எரிச்சல் பாலா… கிசுகிசு பார்த்திபன்…. உற்சாக கமல்… ‘என்றென்றும் புன்னகை’யுடன் ஒரு விழா

பொதுமேடைகளுக்கு வந்தால் என்றென்றும் எரிச்சலோடு இருக்க வேண்டும் என யார் சொல்லிக் கொடுத்தார்களோ, ‘என்றென்றும் புன்னகை’ பட விழாவிலும் சம்பிரதாயத்துக்கு கூட புன்னகை புரியாமல் அதே எரிச்சலோடு அமர்ந்திருந்தார் டைரக்டர் பாலா. இத்தனைக்கும் அவரை வாயாற புகழ்ந்து வயிறார நிறைந்தது அந்த மேடை. ‘இந்த மேடையில இருக்கிறதுக்கு ஒரே தகுதி கமல்ஹாசனுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார் அவர்.

கமல் பேச்சில் கரை புரண்டு ஓடியது உற்சாகம். ‘‘நான் இந்த விழாவுக்கு வந்தது அன்புக்காக. வர இயலாத அளவுக்கு எல்லா இடையூறுகளும் இருந்தன. விடாபிடியாக வற்புறுத்தி அழைத்ததின் பேரில் இங்கு வந்தேன். படத்தையும் இப்படி அடம்பிடித்து சிறப்பாக எடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அடம் பிடித்து எடுத்ததால்தான் காலதாமதம் ஏற்பட்டு இருக்கும்.

இந்த காலதாமதம் கூட வெற்றிக்கு வழி வகுக்கும். இதுதான் வேண்டும் என்று நம்புவதே அபூர்வம். என் சொற்ப அனுபவத்தில் கூறுகிறேன். நான் நம்பி எடுத்த படங்கள் 90 சதவீதம் தோற்றதே இல்லை என்றார் கமல்.

சொல்றவங்க சொல்லிகிட்டேதான் இருப்பாங்க என்று புறம் பேசுகிற கூட்டத்தையும் போகிற போக்கில் போட்டு தாக்கினார் கமல். நான் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் குள்ளமாக நடிக்கிறேன்னு சொன்னதும், நீயே குள்ளமாதான் இருக்கே. இன்னும் குள்ளமா நடிக்கணுமா என்றார்கள். இந்த மாதிரி கேரடர்களில் அமிதாப்பச்சன் நடிச்சாதான் சரியா இருக்கும்னு சொன்னாங்க. தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துக்கும் நடுவுல மெல்லிய ஒரு கோடுதான் இருக்கு. தன்னம்பிக்கை முக்கியம் என்று கூறிய கமல், அடிக்கடி கைதட்டிய ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

கைத்தட்டலுக்கு எப்போதுமே பலம் உண்டு. ரசிகர்களின் கைத்தட்டல்தான் நடிகர்களுக்கு உண்மையான சம்பளம். மற்றதெல்லாம் வரியாக போய்விடும் என்று கமல் பேசியது சத்தியத்திலும் சத்தியம்.

படத்தின் ஹீரோயின்களில் ஒருவரான ஆன்ட்ரியாவை பாட சொல்லி ரசிகர்கள் வற்புறுத்த, நோ… என்று செல்லமாக மறுத்துவிட்டு அமர்ந்து கொண்டார் அவர். த்ரிஷா தன்னை பற்றி வரும் அண்மை செய்திகளை பற்றி ஏதாவது புலம்புவார் என்று எதிர்பார்த்தால், அதிலும் சப்!

‘த்ரிஷாவோட சேர்ந்து நடிக்க ராணா நீயான்னு… சாரி, நானா நீயான்னு பலத்த போட்டியிருக்கு’ என்று தன் பங்குக்கு கிசுகிசுவை வலுவாக்கிவிட்டு அமர்ந்தார் நடிகர் பார்த்திபன். ஒரு சினிமா விழாவில்தான் எத்தனையெத்தனை சுவாரஸ்யங்கள்!

Jiva-Trisha starrer Endrendum Punnagai audio launched by Kamal

In a glittering function, Ulaganayakan Kamal launched the album of Jiva-Trisha starrer Endrendum Punnagai, on 24th Oct. Director Bala, Partheban, members of the Endrendum Punnagai including its crew participated in the event.

While director Bala just adorned the stage, it was Kamal’s speech which was lively and gave inspiration to everyone there. He began his speech by saying that he came for the event for the sake of ‘love’, despite the facts there were many hurdles existed not to make it to the event. He hoped that the adamency of the makers of the film will work in their favour in making the film success too. Explaining the stand, he said ‘adamency’ comes from the confidence one has. If a person is confident that his efforts would blossom only if a thing or two are added to his efforts, he would vehemently argues and get them to make his efforts successful. He also distinguished between ‘self-confidence’ and ‘over-confidence’ and how the self confident people stand always in good-stead. Andrea, Trisha and Partheban also spoke.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட ஹீரோ, கவலைப்படுகிறது குடும்பம்!

மூன்றெழுத்து இளம் ஹீரோ ஒருவர், தீராத கஞ்சா பழக்கத்தில் சிக்கிக் கொண்டார். எந்நேரமும் அது இல்லாமல் இருக்க முடியாது என்கிறளவுக்கு ‘அடிக்ட்’ ஆகிப் போயிருக்கும் அவரை, மீட்டாக...

Close