ஏ.ஆர்.ரஹ்மான் வருகை… கோலாலம்பூர் தமிழர்கள் வருத்தம்?

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த சில தினங்களுக்கு முன் மலேசியாவுக்கு சென்றிருந்தார். இவரது நல்வரவு அங்கே இசை இரவாக மலர இருக்கிறது. அதனால்தான் இந்த விசிட். வருகிற ஏப்ரல் மாதம் ஸ்டேடியர் நெகராவில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறதாம். பொதுவாகவே மலேசிய தமிழர்கள் பெரும் இசை பிரியர்களாக இருக்கிறார்கள். அதுவும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி என்றால் அவர்களின் மனசு எவ்வளவு சந்தோஷப்படும்?

அதே நேரத்தில் ரஹ்மான் வெறும் தமிழ் பாடல்கள் மட்டும் படைக்கவில்லையே? இந்தி படங்களுக்கும் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்தவராச்சே? அதனால் அந்த மேடையில் ஏராளமான இந்தி பாடல்களும் பாடப்பட இருக்கிறது. இந்த மலேசிய விசிட்டின்போது தனது ஏப்ரல் மாத இசை நிகழ்ச்சி குறித்து சில வார்த்தைகள் பத்திரிகையாளர்களிடம் பேச விரும்பினாராம் அவர். ஏ.ஆர்.ரஹ்மான் பிரஸ்மீட் என்றதும் அங்கிருக்கும் எல்லா மொழி பத்திரிகையாளர்களும் குவிந்துவிட்டார்களாம். வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் இவற்றுடன் அச்சு ஊடகங்களும் சேர்ந்து கொள்ள ஒரே பிரஷர் ரஹ்மானுக்கு.

எல்லாருடனும் பேச வேண்டும். எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சொதப்பலால் அவரால் தமிழ் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லையாம். இதனால் பெரும் அதிருப்திக்குள்ளான தமிழ் பத்திரிகையாளர்கள் ஒரு தமிழரான ரஹ்மான் தமிழ் பத்திரிகைகளுக்கு பதில் சொல்லாமல் மற்ற மொழி ஊடகங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது துரதிருஷ்டவசமானது என்று கவலையுடன் முணுமுணுத்தார்களாம். ஒரு சில தமிழ் ஊடகங்கள் இந்த புறக்கணிப்பை செய்தியாகவே வெளியிட்டிருக்கின்றன.

ஆஸ்கர் விருதை கைகளில் வாங்கிக் கொண்டு தமிழில் பேசியவர் ரஹ்மான். உலக அரங்கில் தமிழ் மொழிக்கு அவர் தந்த மரியாதைதான் அது. உண்மை அப்படியிருக்க, ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் பத்திரிகைகளை புறக்கணித்தார் என்பது வேண்டும் என்றே செய்த வேலையாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

AR Rahman criticised by Malaysian Tamil media!

Isai Puyal AR Rahman is in the news for wrong reason, in Malaysia. He would be performing live concert in Kuala Lumpur, Malaysia, in the first week of April, for which he visited KL, Malaysia, for preparatory works. During the visit he wanted to address the media about his forthcoming concert. However due to the communication gap, the Tamil media was not properly informed and they have missed the opportunity to be present in the ARR’s press conference. While Tamil portals and some local Tamil media publicised that AR Rahman had avoided the local Tamil media, Tamil reporter A Rahman has said that it was very unfortunate that AR Rahman had given importance to others avoiding the Tamil media.

AR Rahman while receiving the Oscar Award spoke in Tamil thus established his love for Tamil and his mother tongue. Hence ARR would not have done that. If it had happened it might be due to the communication gap with the local media, perhaps.

 

2 Comments
  1. hasan says

    Tamil language is not depend on a music director. A.r. rahman is nothing to compare Tamil language. Tamil Language need not to expect people like AR rahman to recognise.

  2. inshaf says

    Great

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ எல்லா படத்துலேயும்… ’ சிவகார்த்திகேயனை விரட்டும் சென்ட்டிமென்ட்

பெரிய பெரிய ஹீரோக்களையே அல்லாட விட்டுக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் நடித்து வெளிவந்த லேட்டஸ்ட் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம்தான் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர்காரர்கள், கேண்டீன்காரர்கள், சைக்கிள்...

Close