கஞ்சா கருப்புவை கலங்க வைத்த பாலா

தானே தயாரித்த வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தனது எதிரிகளுக்கும் வீடு தேடி சென்று இன்விடேஷன் வைத்தார் கஞ்சா கருப்பு. எதிரிகளையே அழைத்தார் என்றால், நண்பர்களை எப்படி அழைத்திருப்பார்? கமலா தியேட்டர் வாசலில் நின்று கொண்டு வாங்கண்ணே… வாங்க என்று அவர் அழைத்த விதத்தில் உருகி வழிந்தது விருந்தினர் கூட்டம். விழா நடைபெறும் தியேட்டருக்குள் நுழைந்தால் கடப்பாரை விழுந்தால் குண்டூசி ஆகிவிடுகிற அளவுக்கு கூட்டம். இதில் அமீருக்கே இடம் இல்லாமல் கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தார் என்றால் பாருங்களேன்.

பாலா அலுவலகத்தில் ஆபிஸ் பையனாக இருந்த காலத்திலிருந்தே தனது கைப்பக்குவமான மீன் குழம்புக்கு அவரை அடிமையாக்கி வைத்திருந்தார் கருப்பு. எங்கு போனாலும், பெட்டி படுக்கையை கார்ல ஏத்துறதுக்கு முன்னாடி கருப்பு வந்துட்டானா பாரு என்பாராம் பாலா. அந்தளவுக்கு போகிற இடங்களுக்கெல்லாம் கூடவே போய் மீன் குழம்பு செய்து போட்டவர் கருப்பு. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் சென்று அழைத்தவரை, முடிஞ்சா வர்றேன் போ என்று அனுப்பி வைத்தாராம் அவர். வரவும் இல்லை. இதனால் கருப்புக்கு ஒரே கவலையாம். கண்கலங்கியதாகவும் கேள்வி.

ஆனால் அமீர், ஏ.ஆர்.முருகதாஸ், கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி என்று பெரும் கூட்டமே வந்திருந்தது அவரை வாழ்த்த. முருகதாசும் படத்தின் இயக்குனர் கோபியும் நெருங்கிய நண்பர்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் கோபி. எனவே சந்தோஷமாக மைக்கை பிடித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தோட இயக்குனர், என் நண்பர் கோபி ஜெயிச்சே ஆகணும். தீனா படத்தோட முதல் ஷோ சமயத்தில் நான் எவ்வளவு சந்தொஷப்பட்டேனோ, அதே அளவு கோபி ஜெயிக்கும்போது சந்தோஷப்படுவேன். நான் உதவி இயக்குனராக ஒரு இயக்குனர்கிட்ட வேலை செஞ்சப்போ, சிக்கலான சூழல்ல கோபி எனக்கு செஞ்ச உதவி, வேற எந்த ஒரு உதவி இயக்குனரும், அண்ணன் தம்பி கூட செய்ய மாட்டாங்க. ஆனா அவர் எனக்கு செய்தார். தூய சிரிப்போட இருக்கும் கோபி, என்னை பார்க்கறப்போ எல்லாம் நான் ஜெயிச்சிருவேன் சார்னு சொல்வார். கடவுள் ஆசிர்வாதத்துல நிச்சயம் ஜெயிப்பார். அமீர் சார் அல்லாவை வேண்டுனா நான் முருகனை வேண்டுவேன். நிச்சயம் இந்த படம் ஜெயிக்கும் என்றார்.

படத்தில் இடம்பெற்ற பாடல்களும், ட்ரெய்லரும் கூட அதையேதான் சொல்லுது.

Ganja Karuppu played perfect host during audio release

Ganja Karuppu who not only plays the lead but also produced the film Velmurugan Borewells, played a perfect host during its audio launch, which was held at Kamala Theatre. Directors Ameer, Murugadoss, Karu. Pazhaniappan, Samudhrakani, and others from film fraternity graced the occasion.

Speaking on the occasion director Murugadoss recalled the help with gratitude he received from Gopi during his entry stage in filmdom. He wished that Gopi should come out with success through this film and pray for his success.

While everyone congratulated and wished Ganja Karuppu and the director Gopi, Ganja Karuppu was particularly sad and had a moisture eyes when he pointed out that his mentor director Bala did not turn up to bless his desciple.

2 Comments
  1. subramaniya shiva. says

    al de bst gopi….

  2. ponravindran says

    al the best karuppu

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
போனில் அழுதார் சமந்தா…. நஸ்ரியாவை திருப்பி அனுப்பினார் லிங்குசாமி!

எவ்வளவு உயரத்திற்கு போனாலும் சில இழப்புகளை சகித்துக் கொள்ள முடியாது. அப்படி சகித்துக் கொள்ள முடியாத ஒரு தோல்வியிலிருந்து மீண்டிருக்கிறார் சமந்தா. அதுவும் சில பெண்களுக்கேயுரிய கண்ணீர்...

Close