‘என் கோவணம் அவிழ்ந்தா கூட பரவாயில்ல….’ – கமல் காரசாரமான பேச்சு

பழைய ரத்தினங்களுக்கு ‘பாலீஷ்’ போடுகிற வேலையை கச்சிதமாக ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் வெளியாகிற அதே நாளில் ரஜினியும் கமலும் இணைந்து நடித்த மற்றொரு படமான ‘16 வயதினிலே’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தினார்கள்.

சென்னை கமலா திரையரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட, கமல் வந்தாலே கூட்டம் தாங்காது. கூடவே ரஜினி வேறு. என்னாகப் போகிறதோ? முழுக்கை சட்டை கிழிந்து ரவிக்கையானாலும் ஆச்சர்யமில்லை என்கிற அச்சத்தோடு தவித்தனர் நிருபர்கள். நல்லவேளை… அப்படியெல்லாம் எதுவும் ஆகவில்லை. போலீஸ் உதவியுடன் வடிகட்டிதான் உள்ளே அனுப்பப்பட்டார்கள் ஆடியன்ஸ்.

உள்ளே நுழையும் போதே ‘ஸ்பிரிட்சுவல் ரிலீஸ்’ என்றொரு காகிதத்தை கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. பிரித்தால், ‘பரம பிதாவான ஏசு கட்டாயம் உங்க வீட்டுக்கு வருவார், எதுக்கும் நாலு இட்லியும் நல்ல கெட்டி சட்னியுமா சேர்த்து பிரிப்பேர் பண்ணி வைங்க’ என்கிற லெவலுக்கு உள்ளே ஒரு நோட்டீஸ். சினிமா விழாவுக்கெல்லாம் ஏசு வர ஆரம்பித்தால் நிலைமை என்னாவது? அப்புறம்தான் தெரிந்தது… இந்த நோட்டீஸ்களை வழங்கிய பெண்மணி 16 வயதினிலே தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் மகள் என்று. கடைசியில் நன்றி சொல்வதற்காக மைக்கை பிடித்த இவர், ரஜினியையும் கமலையும் வைத்துக் கொண்டு ‘வேதாகமத்தில் சொல்லியிருப்பது என்னவென்றால்…’ என்று நீண்ட பிரசங்கம் செய்தது பிரமாதம். கருப்பு சட்டை கமல் ஒரு சின்ன புன்னகையோடு இவற்றையெல்லாம் ரசித்துக் கொண்டிருக்க, அந்த பெண்மணி பேசுவதை பயபக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தார் ஆன்மீக ரஜினி.

கமல் பேச்சில் எவ்வித தயக்கமும் இல்லை. 16 வயதினிலே படத்தில் நடிக்கும் போது என்னை மட்டும் ஒரு இடத்தில் தங்க வச்சுருந்தாங்க. ரஜினியெல்லாம் எங்க தங்கியிருந்தார்னு எனக்கு தெரியவே தெரியாது. ஷுட்டிங்குக்கு கரெக்டா வருவார். அப்புறம் எங்க போவார்னு கூட தெரியாது. எல்லாரும் கிடைக்கிற இடத்துல தங்கிகிட்டாங்க. இந்த படம் நல்லாயிருக்கு. ஹிட்டாகும்னு நான் சொன்னப்போ ஒரு விநியோகஸ்தர், அதெல்லாம் ஓடாதுன்னாரு. அப்புறம் படம் வெளிவந்தது. நான் கார்ல போயிட்டு இருந்தேன். ஸ்கூட்டர்ல என் காரை தாண்டிப் போய், ‘அவுட்ட்ட்டு’ன்னு கத்திட்டு போனாரு. அப்புறம் வள்ளூவர் கோட்டத்துல கார் நின்னுச்சு. கண்ணாடிய இறக்கி ‘கோவணம் அவுந்துருச்சுல்ல’ன்னு சத்தம் போட்டு சிரிச்சாரு.

என் கோவணம் அவிழ்ந்தா கூட பரவாயில்ல. தயாரிப்பாளர் கோவணம் அவிழ்ந்திருச்சுன்னா அவரு என்னாவாருங்கிற கவலைதான் எனக்கு. ஆனால் மக்கள் அவருக்கு தங்கத்துல கிரீடமே செஞ்சு வச்சுட்டாங்க.

நானும் ரஜினியும் இத்தனை வருஷமா நண்பர்களா இருக்கோம். எங்களுக்கு நடுவுல இடைத்தரகர்கள் பலர் இருந்தும் நாங்க அதே நட்போட இருக்கோம். அதுக்கு காரணம், நாங்க ரெண்டு பேரும் எங்க நட்பு மேல வச்சுருக்கிற நம்பிக்கை மட்டும்தான் என்றார் கமல்.

