என்னை த்ரிஷா பாராட்டுனாங்க… – விஜய் சேதுபதி பெருமிதம்

ஆங்காங்கே கொஞ்சம் தாறுமாறான செய்திகள் வர ஆரம்பித்ததும், ‘ஐயா பிரஸ் மாருங்களா…’ என்று அவர்களை சந்தித்து தனது ‘வந்ததும் வென்றதும்’ கதையை அவிழ்த்துவிட ஆரம்பித்தார் விஜய் சேதுபதி. ‘இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா’ படத்தை ஹிட் ரேஞ்சிலேயே வைத்து பேசியது அவரது தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இருந்தாலும், அவர் கூறிய பல விஷயங்கள் விஜய் சேதுபதி இன்னும் பல காலத்துக்கு ரேஸ் குதிரையாக இருப்பார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘இன்னும் சின்ன சின்ன இயக்குனர்கள் படங்களிலேயே நடிச்சுட்டு இருக்கீங்களே, பெரிய டைரக்டர்கள் யாரும் உங்களை அழைத்து பேசலையா, கவுதம் மேனன் கூடவா பேசல?’ என்ற கேள்விக்கு கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொன்னார் விஜய் சேதுபதி. ‘ஆமாங்க. கவுதம் சார் பேசினார். இன்னும் நிறைய டைரக்டர்கள் பேசிகிட்டு இருக்காங்க’ என்று. அடுத்தடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள், நடிக்க கமிட் ஆகியிருக்கும் படங்கள் என்று பேச ஆரம்பித்தவர் கடைசிவரை ‘சங்குதேவன்’ பற்றி பேசாமலே போனதால், பலரது கவனமும் அந்த படத்தின் மீதே இருந்தது. ‘என்னாச்சு சங்குதேவன்? என்று கேட்டேவிட்டார்கள்.

அதுவா? கொஞ்ச நாளைக்கு ஸ்டாப் பண்ணி வச்சுருக்கோம். (ஐ…டிராப் ஆயிருச்சு என்பதை கூட எவ்வளவு நாகரீகமா சொல்றார் பாருங்க) என்னோட அடுத்த ரிலீஸ் ரம்மி. அதற்கப்புறம் பண்ணையாரும் பத்மினியும் என்றவர், மறக்காமல் மெல்லிசை என்ற படத்தையும் குறிப்பிட்டார். லிஸ்ட்டில் அதுவும் இருக்காம்.

‘நடிகைகளில் உங்க நடிப்பை யாரெல்லாம் பாராட்டியிருக்காங்க?‘ நடிகையின் ஸ்டில்லை வைத்தே நியூஸ் எழுதி பழக்கப்பட்ட பலருக்கும் இந்த கேள்விதான் ஆறுதல். ‘ம்…. நிறைய பேரு பாராட்டியிருக்காங்க. த்ரிஷா, சமந்தா, சித்தார்த் மூணு பேரும் பாராட்டியிருக்காங்க’ என்றார் விஜய் சேதுபதி. நல்லா வளர்ந்து வர்ற நேரத்துல எதுக்கு சொந்தப்பட தயாரிப்பு அது இதுன்னு ரிஸ்க் எடுக்கிறீங்களே என்ற இன்னொரு கேள்விக்கு விஜய் சேதுபதி சொன்ன பதில், யதார்த்தம். ‘சார்… நானெல்லாம் ஹீரோவாவேன்னு நினைச்சுக் கூட பார்க்கல. இவ்வளவு கொடுத்த சினிமாவில் இதையும் செய்வோமேன்னுதான். பட், இந்த படத்தை பர்ஸ்ட் காப்பி பேஸ்ல நான் எடுத்துக் கொடுக்கிறேன். அவ்வளவுதான். பணம் போடுறதெல்லாம் ஜே.எஸ்.கே ங்கிற தயாரிப்பு நிறுவனம்தான். எனக்கு அதுல எங்கேர்ந்து வந்தது ரிஸ்க்?’ என்றார்.

எந்த இம்சையும் சொல்லிட்டு வர்றதில்லங்க சுமார் மூஞ்சு குமார்…

Trisha, Samantha and Siddharth appreciated me wholeheartedly – Vijay Sethupathi

Vijay Sethupathi who met the press announcing the success of his latest hit Idharkuthane Asapattai Balakumara and shared his thoughts and working in the industry. The press meet was very casual in a way, Vijay answered the questions with tongue-in-cheek style. He went on to explain how ‘IAB’ is doing good at the BO, and also about his upcoming films. Rummy will be his next film due for release, Pannayarum Padminiyum will be next and Mellisai will be after that, he goes on to enumerate his films ready for relase. He was totally forgotten about his own production, Sangudevan. When asked why he ventured in production, he answered so casually saying he never dreamt of becoming a hero in films. Having did that, he thought he could give cinema some thing back, and hence he ventured into Sangudevan. He also said, his risk with the film is upto the level of taking the first copy, after which JSK Productions will take it up from there, indicating there won’t be any loss to him in the venture. When asked if any of his colleagues or heroines appreciated his performance in the films, he revealed that Trisha, Samantha and Siddharth appreciated him whole-heartedly.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜன்னல் ஓரம்- பாடல் வெளியீட்டு விழாவில் மொக்கை போட்ட பிரபலங்கள்…

கரு பழனியப்பனின் ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கத்தில் நடந்தது. அன்று காலையில் இருந்தே சென்னை நகரமெங்கும் பஸ்சில் சுற்றி, பஸ்...

Close