எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்சேதுபதிதானாம்….

விஜய் சேதுபதிதான் இன்றைய சூழ்நிலையில் பரபரப்பான நடிகர் என்கிறார்கள். ஆனால் எல்லா சினிமா விழாக்களிலும் அவரை அதிகம் பார்க்க முடிகிறது. யார் அழைத்தாலும் அவர்களை மதித்து அந்த விழாவில் கலந்து கொள்கிற நடிகராக அவர் இருப்பது ‘சுமார் பட்ஜெட் குமார்களுக்கு’ம் பெரிய வரப்பிர‘சாதமாக’ இருப்பதால், மூன்று வேளையும் அதே சாதத்தை அவர்கள் பரிமாறாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலையும் வந்துவிடுகிறது சமயங்களில். மேற்கு முகப்பேர் ஸ்ரீகனக துர்கா என்ற படத்தின் பாடல் வெளியீட்டுக்கும் அவர் வந்திருந்தார். படத்தின் ஹீரோயின் திவ்யா சற்று தாமதமாக உள்ளே வர, அவருக்கு முன் அங்கு அமர்ந்திருந்த விஜய் சேதுபதியை அவர் பார்த்ததும் திவ்யா கண்களில் பொங்கி வழிந்தது பரவசம். அடுத்த படத்துல எனக்கும் ஒரு சான்ஸ் தர்றீங்களா என்று கேட்பது போல பவ்யமாக அவர் முன் குனிந்து வணங்கியதை பார்க்க கோடிக் கண்கள் வேண்டும்.

முகப்பேர் ஸ்ரீகனக துர்காவுக்கு அடுத்தபடியாக அங்கு பாராட்டப்பட்டவரும், வணங்கப்பட்டவரும் கூட விஜய் சேதுபதிதான். சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார் அவர். அதில் நான் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை ஏற்பட்டுத்த மாட்டேன். மனம் புண்படும்படியும் நடந்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார். இதை அந்த மேடையில் பலரும் சுட்டிக்காட்டினார்கள். தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு அப்படி நினைக்கிற ஒரே ஹீரோ நம்ம விஜய் சேதுபதிதான். மற்றவர்களும் அவரை போல நடந்து கொள்ள வேண்டும் என்று கூற பலத்த கைத்தட்டல்.

ஒருகாலத்தில் பக்தி பாட்டு மெட்டையே குத்துப்பாட்டுக்கு போட்டு புதுமை படைத்த தேனிசைத் தென்றல் தேவாதான் இப்படத்திற்கு இசை. ஒரு காலத்துல ஆண்களுக்கு குத்துப்பாடல் போட்டோம். பெண்களுக்கு பக்தி பாடல் போட்டோம் என்று அவர் ரைமிங்காக கூற அதற்கும் கைதட்டல்கள் எழுந்தன.

பொதுவாக இதுபோன்ற பிரஸ்மீட்டுகளுக்கும் விழாக்களுக்கும் வருகிற நிருபர்களுக்கு அப்படம் தொடர்பான புகைப்படங்களும், செய்தி தொகுப்பும் தருவது வழக்கம். இந்த விழாவில் ஸ்ரீகனக துர்காவுக்கு அர்ச்சனை செய்யப்பட்ட பிரசாதங்களும், தேங்காய் பழங்களும் வழங்கப்பட்டது புதுமையாக இருந்தது. எல்லாம் ஸ்ரீகனகதுர்கா ஆசிர்வாதம்.

Vijay Sethupathi is next  MGR says Kayaar

Recently Vijay Sethupathi participated in the audio launch of Mugappair Sri Kanakadurga. Vijay does not show his ego and participate in every functions he has been invited. Recently he gave an interview to a weekly magazine where he said that he does not want to make loss for his producer nor insult my producer at any cost. Producers’ Council President Kayaar quoting that portion said only MGR and Sivaji have such tendency of not making loss to the producer or insulting a producer.

After a long gap Thenisai Thendral Deva has composed music for the film. He said that he had composed good spiritual numbers for the film.

2 Comments
  1. vedagiri says

    he has worked very hard to reach this place. and again unlike other current generation of actors, he doesn’t follow heroism.

  2. aaaaaaaaaaaaaaaaaaaa says

    oh

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா”படத்தின் பாடல் வெளியீட்டு விழா

[nggallery id=96]

Close