என்னது…? மயிலுக்கு இவரு ஜோடியா?

ஒரு காலத்தில் பெரிய இயக்குனர்களாக கொண்டாடப்பட்ட எவரும் நடிகர்களாக மாறிய நேரத்தில் ‘அட கண்றாவியே’ என்று கலங்கதான் வைத்திருக்கிறார்கள். அதுவும் கே.பாலசந்தரும், பாரதிராஜாவும் நடிகர்களாகவும் களமிரங்கிய ரெட்டச்சுழி, ‘அவ்ளோ பெரிய இயக்குனர்களாக இருந்தும் நடிக்கவே வரலியேப்பா இவங்களுக்கு’ என்கிற விமர்சனத்தையே பெற்று தந்தது. அதற்கப்புறம் அவர்கள் சும்மா இருந்தாலும், இவர்கள் விட்டால்தானே?

உத்தம வில்லனில் நடிக்கிறாராம் பாலசந்தர். கமல் படம் என்பதால் எதிர்பார்க்கிறோம். பாண்டியநாடு படத்தில் பாரதிராஜா தப்பித்துக் கொண்டார். இனிமேலும் அவரை பல படங்களில் நடிக்க வைக்கிற முயற்சி தொடர்கிறது. நம்ம ஆடுகளம் நரேனை நடிக்க வைத்தால் ஏழெட்டு லட்சத்தில் முடிந்துவிடும். அதே கேரக்டருக்கு பாரதிராஜா என்றால் குறைந்தது எண்பது லட்சம் ஆகிவிடுகிறதாம். இருந்தாலும் தீ மிதிக்க ஆசைப்படுவதுதானே பக்தர்களின் இயல்பு?

ஜி.வி.பிரகாஷ் மீண்டும் ஹீரோவாக நடிக்கவிருக்கும் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா ’ படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கப் போகிறாராம் பாரதிராஜா. அவருக்கு ஜோடியாக நடிக்க மயிலு ஸ்ரீதேவியிடம் கேட்டிருக்கிறார்கள். அவரும் சரி என்று சம்மதித்திருக்கிறாராம்.

ஸ்ரீதேவி என்ற இங்கிலீஷும், பாரதிராஜா என்ற விங்கிலீஷும் சேர்ந்து இங்கிலீஷ் விங்கிலீஷ் ஆகட்டும். வேணாங்கல… ஆனாலும் பாரதிராஜாவுக்கு மயிலா என்கிற பேரதிர்ச்சி மயிலு ரசிகர்களுக்கு இல்லாமலிருக்காது.

Mayilu to pair Bharathiraja in GV Prakash’s 2nd film

Music composer GV Prakash has signed yet another film titled Nayanthara Illena Trisha, even before his debut film Pencil is yet to be released. The film will be directed by debutant Adik and produced by Rebel Studios which is producing currently Vijay Sethupathi’s film Mellisai. It is heard that director Bharathiraja has been roped in to play an important role in the film. The recent success of the director in Pandianadu has emboldened the makers of NIT to cast Bharathiraja in the film. It is also said that the makers have also approached veteran actress Sridevi to pair Bharathiraja in the film, and she has also seems to have given in principle consent.

Well, we all know how good Sridevi as an actor but pairing with Bharathiraja may not go down well with Sridevi’s fans.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க…?

‘வந்த வேலையை ஒழுங்கா செய்யலேன்னா, சொந்த வேலையை பார்த்துட்டு போ’ என்று விரட்டிவிடுகிற மனப்பக்குவம் தமிழ்சினிமாவில் ஒருவருக்கும் இல்லை. இந்த மைனஸ்தான் ஆடாத ஆட்டம் போடும் பலரையும்...

Close