ஐயோ… மெல்லிசையா? – அலறி ஓடும் விஜய் சேதுபதி

லாட்டரி சீட்டுல லட்சம் விழுந்தா ஆளுக்கு பாதி என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குதான். ‘விழுந்தால்தானே’ என்கிற அலட்சியமும் கூடவே சேர்ந்து கொண்டால், அந்த பாதியும் முக்காலாக மாறும். அப்படிதான் முக்கால்வாசி வாக்குறுதி கொடுத்துவிட்டு மூக்கால் அழுது கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு பொழுது போக்கக் கூட இடமில்லாமல் அலைந்து கொண்டிருந்தாரல்லவா? அந்த நேரத்தில் இவரை யார் குறும்பட நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் சென்று வந்தார். சிலர் சும்மா வீட்ல பார்த்துகிட்டிருக்கோம். வர்றீங்களா என்று அழைத்தால் கூட அங்கேயும் சென்றுவிடுவார். எல்லாம் கலை தாகம். அப்போது சில படங்களை பார்த்துவிட்டு, இதை படமா எடுக்கிறீங்கன்னா நான் அதுல நடிக்கிறேன் என்று கூறிவிடுவாராம். அப்படி இவர் வாக்குறுதி கொடுத்த படங்களே ஒரு டஜனை தாண்டும் என்கிறார்கள். அதிலும் பீட்சா ஹிட்டுக்கு பிறகு, மெல்லிசை என்ற குறும்படத்தில் நடிப்பதாக கூறியிருந்தாராம்.

இப்போது ஒரு தயாரிப்பாளருடன் மெல்லிசை இயக்குனர் அட்வான்ஸ் தருகிற அளவுக்கு தயாராக வந்தாலும், அவரை எப்படி தட்டிக் கழிப்பது என்று தெரியாமல் தவிக்கிறாராம் விஜய் சேதுபதி. ஏன்? இவரை சந்திக்கும் சினிமாக்காரர்கள் பலரும், ‘தொடர்ந்து ஒரே மாதிரி படங்களில் நடிச்சுட்டு இருந்தீங்கன்னா கஷ்டம். இந்த குறும்பட ஸ்டைலிஷ் இயக்குனர்களை கொஞ்ச நாளைக்கு தள்ளி வச்சுட்டு கமர்ஷியல் ஏரியாவுக்கு வாங்க’ என்கிறார்களாம்.

இதில் குழம்பிய விஜய் சேதுபதி, அங்கேயா… இங்கேயா… என்கிற தடுமாற்றத்தில் இருக்கிறாராம். அதில்தான் சிக்கிக் கொண்டு சின்னாபின்னப்பட்டு கிடக்கிறது மெல்லிசை.

Vijay Sethupathi’s dilemma on fresh director?

Yes, Vijay Sethupathi is on a high, thanks to the series of hits with fresh talents of directors who brought him to the fore with novel story line and picturization. Now Vijay has grown up in the industry having a base for his films. With the growth, there is also a growth of ‘supposed to be’ well wishers growing around him. These well wishers are sounding him to put a halt for some time, to work with the fresh talents of directors, and concentrate on commercial cinema. Well, one way they are right in their advice. But what about the promise Vijay gave when he was not even in the consideration for a role in the cinema. During the time, when Vijay was looking out for roles in whatever films that come his way, made a promise to one such talent, who had shown a short film titled ‘Mellisai’ to Vijay. After seeing the short film, Vijay was impressed and promised the director of the short film that he would act in the film, if he is taking it to the big screens. The Mellisai director found a producer and has approached Vijay to act in the film. Vijay is now in dilemma whether to go as per the advice of his well wishers, or to honour his promise to the Mellisai director?

2 Comments
  1. mathan says

    Why you hate Vijay sethupathi? you want to make him as one more addition to Crass Tamil Actors? This is Journalism at its worst. This is why Tamil cinema always fails. Unlike other Regional cinema Medias, you people never contributed positively to Cinema.

  2. anthanar says

    your articles are so one sided. i dont know what you have against vijay sethupathi. perhaps he did not provide you with the quarter and biriyani like ajith.

    tthoo… maanam ketta pozhappu.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கமலையே வியக்க வைத்த நடிப்பு ராட்ஷசன்! -ஆனந்த யாழை மீட்டுகிறேன் – 03 -தேனி கண்ணன்

நான் பணிபுரிந்த வார இதழ், இசைஞானியின் ’பால் நிலா பாதை’ புத்தகத்தை மறு வெளியீடு செய்ய திட்டமிட்டது. இதற்காக வழக்கம் போல் விழாவில் கலந்து கொண்டு பேசும்...

Close