‘ எல்லா படத்துலேயும்… ’ சிவகார்த்திகேயனை விரட்டும் சென்ட்டிமென்ட்

பெரிய பெரிய ஹீரோக்களையே அல்லாட விட்டுக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் நடித்து வெளிவந்த லேட்டஸ்ட் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம்தான் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர்காரர்கள், கேண்டீன்காரர்கள், சைக்கிள் டோக்கன் போடுகிறவர்கள் வரைக்கும் ஒரே நேரத்தில் மகிழ வைத்த படம் என்கிறது புள்ளிவிபரம். இப்படி எல்லா தரப்பினரையும் ஒருசேர சம்பாதிக்க வைப்பது ரஜினி படங்கள்தான். அதற்கப்புறம் சிவகார்த்திகேயன்தான் என்கிறார்கள் கோடம்பாக்க புள்ளி விபரப் புலிகள்.

இந்த சந்தோஷத்தை நீடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கான டென்ஷன். அதற்கும் ஒரு உபாயம் வைத்திருக்கிறார்கள். எப்படி தெரியுமா? வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனே ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்த சென்ட்டிமென்ட் இனிமேல் எல்லா படத்திலும் தொடர்ந்தால் போதும். படம் பெரிய ஹிட் என்று நம்புகிறார்களாம்.

அதன் விளைவாக சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மான் கராத்தே படத்தில் ஒரு பாடலை பாடவிருக்கிறார்.

பானை ஓட்டையா இருந்தா என்ன? கொழுக்கட்டை வெந்தா சரி…

Sentiments pushe Siva Karthikeyan to croon in Maan Karate

Siva Karthikeyan’s Varuthapadatha Valibar Sangam was a phenomenal hit and has given everyone connected with film industry and theatres to get handsome earnings. In order to ensure that all those people right from film makers to theatre owners to parking owners get good dividends the makers of Siva Karthikeyan’s upcoming film, Maan Karatee, follow the same sentiments that they thought had worked good for VVS. Siva had crooned a song in VVS which the makers think is the X factor which worked in favour of the film. So they have decided to include a song which will be crooned by Siva in Maan Karate too.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் அப்படிப்பட்டவரா? சொல்லாத நன்றியும், குழப்பும் செய்தியும்

குபேரன் கொல்லைக்கதவை தட்டினாலும் சரி, தெருக்கதவை தட்டினாலும் சரி, கேஷ் பாக்ஸ் கர்ப்பிணியாகப் போவுதுன்னு அர்த்தம். குபேரனுக்குதான் அந்த மரியாதை என்றில்லை. அஜீத்தின் கால்ஷீட் கிடைத்தாலும் போதும்....

Close