ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்ததும் கையெல்லாம் உதறுச்சு… -டைரக்டர் வசந்தபாலன்

வெறும் படம் காட்டுகிற இயக்குனர்களுக்கு மத்தியில் நிஜம் காட்டுகிறவர் வசந்தபாலன். அவரது வெயில், அங்காடி தெரு இரண்டுமே தமிழ்சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாகி போனவை. அதற்கப்புறம் அவர் இயக்கிய அரவான், ரசிகர்களை அரவம் போல தீண்டினாலும் அதற்காக வசந்தபாலனின் கவுரவம் ஒருபோதும் அழிந்ததில்லை, அழிவதுமில்லை! தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘காவியத் தலைவன்’ எந்த டைப் படம்? இதை அவரே தன் வாயால் சொல்வதற்காக பிரஸ்சை கூட்டினார்.

இந்த பிரஸ்மீட்டுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் வந்து சேர, நிகழ்ச்சி நடந்த க்ரீன் பார்க் ஹோட்டல் பச்சை பசேல் ஆனது. எல்லாம் ரஹ்மானை பார்த்த குளுமைதான்.

நமக்கே அந்த குளுமை என்றால், அவரிடமே கதை சொல்லி சுச்சுவேஷனுக்கான பாடலை வாங்குவோம் என்று ஒவ்வொரு நாளும் கனவு கண்ட வசந்தபாலனுக்கு எப்படியிருக்கும்? வார்த்தைகள் ஒவ்வொன்றும் தந்தியடிக்காத குறைதான். அவர் பேசியதையெல்லாம் தொகுத்தால், ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி வசந்தபாலன் எழுதியதாக ஒரு தடித்த புத்தகமே போட்டு காசு பார்த்திருக்கலாம். அவரது அருமை பெருமைகளை அடுக்கிக் கொண்டே போனார்.

ரஹ்மான் சார் அருமையான ஹியூமன் பீயிங். அப்படியொரு இசையமைப்பாளரை பார்க்கவே முடியாது. நான் அவரிடம் கதை சொல்லப் போனபோது கையெல்லாம் நடுங்குச்சு. குரலே வரல. தடுமாறிப் போயிட்டேன். ஆனால் அவர் என்னுடைய அச்சத்தை போக்கி சகஜ நிலைக்கு கொண்டு வந்தார். நல்லாயிருக்கீங்களா? என்பது போன்ற இயல்பான வார்த்தைகளால் என்னை ஆசுவாசப்படுத்தினார். அதற்கப்புறம் கதை சொன்னேன். அந்த நேரத்தில் எதுவுமே சொல்லலே. ஆனால் ஒரு வாரம் கழிச்சு, அவரிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. ‘கிட்டப்பாவுக்கு நான் ரெடி’ என்று. இப்படி துவங்கி ரஹ்மான் பற்றி சொல்லி பேசிக் கொண்டேயிருந்தார் வசந்தபாலன். ஒரு கட்டத்தில், ஆமா… இந்த படத்தில் இன்னும் கூட டெக்னீஷியன்கள் இருக்காங்கல்ல? என்று நினைத்திருப்பார் போலும். மெல்ல நகர்ந்து சித்தார்த் வசம் வந்தார்.

சித்தார்த்துகிட்ட கதை சொல்லப் போகணும்னா இங்கிலீஷ்ல சொல்லணும், வளவளன்னு சொன்னா அவருக்கு பிடிக்காதுன்னு நிறைய எச்சரிச்சாங்க. ரொம்ப திமிரா இருப்பார்னு நினைச்சுதான் போன் பண்ணினேன். அவரோ, எங்க சார் இருக்கீங்க? நானே உங்க வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டார். இருந்தாலும் நான் அவர் வீட்டுக்கு போய் கதை சொன்னேன். இந்த படத்தில் ரஹ்மான் சார் இசையமைக்கிறார்னா அதுக்கு பெரிய காரணம் சித்தார்த்தான். அவர்தான் ரஹ்மான் சாரிடம் பேசி என்னை கதை சொல்ல வைச்சார். இந்த படத்தில் ஒரு நாடக நடிகரா அவர் வாழ்ந்து காட்டியிருக்கார். ஒரு சீன்ல வீரபாண்டிய கட்ட பொம்மனா அவர் வந்து நின்னார். நான் அசந்து போயிட்டேன் என்றார் வசந்தபாலன். (கொஞ்சம் ஓவராதான் இருக்கு, பட்… பொறுத்துக்குறோம்)

1930 களில் வாழ்ந்த கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் கதையாக இருக்கும் என்று தோன்றுகிறது. பாடல்களும் அதற்கேற்றார் போல அந்தகால ஸ்டைலில்தான் மியூசிக் போட்டிருக்கிறாராம் ரஹ்மான். ஆனால் மக்களுக்கு அலுத்துப்போகாத விதத்தில் ஒரு புது இசையை அவர் உருவாக்கியிருப்பதாக கூறினார் வசந்தபாலன். சினிமாவை நாடகம் போல எடுத்துக் கொண்டிருக்கும் சிலருக்கு மத்தியில், நாடக உலகத்தை சினிமாக்குகிற வசந்தபாலன் மீது மிகுந்த நம்பிக்கையிருக்கிறது.

கிட்டப்பாவுக்காக நாங்களும் காத்திருக்கிறோம் பாலன்…

Director Vasantha Balan opens up on Kavia Thalaivan!

Director Vasantha Balan had established his own style of film making in Kollywood. His Veyil and Angadi Theru are classics in the history of Tamil films. His upcoming film is Kavia Thalaivan featuring Siddarth and Prithviraj in the lead. He convened a pre-release press meet at Green Park Hotel, Chennai, where AR Rahman made his presence felt to the immense satisfaction of all present there.

Staring his speech with an effusive praise on the music composer Vasantha Balan said that he was initially shaky when he went to meet the composer to narrate the story. Sensing his anxiety coupled with fear, Rahman made him to feel at home, he explained with gratitude. While he went on to say his greatness and achievements, the director said Rahman did not give the nod initially after story telling event. After a week ARR sent the director Vasantha Balan an sms “I am ready for Kittappa”. He also expressed his thanks to Siddarth with whose help he could get ARR on board in the film, he said.

Speaking about Siddharth he said that Siddharth has worked hard on his character in the film which will be seen and felt by the audience. He also indicated that Siddharth will be portraying a scene in the film donning the role of Veera Pandia Kattabomman.

AR Rahman speaking on the occasion has said initially he was bit anxious whether he could meet the expectations of the present younger generation of the audience with his music of pre-independence era. There are about 16 songs in the film of which 8 are short ones, and another eight songs are regular. He had tuned the songs in such a way while he maintained the flavour of the primitiveness in his rhythm, he has tuned the songs with melody to meet the younger generations’ expectations.

Hope Vasantha Balan’s Kavia Thalaivan would be a true tribute to the theatres of the bygone era.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பேயாய் அலையும் பாலா பட ஹீரோயின்

எந்த காலத்திலோ வந்த ஜெகன்மோகினியாக இருந்தாலும் சரி, சமீபத்தில் வந்த பீட்சாவாக இருந்தாலும் சரி, பேய் கதை என்றாலே ஒரு வித அச்சத்தோடு தியேட்டருக்குள் நுழையும் ரசிகர்கள்,...

Close