ஐஸ்வர்யா தனுஷின் காலில் விழுந்து ஆசிபெற்ற ஹீரோ
தனுஷ் செல்வராகவனுக்கு அப்பா என்கிற ஒரே குவாலிபிகேஷன் போதும், ஃபாதர் ஆஃப் யூத் ஆகிவிட்டார் கஸ்துரிராஜா. நேற்று அவர் தயாரித்து இயக்கிய ‘காசு பணம் துட்டு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா. மேடையில் நடந்த கூத்தெல்லாம் பார்த்தால், பிள்ளைகள் இருவரும் அப்பாவிடம் ட்யூஷன் எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. மைக்கை கையில் வைத்துக் கொண்டு இந்த படத்தில் நானே ஒரு பாட்டு பாடியிருக்கேன். படிக்கட்டுமா என்றார். தெரிந்தேதான் கேட்டிருப்பார் போலிருக்கிறது. நன்றாக சத்தம் போட்டு படித்தார்(?)
படத்தில் பங்குபெற்ற எல்லாருமே 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், இளைஞிகள். அத்தனை பேரையும் ஸ்டேட் வாரியாக தேடிக் கொண்டு வந்திருக்கிறார் கஸ்துரிராஜா. சுமார் ஏழு பாடல்களுக்கு நேரடி பார்பாமென்ஸ்… சுமார் மூன்று பாடல்கள் ஸ்கிரினில் திரையிடல் என்று அத்தனையையும் ஒரே நாளில் ஒரே மேடையில் கொட்டிவிடுகிற ஆர்வத்தோடு நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தார் அவர். அவரே படித்த சென்னை பாஷை டான்சுக்கு பின்வரிசையிலிருந்து செம குத்தாட்டம் போட்ட அத்தனை பேரும் தனுஷின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களாம். நிமிடத்திற்கொருமுறை எங்கள் இளைய சூப்பர் ஸ்டார் வாழ்க என்று கோஷம் போட்டுக் கொண்டேயிருந்தார்கள். பலத்த கரகோஷத்திற்கு பிறகு மைக்கை பிடித்தார் தனுஷ்.
இதுவரை அப்பா இயக்கிய படங்களில் நான் கலந்து கொள்ளும் முதல் இசை வெளியீட்டு விழா இதுதான். இந்த படத்தில் என்னை ஒரு பாடல் பாடும்படி கேட்டார் ஆனால் நேரம் இல்லாத காரணத்தால் பாட முடியவில்லை. அப்பா தொலைத்த புனித நூலை நானும் அண்ணனும் எடுத்துக்கொண்டு பெரிய ஆளாகி விட்டோம் இனி அப்பாவும் அம்மாவும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா போகும் படி கேட்டுக்கொள்கிறேன். மற்றும் உங்கள் படத்தில் தமிழ் பாடகர்களை அறிமுக படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூற கரகோஷம் தொடர்ந்தது. (அந்த புனித நூல் மேட்டர் அப்பா பேச்சின் தொடர்ச்சி. அவர் என்ன பேசினார் என்கிறீர்களா? அவர் சென்னைக்கு வரும்போது ஒரு புனித நூலையும், குடும்ப பாரத்தையும் எடுத்துக் கொண்டு வந்தாராம். ஓடிய ஓட்டத்தில் அந்த நூலை தொலைத்துவிட்டாராம். அதைதான் தேடிக் கொண்டிருக்கிறாராம் இப்போது. அதற்குதான் இவ்வாறு பதில் சொன்னார் தனுஷ்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஐஸ்வர்யா தனுஷின் காலில் விழுந்து ஆசிபெற்றார் படத்தின் ஹீரோ. (தம்பி உங்க பெயரென்ன? தனுஷை விட பெரிய ஆளா வருவீங்க)
Kasthuriraja’s Kasu Panam Thuttu audio launched
The audio launch of director Kasthuriraja’s upcoming film Kasu Panam Thuttu was a family affair with Dhanush and his wife Aishwarya Dhanush participated in the event.
Speaking on the event the director recited the lyrics of the song he has sung in the film. About 7 songs were played on the stage with 3 numbers showed in big screen. He said that those who have acted in the film are new faces within the age group of 20-25.
Dhanush made a fervent plea on the stage requesting his father and mother to enjoy the evening of their lives with well needed rest.
The hero of the film fell at the feet of Aishwarya Dhanush and took her blessings. Way to go dude!