என்னை கொல்வதாக மிரட்டுகிறார்கள்… இசைப்பிரியாவின் கதையை படமாக எடுத்த கணேசன் குமுறல்!

தமிழகத்தில் போர்க்களத்தில் ஒரு பூ என்ற படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்துவிட்டது. இலங்கை ராணுவத்தினரின் வன்முறை காரணமாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றைதான் படமாக்கியிருக்கிறார் கு.கணேசன். இவர் இலங்கை தமிழரல்ல. படம் இங்கு தடை செய்யப்பட்டாலும் ஜெனிவாவில் அக்டோபர் 1 ந் தேதி படம் திரையிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அவர் அனுப்பிய பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது-

இந்தியாவில் தடை செய்யபட்ட திரைப்படம் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அரங்கத்தில் அக்டோம்பர் 1ம் தேதி மதியம் ஒரு மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக கடந்த ஒரு வாரமாக நான் பல நாட்டு மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பரப்புரை செய்து கொண்டிருக்கிறேன்.

தமிழக முதல்வர் அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் ஒரு மனதாக இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய் வரலற்று தீர்மானத்தை நீக்க வேண்டுமேன்று டெல்லி தணிக்கை குழு கூறியிருந்தது. அவர்கள் சொன்ன காட்சியை நீக்காமலே இப்படம் ஜெனிவாவில் திரையிடப்படுகிறது. இது ஒருபுறமிருக்க ஒரு சிலரால் எனக்கு கொலை மிரட்டல்களும் இந்த படத்தை திரையிட்டால் கொல்வோம் என்றும் போனில் மிரட்டுகிறார்கள். எனக்கு என் உயிரை பற்றி கவலையில்லை நியாத்துக்காக மனித நேயத்துக்காக குரல் கொடுப்பவர்கள் எனக்கு ஆதரவு அளித்தால் போதும்.

போர்க்களத்தில் ஒரு பூ பட இயக்குனர் கு.கணேசனின் அலைபேசி எண்- 0041779501988

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கத்துக்குட்டி திரைப்படத்துக்கு இரண்டு வாரங்களுக்கு தடை! என்ற செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். – வைகோ வேதனை!

கத்துக்குட்டி திரைப்பட தடை அகல்வதே நல்லது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் நான்...

Close