என்னது… நான் போய் இந்த ஓட்டல்ல தங்கறதா? – தயாரிப்பாளரின் பாக்கெட்டுக்கு தண்டம் வைத்த நடிகை

 

கஞ்சா கருப்புவின் அதிகார துஷ்பிரயோகத்திலிருந்து எப்படியோ தப்பித்த ரகசியா கடந்த நான்கு நாட்களாக சென்னையில்தான் இருக்கிறார். அவரது போர்ஷனை சீக்கிரம் முடித்து மும்பைக்கே விரட்டிவிட்டால் போதும் என்கிற ஆத்திரத்தில் வேக வேகமாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் வேல்முருகன் போர்வெல் பட இயக்குனர் கோபி. ஏனிந்த ஓட்டம், வாட்டம்?

கஞ்சா கருப்புக்கு முத்தம் கொடுக்க மாட்டேன் என்று ரகசியா அடம் பிடித்து அந்த இம்சையிலிருந்து தப்பித்த கதையை கண்ணீர் மல்கும் வார்த்தைகளால் நாம் எழுதி நான்கு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் ரகசியாவால் மேலும் கண்ணீர் சிந்த வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறது அப்படக்குழு.

மும்பையில் தங்கியிருக்கும் ரகசியாவை படப்பிடிப்புக்கு அழைக்க வேண்டும் என்றால், மூன்று விமான டிக்கெட்டுகள் போட வேண்டி இருக்கிறதாம். ரகசியா, அவரது அம்மா, அப்புறம் மேக்கப்மேன். இம்மூவரில் மேக்கப் மேனாவது ரயிலில் வரக்கூடாதா என்றால், அதெப்படி என்கிறாராம் அவர். எப்படியோ இந்த மூவர் கோஷ்டியை சென்னைக்கு வரவழைத்து 100 அடி சாலையில் இருக்கும் பிரபல அம்பி ப்ளஸ் கா ஓட்டலில் ரூம் போட்டிருந்தார்களாம். பார்ப்பதற்கும், தங்குவதற்கும் மிக லட்சணமான ஓட்டல் இது. அப்படியிருந்தும் இதில் நுழைந்த ரகசியா, ரிசப்ஷனில் இந்த ஓட்டலின் அந்தஸ்து என்ன என்று கேட்க, அவரோ ரகசியாவின் அடி மனசு ஆத்திரம் புரியாமல் உண்மையை உளறிவிட்டாராம்.

நான் என் தகுதிக்கு ஃபைவ் ஸ்டார் ஓட்டலில்தான் தங்கி பளக்கம். இப்போது இந்த ஓட்டல்ல ரூம் போட்டுட்டீங்களே என்று ஓட்டலை விட்டு கோபத்தோடு வெளியேறிவிட்டாராம். அலறி ஆடிப்போன புரடக்ஷன் மேனேஜர், தயாரிப்பாளரின் அனுமதியோடு பக்கத்திலேயே இருக்கும் பிரமாண்ட ஓட்டல் ஒன்றை காட்ட, ம்… இது ஓ.கே என்றாராம் ரகசியா.

இவரது கீரின் சிக்னல் கிடைக்க நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் எக்ஸ்ட்ரா பில்லை கிழிக்கிறாராம் தயாரிப்பாளர். இப்ப சொல்லுங்க… இவரை எவ்வளவு சீக்கிரம் பேக்கப் பண்ணினால் யூனிட்டுக்கு நல்லது?

Rahasiya ready to pinch but not ready for ‘kiss’

Few days ago we wrote a story about how Rahasiya was rushed out of the shooting floors on hearing that Ganja Karuppu would kiss her in a scene, for the film Velmurugan Borewells, directed by Gopi, and produced by Ganja Karuppu himself. Smothering the hurdle, director Gopi managed to convince Rahasiya and continued the shoot.

Now it is her turn to pose the hurdle to the producer Ganja Karuppu, by way of paying the bills for her stay, as well as that of her mother and her makeup man. She refused a hotel booked earlier saying it was below her dignity to stay there and asked them to book rooms in a costlier hotel, which cost the producer an addition sum of Rs.10,000 a day.

The makers of the film should know that imports from other states will always pinch the purse and dictate. It is tragic that Ganja Karuppu could not do a ‘kissing’ scene but spends hefty sum on the person?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சந்தானம் வீட்டில் ரெய்டு நடந்தது ஏன்? – மனம் கொள்ளா பேராசையும், கார் ஆசையும்!

சந்தானத்தின் சுக்கிர திசையில் பன்றியை விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருக்கிறது அவரது சுற்றமும் சூழலும். ஒருபுறம் வடிவேலு மறைமுகமாக இவரை காய்ச்சிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் இவரது ‘க்ரீன்’வீச்சு...

Close