ஒம்போதுதான் வேணும்…. அடம் பிடிக்கும் ஹன்சிகா

ஒரு ஹாட் கேக் நடிகையை கோடம்பாக்கம் கொண்டாடுகிற அழகை பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் சினிமாக்காரராக இருக்க வேண்டும். அதுவும் முன்னணி நடிகைகள் நடிக்கும் படத்தில் வொர்க் பண்ணியிருக்க வேண்டும். இவ்விரண்டு பாக்கியமும் வாய்க்கப் பெற்றால், அந்த கண்கொள்ளாக் காட்சியை கண்டு காதெல்லாம் புஸ் ஆகலாம். அண்மையில் அப்படியொரு அந்தஸ்துடன் தங்க தட்டில் வைத்து தாங்கப்படுகிறார் ஹன்சிகா மோத்வானி. இவர் தெலுங்கு நடிகர் மோகன்பாபு தயாரிக்கும் பட ஷுட்டிங்கில் படுகிற அவஸ்தையை கடந்த சில தினங்களுக்கு முன் எழுதியிருந்தோம். இது தமிழ்நாடாச்சே? இங்கு பால்கோவா கலரும், மல்கோவா முகமும் இருந்தால் போதும். பாலாபிஷேகம் செய்ய க்யூ கட்டி நிற்பார்களாச்சே! அப்படியொரு சம்பவம்தான் இது.

ஹன்சிகாவுக்கு ஒன்பதாம் எண்தான் ராசியாம். வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்தாலும் சரி, சென்னையிலிருந்து வெளியூருக்கு போனாலும் சரி. தனது பட தயாரிப்பு நிர்வாகிகளிடம் 9 ம் எண் கூட்டுத்தொகை வர்ற மாதிரி ரூம் போடுங்க என்று கூறிவிடுவார். அவர்களும் நாயாய் அலைந்து பேயாய் திரிந்து இவர் கேட்கும் ஓட்டலில் இவர் கேட்கும் 9 ம் எண் அறையை கஷ்டப்பட்டாவது ஒதுக்கி கொடுத்துவிடுவார்கள். ஆனால் எல்லா நேரத்திலும் இந்த ரூம் காலியாக இருக்க வேண்டுமே?

அப்படியொரு கண்றாவி சிக்கலில் மாட்டி கண்ணீரே சிந்திவிட்டாராம் ஒரு தயாரிப்பு நிர்வாகி. ஹன்சிகாவுக்கு ரூம் ஒதுக்குவதற்காக அவர் வழக்கமாக தங்கும் நட்சத்திர ஓட்டலுக்கு போயிருந்தாராம். ஒன்பதாம் எண் கூட்டுத்தொகை வருவது போல அறை இல்லவே இல்லை. அப்படியிருந்தாலும் அது சூட் என்று சொல்லப்படுகிற ராக்கெட் பில் வகையை சேர்ந்தது. தயாரிப்பாளருக்கு போன் அடித்து விஷயத்தை சொன்னால், என்ன செய்வீங்களோ தெரியாது. செலவையும் குறைக்கணும். 9 எண் அறையும் வேணும். பாருங்க என்று கூறிவிட்டாராம்.

இப்போதெல்லாம் தனது தாய்குலத்துடன் வருவதில்லை ஹன்சிகா. தனியாகவே வந்து தனியாகவே போகிற அளவுக்கு துணிச்சல் வந்துவிட்டது. அவர் ஒருவருக்காக சூட் ஒதுக்கவும் முடியாது. இப்படியெல்லாம் யோசித்த தயாரிப்பு நிர்வாகி, ஓட்டல் மேனேஜரின் காலில் விழாத குறையாக பேசி, வேறொருவர் தங்கியிருந்த 9 எண் அறையை கேட்டுப் பெற்றாராம். இந்த பிரச்சனை எதுவுமே தெரியாத ஹன்சிகா, எனக்கு ஒம்போதுதானே ஒதுக்கியிருக்கீங்க என்று கேட்டபின்பே காரில் ஏறியதுதான் வவுத்தெறிச்சல் நியூஸ்.

No.9 gives difficult time for a production executive

For the pretty lass Hansika Motwani, No.9 is the lucky one. But for a production executive of a film company no.9 seems to have given lot of problems.

Whenever Hansika visits Chennai she would insists that her room no. should aggregate to no.9. Recently she visited Chennai and as usual she insisted for no.9. Production executive after an herculean efforts was told by the star hotel that no.9 aggregate will be a suite and other such rooms are already occupied. When told to the producer, he asked his executive to have the cost in his mind and arrange to book a room. Finally the executive virtually begged the manager to arrange to exchange an occupant to another room and allot his room aggregating 9, to Hansika.

Wonder how many more such executives will have to face such issues?

1 Comment
  1. ponravindran says

    nalla nadhai than

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மகன்னும் பார்க்காமல் அவனை ஹீரோயினோடு உருட்டி புரட்டி எடுத்துருக்கார்

சீரியல்களின் ஆதிக்கம் சேனல்களை ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சீரியல்களுக்கே சீதபேதி வரவழைக்கிற அளவுக்கு ஒருகாலத்தில் குடும்ப கதைகளை பிரித்து மேய்ந்தவர் வீ.சேகர். இத்தனைக்கும் இவர்...

Close