எஸ்.ஜே.சூர்யா, பிரபுசாலமனுக்கு பிடித்த ‘வரியா…? ‘

தனிநபர் ஆல்பத்திற்க்கான  வரவேற்பு உலக நாடுகளில் பிரபலமாக இருக்கும் போது ஏன் இந்தியாவில் மட்டும் இல்லை , என்ற கேள்வி என்னுள் எழுந்த போது தான் இந்த கிளாஸ்மேட் ஆல்பத்தை உருவாக்கியதாக  இதன் இசையமைப்பாளரான ஜெஃப்ரே ஜோனாத்தன் தெரிவித்துள்ளார்.
மியுசிக்ஃபேக்ட்ரி நிறுவனத்தார் ஆஷிஷ் கோத்தாரி என்பவர் சோனி மியுசிக் நிறுவனத்துடன் இணைந்து , இந்த கிளாஸ்மேட் என்ற ஆல்பத்தை தயாரித்துள்ளார். இந்த ஆல்பத்தில் ”வரியா ” என்ற பாடலின் டீசர் மட்டும்
பிரபல திரைப்பட நடிகர் கார்த்தி  அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த பாடல் வரும் ஜூன் 25ம் தேதி முதல் இணையதளத்தில் (you tubeல்) வெளியாகிறது. இந்த  கிளாஸ்மேட் ஆல்பத்தை  பார்த்த எஸ் ஜே சூரியாவும், இயக்குநர் பிரபு சாலமனும் இந்த  ஆல்பத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்த ”வரியா ”பாடல் ஒரு மெலடி வகையான காதலை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்த பாடலில் பிரதாயினி என்ற மாடல் நடித்துள்ளார்,சோனி நிறுவனம் வெளியிடும் முதல் சிங்கிள் டிராக் தமிழ் ஆல்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது .இந்த ஆல்பத்துக்கு ”விடியுமுன் “ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன்  ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வரியா பாடலை  புரட்சி நம்பி என்பவர் எழுதியுள்ளார், இசான் வர்கீஸ் பாடியுள்ளார்.
இந்த பாடலை ஜெஃப்ரே ஜோனாத்தன்  இசையமைத்ததோடுமட்டுமல்லாமல்  வீடியோ ஆல்பமாகவும் இயக்கியும்உள்ளார்​
Read previous post:
சிங்காரவேலன்- பவர் சீனி சந்திப்பு ரஜினிக்கு குழிபறிக்கும் வேலை ஸ்டார்ட்? அஹ்ஹஹஹஹஹ்ஹா!!!!

லிங்கா புகழ் சிங்காரவேலன் ஒரு படத்தை தயாரிப்பதாகவும், அந்த படம் பாட்ஷா படத்தை அப்படியே ஸ்பூஃப் செய்யும் விதத்திலும் இருக்கும் என்ற செய்தியை ஏற்கனவே காற்று வாக்கில்...

Close