என்னய்யா ஊரு இது? கே.பாக்யராஜ் கலகலப்பு

‘தமிழ்த்தாய் வாழ்த்து, கொஞ்சம் எல்லாரும் எந்திரிங்க’ என்று தொகுப்பாளர் சொன்ன பிறகுதான் எழுகிற வழக்கம் நமக்கு. அப்படி எழுந்த பின்பு ஒலித்தது வழக்கமாக நாம் கேட்கும் வாழ்த்தல்ல… முற்றிலும் வேறு ஸ்டைலில் வேறு வரிகளில் அமைந்தது என்றால் எப்படியிருக்கும்? கொஞ்சம் குழம்பிதான் போனார்கள். அது மலேசிய தமிழர்களுக்கான தமிழ்த்தாய் வாழ்த்தாம். (தமிழ், உலகம் முழுக்க ஒண்ணுதான் அண்ணாச்சி…) இருந்தாலும் பொறுமை காத்த நம் அன்பு உள்ளங்களுக்கு நன்றி சொல்லி நிகழ்ச்சியை தொடங்கினார்கள். ஏனென்றால் பாடலும் அவ்வளவு நீளம்.

படம்- ‘கௌதம் கனி கிரேஸ்’
நிகழ்ச்சி- அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா.

மலேசியாவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் கே.பாக்யராஜ் நடித்திருக்கிறார். அவருக்காக மொத்த கூட்டமும் காத்திருக்க, இண்டியன் பஞ்சுவாலிடிபடி ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார் அவர். மலேசியாவிலேயே இருந்து படத்தில் நடித்திருந்தாலும் இந்தியா வந்தால் யாரும் ரிப்பேர் ஆகிவிடுவது சகஜம்தானே? நல்லவேளையாக அவர் வரும் வரைக்கும் காத்திருக்காமல் பாடல்களை ஒளிபரப்பினார்கள்.

மலேசியாவுக்கு இலவசமாக ஒரு ட்ரிப் அடித்ததை போல திருப்தி. அவ்வளவு அற்புதமாக அந்த லொகேஷன்களை திரையில் வடித்திருந்த ஒளிப்பதிவாளருக்கு முதல் பாராட்டுகள். மலேசிய தமிழர்களின் படம் என்பதால் அநாவசிய விரசங்களுக்கு இடம் இல்லை. பாடல்கள் அவ்வளவு நீட்.

பாடல்களை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசும் போது தன் மலேசிய அனுபவத்தைக் கூறினார்

“நான் இந்தப் படத்தில் நடிக்கப் போகும் போது ஒரு நடிகராகப் போனேன். வரும் போது ஒரு உறவினராக திரும்பி வந்தேன். இந்த முழுப்படமும் மலேசியாவிலேயே எடுத்தார்கள். அங்கே போனபிறகு நான் சொந்தக்காரனைப் போல ஆகிவிட்டேன். அவர் ஒரு தயாரிப்பாளர் நான் நடிகர் என்கிற உணர்வே இல்லாமல் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைத்து அன்பும் பாசமும் காட்டினார்கள். அப்படி உபசரித்துக் கவனித்துக் கொண்டார்கள். தயாரிப்பாளரிடம் வேலை பார்ப்பவர்களும் முதலாளி போலவே பொறுப்பாக இருந்தார்கள். அவர்களிடம் முதலாளி தொழிலாளி பேதமில்லை. நான் மலேசியா  நாட்டைப் பார்த்து மூன்று விஷயங்களில் பொறாமைப் பட்டேன்.

‘ஒன் மலேசியா’ என்பதான் அவர்களது தாரக மந்திரம். அங்கே எல்லாரும் மலேசியன் என்கிற ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். நம் தமிழர்களும் அவர்களுடன் இரண்டறக் கலந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள்.  இன்னொரு விஷயம் அங்கு நள்ளிரவு 3 மணிக்குப் போனாலும் கடைகள் திறந்திருக்கின்றன. சாப்பாடு ஓட்டல்கள் திறந்திருக்கும். அங்கும் ஒரு கூட்டம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். எந்த உணவுக்கும் பஞ்சமில்லை.என்னய்யா ஊரு இது விடிய  விடிய சாப்பிடறாங்க என்று ஆச்சரியப் பட்டேன்.

மூன்றாவது விஷயம் அங்கு மூணுநாளைக்கு ஒரு முறை நாலு நாளைக்கு ஒரு முறை  மழை பெய்கிறது. எனக்கு பொறாமையாக இருந்தது. இது மாதிரி நம் நாட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு எவ்வளவு போராட்டம் வேலை நிறுத்தம் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது! அவர்கள் நாட்டை நினைத்தேன் பொறாமையாக இருந்தது. இதுமாதிரி படங்கள் வெற்றி பெற்றால் மேலும் படங்கள் வரும். இரு நாட்டு உறவும் வலுப்படும்” என்றார் பாக்யராஜ்.

மலேசியா ‘மின்னல்’ பண்பலை பொன். கோகிலம் தொகுத்து வழங்கினார். தயாரிப்பாளர். சிவா.ஜி நன்றி கூறினார்.

Gautham, Kani, Grace audio launched

Makers of Gautham Kani Grace, a Tamil film produced and shot entirely in Malaysia have launched the audio of their film in Chennai. K. Bhagyaraj has played an important role in the film. The songs were released on the screen for the press and others. The songs were recorded in the picturesque locations of Malaysia.

Speaking on the occasion, actor-director K. Bhagyaraj recalled his experience in Malaysia during the shoot of the film. He said that everyone in the unit right from the producer and his family to the last person of the unit have taken very good care of him with love and affection, which made him to become one of their family members.

He also said that he was jealous of Malaysia for 3 reasons; first and foremost everyone in Malaysia including Tamil population is proud of their country and expressed they are Malayans first. Second, shops including eateries and restaurents are open throughout the night, and one can have any type of food even at 3 am. Third, in Malaysia rains for every three-four days, thus have no water problem. If rain comes like-wise in Tamil Nadu also there will not be any water problem for agriculture as well as domestic use, he elaborated.

He wished that film industry in Malaysia and Tamil Nadu will flourish if they unite in producing the films.

Journalist, ‘Minnal’ Pon. Ramalingam, anchored the event. Producer G. Siva thanked the guests.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
OKMK- Oru Kannuyum Moondru kalavanigalum trailer

http://www.youtube.com/watch?v=IhEsiTujRos

Close