என்னது கவர்ச்சியா நடிக்கணுமா…? -ரோஜா அதிர்ச்சி
ரோஜாவின் அடுத்த கட்ட பாய்ச்சல் அரசியல்தான் என்றிருந்தது. யாருடைய கெட்ட நேரமோ, இவர் தலைவராக ஏற்றுக் கொண்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி அமரர் ஆகிவிட்டார். அதற்கப்புறம் அவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை கூட ஒண்டிக்கு ஒண்டி கூப்பிட்டு அரசியல் செய்து பார்த்த ரோஜாவுக்கு, மக்கள் தந்தது நக்கலான ஒரு ஸ்மைல்தான்.
வந்த மடம் இல்லேன்னா சந்த மடம் என்பார்கள் கிராமத்தில். ரோஜாவின் முடிவும் அப்படியாகிவிட்டது. மீண்டும் சினிமாதான் என்று கிளம்பி வந்தவருக்கு அதே பழைய உற்சாகத்தை வாரி வழங்கி வரவேற்றுக் கொண்டது சினிமா. ஒரு புறம் சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும், மறுபுறம் வண்ணத்திரையையும் விட்டு வைக்கவில்லை அவர்.
இந்த நேரத்தில்தான் ‘ஆப்பிள் பெண்ணே’ படத்தில் நடிக்க ரோஜாவை அழைத்தாராம் அப்படத்தின் டைரக்டர் கலைமணி. முழு கதையையும் கேட்ட ரோஜா, என்னங்க இவ்வளவு கிளாமரா ஒரு ரோல் தர்றீங்க. என் இமேஜுக்கு இது செட் ஆவுமா என்று அதிர்ந்தே போயிருக்கிறார். யெஸ்… இந்த படத்தில் ரோஜாவுக்கு படு கவர்ச்சியான கேரக்டர். இதில் நடிப்பதா வேண்டாமா என்று ஏகத்திற்கும் குழம்பிய அவர், உங்க படத்தின் க்ளைமாக்சுக்காக ஒத்துக்குறேன் என்றாராம். அதுமட்டுமல்ல, கதையை கேட்டு தேம்பி தேம்பி அழுததாகவும் கூறுகிறார் கலைமணி.
இத்தனைக்கும் இந்த படத்தில் இவருக்கு ஒரு மகள் உண்டு. அவருக்கு காதல் உண்டு. அதனால் பிரச்சனைகளும் உண்டு. இதையும் மீறி ரோஜாவின் கவர்ச்சியை எங்கு திணிப்பார்களோ, அதுதான் பெரிய சஸ்பென்சாக இருக்கிறது.