ஏற்காடு இடைத்தேர்தல்- 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக அமோக வெற்றி

ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா 1, 42, 771 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 64,655 வாக்குகளையும் பெற்றனர்.

வாக்குப்பதிவுக்காக தொகுதி முழுவதும் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 269 வாக்குச்சாவடிகள் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பானது.

இத்தேர்தலில் மொத்தம் 89.24% வாக்குகள் பதிவாகி இருந்தன. பதிவான அனைத்து வாக்குகளும் இன்று எண்ணப்பட்டன. இதற்காக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக்கில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 தபால் வாக்குகள்

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பதிவான 9 வாக்குகளில் 6ஐ அதிமுக கைப்பற்றியது. 2 வாக்குகள் திமுகவுக்கு கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாதது.

17 சுற்றுகள் விவரம்

முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 5126 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 2782 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

2வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 4738வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 2228 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

3வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 5087 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 3553 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

4வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 6379 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 3239 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

5 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 7770 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 3600 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

6வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 6509 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 2488 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

7வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 7842 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 4029 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

8வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 5947 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 2875 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

9வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 7848 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 3039 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

10வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 7375 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 3323 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

11வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 6956 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 3102 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

12வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 6062 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 3301 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

13வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 7147 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 2933 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

14வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 7050 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 3455 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

15வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 7071 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 3992 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

16வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 7385 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 3301 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

17வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 6986 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 2970 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

18வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 7407 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 2963 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

18 சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் சரோஜா மொத்தம் 1,22, 691 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் மொத்தம் 57,165 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

அதிமுக அமோக வெற்றி

18வது சுற்றில் அதிமுக வேட்பாளர் சரோஜா 7407 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 2963 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதைத் தொடர்ந்து மேலும் 3 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜா மொத்தம் 1, 42, 771 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 64,655 வாக்குகளையும் பெற்றனர்.

இதனால் அதிமுக வேட்பாளர் சரோஜா, 78,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

சரோஜாவின் கணவர் பெருமாள் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அவரது மனைவி சரோஜா வென்றுள்ள வாக்கு வித்தியாசம் இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிரபாகரன் கேரக்டரில் நான் நடிக்கிறேன்..! பீதி கிளப்பிய இயக்குனர்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக கூறியிருக்கிறார் இயக்குனர் வ.கௌதமன். பிரபாகரனை போன்ற மாவீரர்களின் கதையை படமாக்க வேண்டுமெனில் அதை பட்ஜெட் படமாக எடுத்தால்...

Close