ஐஸ்வர்யா ராய் பெயரைப் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை – பி.வாசு ஆவேசம்

காக்கா கூட்டத்தில் கல்லெறிந்த மாதிரி, பி.வாசுவின் புதுப்பட செய்தி குறித்த தகவல்களால் ஒட்டுமொத்த இந்தியாவும் ஆடிப் போனதுதான் ஆச்சர்யம். பி.வாசு என்பவரையும் அவர் தமிழ் பட இயக்குனர் என்பதையும் வட மாநிலங்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தது ஐஸ்வர்யாராயின் அறிக்கை ஒன்று. பி.வாசு படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார் என்று வெளிவந்த செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்துதான் இத்தனை களேபரங்களும்.

இந்தநிலையில் பி.வாசுவும் இந்த குழப்பத்திற்கு தக்க பதிலளித்திருக்கிறார். என்னவாம்?

‘நான் ரஜினி படங்களையே இயக்கியவன். ஐஸ்வர்யா ராய் பெயரைப் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை. ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பி.வாசுவை சந்திக்கவில்லை என்றோ, பி.வாசு யார் என்றோ குறிப்பிட்டுள்ளாரா? பி.வாசு, மணிரத்னம் உள்ளிட்ட பலரிடம் கதை கேட்டுள்ளேன் என்றுதான் அவர் கூறியுள்ளார். இன்னும் எந்த படத்தில் முதலில் நடிப்பது என்று முடிவு செய்யவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார். நான் ஐஸ்வர்யா ராயை சந்தித்ததும், கதை கூறியதும் 100 சதவீதம் உண்மை. கதைதான் அந்தப் படத்தின் ஹீரோ. படம் முழுவதும் நாயகியை சுற்றியே இருக்கும். அந்த வேடத்தில் ஐஸ்வர்யா நடிக்கவிருக்கிறார். இது நாயகியை சுற்றியுள்ள கதை என்பதால் நான் நாயகர்களிடம் பேசும்போதும், மற்ற மற்ற தொழில்நுட்ப கலைஞர்களை ஒப்பந்தம் செய்யும்போதும் நாயகி யார் என்று கேட்பார்கள். அதற்காக அளிக்கப்பட்ட முதல் பத்திரிகை செய்தி அது.

இந்தப் படம் படப்பிடிப்புக்கு போக குறைந்தபட்சம் இன்னும் 8 மாதங்கள் ஆகும். அப்படி இருக்கும்போது இப்போதே ஏன் அந்த பத்திரிகைகளுக்கு செய்தியை கொடுத்தீர்கள் என்றுதான் ஐஸ்வர்யா ராய் நினைக்கிறார். படத்துக்கு இன்னும் தேதிகள் ஒதுக்கவில்லையே என்று கேட்டார். நான் அவரிடம் எனக்குரிய காரணங்களை கூறிவிட்டேன். இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராயோடு நிறைய காகங்கள் நடிக்கவிருக்கின்றன. இதற்காக பிரான்சில் இருந்து தனி பயிற்சியாளர்கள் வருகிறார்கள். காக்கைகளுக்கு பயிற்சி அளிக்க இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும். ஆகவே, இப்படத்தில் ஐஸ்வர்யா நடிக்கவிருப்பது முழுக்க உண்மை.

இவர் இவ்வளவு கான்கிரீட்டாக பதில் சொல்வதை பார்த்தால், ஐஸ்வர்யா ஏன் அப்படி சொன்னார் என்கிற குழப்பம்தான் மிஞ்சுகிறது.

Director P. Vasu clarifies on Aishwarya Rai’s statement!

Shocked and perturbed by the statement of Aishwarya Rai, director P. Vasu has given the clarification that he is indeed in directing the film with Aishwarya Rai playing the lead. He further said that to gain popularity he does not need Aishwarya Rai, as he is already known in the industry having directed Rajini’s films. He also said Aishwarya Rai did not deny she did not meet P. Vasu nor she did not hear his script. She only said that she has not decided which movie to begin with from the scripts she heard so far including that of his and director Manirathnam. “I have already spoken to Aishwarya Rai about why he has issued a statement in a hurry” Vasu added. He said the story is heroine centric and when he intends to cast other actors they would bound to ask who the heroine is, and hence he had issued the statement. He further stated that he needs 1000 crows for the film and they got to be trained by experts from France. Looking into all these things, it would take at least 8 months time for him to begin the shooting, which might have embarrassed Aishwarya. He reiterated that he would be doing the film for sure and it is a fact that Aishwarya Rai is acting in the film.

Looking into the firmness in his statement, we believe that this time the director would get it right.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Cuckoo Movie New Stills

[nggallery id=114]

Close