the Meegaman, he said the film would go on floors from 5th Jan.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் அழைப்பு… ஓடிய நிருபர்கள்… போன இடத்தில் ‘பொசுக்!’

ஃபேஸ்புக், ட்விட்டர் , இணையதளங்கள் போன்ற நவீன யுகத்தை பற்றி அதிகம் அலட்டிக் கொள்பவரல்ல விஜய். ஆனால் அவரை ஆட்டோ ஆட்டென ஆட்டி வைப்பதும் இதுபோன்ற சமூக...

Close