என்ன எழவெடுத்த காதல்டா இது? -கமலே வியந்த புதிய படம்!

ஒரு மேடையில் பாலசந்தரையும், பாரதிராஜாவையும் வைத்துக் கொண்டே இன்னொரு புது டைரக்டரை பார்த்து ‘இவர் வருங்கால பாலசந்தர்’ என்றும் ‘வருங்கால பாரதிராஜா’ என்றும் பாராட்டினால் எப்படியிருக்கும்? ஒருவேளை அந்த படத்தின் பாடல் காட்சிகளை பார்க்காமலிருந்தால் உடம்பெல்லாம் எரிந்திருக்கும். நல்லவேளை, பார்த்தோம்… அதனால் உடம்பெல்லாம் குளிர்ந்தது நமக்கு.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘நாளைய இயக்குனர் ’ என்கிற நிகழ்ச்சியில் இவர் இயக்கிய ‘மனது’ என்ற குறும்படம் வெற்றி பெற்றது. பதினைந்து நிமிடங்கள் ஓடிய அந்த படத்தை ‘விழா’ என்ற பெயரில் ஒரு திரைப்படமாக எடுக்க துண்டியவர் டைரக்டர் இராம.நாராயணன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் புது இயக்குனரான பாரதி பாலகுமாரனை இப்படி வர்ணித்தது விழா அரங்கம்.

‘நானே இதுவரைக்கும் நினைச்சு பார்க்காத ஒரு கதை களத்தை கையில் எடுத்திருக்கான் இந்த பையன்’ என்று பாராட்டினார் டைரக்டர் பாரதிராஜா. அப்படியென்ன களம்? எழவு வீட்டில் உருவாகி அதே நிகழ்வுகளில் வளரும் காதல் பற்றிய படம்தான் இது. பறையடிக்கிற தொழில் செய்யும் ஹீரோ. எழவு வீட்டில் ஒப்பாரி வைக்கும் அப்பத்தாவுக்கு துணையாக வருகிற ஹீரோயின். இவர்களுக்குள் நடக்கிற காதலை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார் பாரதி பாலகுமாரன்.

சாம்பிளுக்கு ஒரே ஒரு காட்சி. பிணத்தை அமர வைத்து வாய் மற்றும் தாவங்கட்டையை தலையோடு சேர்த்துக் கட்டுவார்கள் அல்லவா? அதை ஒரு பாடல் காட்சியில் வைத்திருக்கிறார் பாரதி. அந்த கட்டை கட்டும்போதே காதலிக்கு தாலி கட்டுவதாக நினைத்துக் கொண்டு மூன்று முடிச்சு போடுகிறான் ஹீரோ. எதிரில் நாணத்தோடு ஹீரோயின். இது போதாதென பின்னணி இசையில் மங்கள இசையை ஒலிக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

அப்படியே இன்னொரு பாடல் காட்சி. ஊரில் எழவே விழவில்லை. யாராவது மண்டையை போட்டால்தான் அந்த எழவு வீட்டுக்கு காதலி வருவாள். ஏக்கம் தாங்க முடியாமல் ஊரிலிருக்கிற வயதானவர்களையெல்லாம் தனித்தனியாக பார்த்து ‘செத்துப்போ’ என்று பாடுகிறான் ஹீரோ. பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். ட்யூன் போட்ட ஜேம்ஸ் வசந்தன் அந்த வயசானவங்களை செத்துப் போ என்று சொல்வதற்காக ரொம்பவே வருந்தி, இந்த வரியை மாற்ற முடியுமா என்று கூட யோசித்தாராம். இப்படி போகிறது படத்தை பற்றிய சுவாரஸ்யங்கள்.

முன்னதாக திரையிடப்பட்ட ஒரு க்ளிப்பிங்ஸ்-ல் டைரக்டரான பாரதி பாலகுமாரனை கலைஞானி கமல் பாராட்டிக் கொண்டிருந்தார். ‘என்ன எழவெடுத்த காதல்டா இதுன்னு சொல்வாங்க. ஆனால் எழவு வீட்டிலேயே ஒரு காதலை யோசிச்சாரு பாருங்க. சுவாரஸ்யமா இருக்கு’ என்றார்.

படத்தின் ஹீரோவாக மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கிறார். இப்போது ஆள் வளர்ந்து மிஸ்டர் மகேந்திரன் ஆகியிருக்கிறார். ஹீரோயின் மாளவிகா மேனன். ‘நான் குழந்தை நட்சத்திரமா நடிச்சுருக்கேன். அது முடிஞ்சு போச்சு. இனி வேற ஆள் நான். இந்த நாளுக்காகதான் இத்தனை வருஷமா காத்திருந்தேன்’ என்று கண்கலங்கினார் மகேந்திரன்.

சில படங்களில் மட்டும்தான் மனசு லயிக்கும். ‘விழா’ அப்படிப்பட்ட படம். இது தியேட்டர்களுக்கு வரும்போது, தமிர்சினிமாவே விழாக்கோலமாக மாறியிருக்கும். அதில் சந்தேகமேயில்லை!

Vizha director Balakumaran is future Balachandar says Kamal

Director Balakumaran who is debuting in big screens with Vizha is in cloud nine, as accolades and praises were pouring on him from none other than the stalwarts of Tamil film industry. Yes, director Balachandar, director Bhrathiraja and Kamal were vocal in praising the young director for his film  Vizha.

Bharathiraja said that the young director has got the guts, which I have not even thought of, to essay a story of ‘love’ out of a mourning house. A very bright future awaits him, praised 16 Vayathinile director. Kamal in his speech dwelt how the young director is seeking ‘love’ in ‘death’, is a novel way to tell that ‘love’ exists even in ‘death’.

What is so special about this film? Who is the Balakumaran?

To answer the above, let us give an example of a scene from the film. The hero is ‘drum’ beater (parai) in front of those houses where a death has happened. The heroine is a singer (oppari) in those ‘death ceremonies’ and how love blossoms and between them. In one scene Balakumaran brings to the fore how love afflicted hero imagines to tie the knot on her lover, when he actually ties the dead person’s head with chin (as is common custom here), with James Vasanthan providing ‘ketti melam’ amidst the oppari. This particular scene would have made the stalwarts proud of the debutant.

Balakumaran was the winner of a short film titled ‘Manadhu’, in the Nalaya Iyakkunar reality show of Kalaignar TV. Says he, “When I got the opportunity to make this short film into a feature film, I developed the script to include a love angle. Hence, Mahendran, who did the original role in the short film, was paired with Malavika Menon in the film version. The climax is th most important and I would like to keep it suspense for the time being. Does death give a lif to their love? Is there a happy ending or darkness as in death? One has to watch the film for it” says Balakumaran.

Ironically Balakumaran has given the film title as Vizha, as for others it was mourning at death occurred homes, it is a ‘festival’ for the hero, perhaps, as he would be able to see his lady love.

Hope the audience too would give a ‘thumbs up’ to Balakumaran and his Vizha.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஓ… அதுவா? பிங் பாங்க்ல கிடைக்கும் போங்க…! -பாங்காக் பயண அனுபவங்கள் -4 -ஆர்.எஸ்.அந்தணன்

சதீஷின் விரல்கள் ஏன் நடுங்கின என்பதை அறிந்து கொள்ள நான் ஆர்வப்படவில்லை. ஏனென்றால் காலை டிபனுக்கே கரப்பான் பூச்சியை வறுத்துப்போட்ட பயலுகளாச்சே இவனுக! ஆல்பத்துக்குள்ளே என்ன வச்சுருப்பானுங்கன்னு...

Close