ஐதரபாத்தில் ரகசிய சந்திப்பு- விஜய் மாவட்ட நிர்வாகிகளுடன் பேசியது என்ன?

கைக்கு எட்டுற தொலைவுல காசி இருந்தாலும், கண்ணுக்கு எட்ற தொலைவிலேயா இருக்கு புண்ணியம்? ஆட்சி, அதிகாரம், அதட்டல் எல்லாமே கைக்கு வந்தா நல்லாதான் இருக்கும். இல்லேன்னா நம்ம படம் ரிலீஸ் எப்போன்னு யார் யாரோ அல்லவா டிசைட் பண்ணுவாங்க? இப்படியெல்லாம் எண்ணங்கள் துரத்தியடிப்பதால், ‘அமைதியே… கொஞ்சம் அருகில் இரேன்’ என்று ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள நினைக்கிறார் விஜய்.

தமிழ்நாட்டில் இருந்தால்தான் அது இது என்று ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கு. அதனால் நிம்மதியாக இருக்குமே என்று ஜில்லா படப்பிடிப்பை ஐதராபாத்தில் வைக்க சொல்லிவிட்டார். போன இடத்திலும் நிம்மதியாக இருக்க விட்டால்தானே? மாவட்ட பொறுப்பாளர்கள் மட்டும் உங்களை சந்திக்க விரும்புறாங்க. அனுப்பலாமா என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்களாம் இங்கிருக்கும் மன்ற பொறுப்பாளர்கள்.

முதலில் யோசித்த விஜய், அதிலும் சிலரை மட்டும் டிக் அடித்து இவங்களை மட்டும் அனுப்பி வைங்க என்றாராம். அப்படி சென்றவர்களுக்கு மட்டும் விஜய்யுடன் நெடுநேரம் விவாதிக்க முடிந்ததாக தகவல்கள் கசிகிறது. அந்த நேரத்தில் அவர்கள் சொன்ன ஆலோசனைகளை ரொம்பவே கவனமாக கேட்டுக் கொண்ட விஜய், பார்லிமென்ட் எலக்ஷன் வரட்டும். நாம திரும்பவும் மீட் பண்ணுவோம் என்று கூறியிருக்கிறாராம்.

என்னவோ நடக்குது, ஆனா என்னன்னுதான் புரியல…

Vijay confer with his ‘Iyakkam’ men at Hyderabad

Vijay in order to keep away from controversies and rumours surrounding him and his films, has decided to stay inside the Ramoji Gardens studio where the Jilla team has the shooting schedules. The current situation owing to pro and anti Telengana agitations, in Hyderabad also helped Vijay that no one would be able to visit him or meet him. However members of his Iyakkam insisted on meeting him and made a request to Ilayathalapathi, who has advised a few members of his choice to go to Hyderabad and meet him. They met Vijay at Hyderabad and conferred with him on several topics which have not come to light yet. However it is learnt that we will meet again after the announcement of Lok Sabha elections and decide the future course, was the word Vijay seems to have told his men.

1 Comment
  1. Siva says

    ஹலோ அந்தணன், விஜயோட அடுத்த படமும் ரிலீஸ் ஆக கூடாதுன்னு வேலை ஆரம்பிச்சிட்டிங்க போங்க. ஏன் இந்த கொலை வெறி?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யாவுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவா? தொடரும் வேட்டை!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்திற்கு ஹாலிவுட்டே இன்னும் பயன்படுத்தியிராத ஒரு கேமிராவை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆளுயரத்தை தாண்டிய அனகோண்டா போலிருக்கிறது அது. எல்லாரும் அண்ணாந்து பார்க்கிற...

Close