ரஜினி பேசுகையில், “தயாரிப்பாளர் ராஜ்கண்ணு 16 வயதினிலே படத்தின் வெற்றிக்கு பிறகு என்னை சந்திக்கவே இல்லை. என்னிடம் கால்ஷீட் கேட்டு கூட வந்ததில்லை அவர். திடீர்னு பதினைஞ்ச நாளைக்கு முன்னாடி ராஜ்கண்ணு சார் பேசுனதா சொன்னாங்க. உடனே வரச்சொன்னேன்.

என்னை சந்தித்து 16 வயதினிலே படத்தை டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் செய்யப் போவதாக சொல்லி டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். அவரிடம் நான் இந்த படத்தில் கிடைக்கும் பணம் யாருக்கு போய் சேரும் என்று கேட்டேன். எனக்குத்தான் என்றார். அப்படியெனில் நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றேன்.

ராஜ்கண்ணு சினிமாவில் மரியாதைக்குரியவர். சுயமரியாதை உள்ளவர். கர்வம் கிடையாது. 16 வயதினிலே படம் எடுத்தபோது நன்றாக ஓடாது என்றனர். ஆனால் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த ராஜ்கண்ணு, அன்றைக்கே சொந்தமாக ரிலீஸ் செய்தார். கமல் அப்போது பெரிய நடிகராக இருந்தார். படம் நன்றாக ஓடியது சந்தோஷமாக இருந்தது. அதுமட்டுமல்ல, ராஜ்கண்ணு எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்ல ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்.

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் சிக்கலைச் சந்தித்த போது, ‘பதினாறு வயதினிலே படத்தை மறுபடியும் வெளியிட்டு அதில் வரும் பணம் முழுவதையும் கமல்ஹாஸனுக்கே தரப் போகிறேன், என்று சொன்னவர் ராஜ்கண்ணு. தான் கஷ்டத்திலிருந்தாலும், அடுத்தவர் கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளாத மனம் அவருக்கு.

தற்போது 16 வயதினிலே மீண்டும் ரிலீசாக உள்ளது. இந்த படம் நன்றாக ஓட வேண்டும் என்று வேண்டுகிறேன். மனிதர்களுக்கு கஷ்டகாலம் வரும். கெட்ட காலம் வரும். ஆனால் அது நிரந்தரம் இல்லை. பழைய படங்கள் மீண்டும் ரிலீசுக்கு வருவது வரவேற்கத்தக்கது. இந்த படத்தையும் ஜெயிக்க வைக்க வேண்டும்,” என்றார்.

எப்போதுமே புலிப்பாய்ச்சல் பாய்கிற பாரதிராஜா, இந்த மேடையில் பேசியபோது பலருக்கும் கண்ணீரே வந்துவிட்டது. விழாவில் 16 வயதினிலே படத்தில் பணியாற்றிய கே.பாக்யராஜ், அப்படத்தில் பணியாற்றாத நடிகர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இசைஞானி இளையராஜா மட்டும் வரவில்லை. ‘இசைஞானி இங்கு வராததை வருத்தமாக உணர்கிறேன்’ என்றார் பாரதிராஜா.

Kamal, Rajini brought nostalgia at 16 Vayathinile digital version Trailer launch

The trailer launch for the digital re-release of 16 Vayathinile was held at Kamal Theatre with Kamal and Rajini participating in the event. When speaker after speaker narrated instances about the film, it brought nostalgia to the leading heroes of Indian Cinema. Kamal, meanwhile, spoke on how the film had to overcome a number of odds to get released. “The majority of comments that we got when making the film was that it would flop. In fact, when I was driving from the studio, a person riding a bike came up to me and said that the film will tank,” he said. His immediate fear as well as worry was how the producer would be able to withstand if its tanks, he said. Kamal also narrated how despite the existence of so many blockades, he and Rajini are still friends and the friendship thrives because of the confidence both have on ‘friendship’.  The Superstar went on a nostalgic trip when talking at the event. “During the shoot, no one would talk to me, as I was a relatively a newcomer. It was Kamal, to whom the production people went, to have a chat,” he said. Praising the film’s producer Rajkannu, he said, “When Rajkannu met me about re-releasing 16 Vayathinile a few months back, he told me that we should give away the collections to Kamal, who was at that time having difficulties in releasing Vishwaroopam. It is difficult to find such persons in our film industry.” Film director Bharathiraja, Director Bhagyaraj who worked as Bharathiraja’s assistant in the film, actor-director Parthibhan and many others participated in the event. Isaignani Ilayaraja was missing as he was away at Australia.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
16 வயதினிலே பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி- கமல்- பாரதிராஜா

[nggallery id=19]

Close