கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட ஹீரோ, கவலைப்படுகிறது குடும்பம்!

மூன்றெழுத்து இளம் ஹீரோ ஒருவர், தீராத கஞ்சா பழக்கத்தில் சிக்கிக் கொண்டார். எந்நேரமும் அது இல்லாமல் இருக்க முடியாது என்கிறளவுக்கு ‘அடிக்ட்’ ஆகிப் போயிருக்கும் அவரை, மீட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது குடும்பம். யார் சொன்னாலும் கேட்க மாட்டார் என்பதால், சொந்தமாக படம் எடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.

மற்றவர்களின் படப்பிடிப்புக்கு நினைத்த நேரத்தில் போய் பழகிய அவருக்கு, சொந்த பணத்தில் டிமிக்கி கொடுத்தால் நஷ்டம் நமக்குதானே என்கிற எண்ணம் வருமல்லவா? அதனால்தான் இந்த ஐடியாவாம். ‘தம்பிய எப்பவும் எங்கேஜ்டாவே வைங்க’ என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார்களாம். அதனால் படம் குறுகிய கால தயாரிப்பாக வெளிவரப்போகிறது.

தன்மான விஷயத்தில் தலைநிமிர்ந்திருக்கும் அப்பா, தன் மகன் விஷயத்தில் தலைகுனியக் கூடாது. அதுதான் எல்லாருடைய விருப்பமும்.

Young actor turned to drugs

Sometimes, one has to suffer for other’s mistakes. Most of the people who have ‘love’ for their siblings, parents, friends, etc., end up like this. A young upcoming 3 letters actor has become an addict to drug now. No way can he be mended with soft words and rehabilitation methods. His family members are a worried lot, for the prestige and reputation of the family is at stake now. They embarked on an idea to star the actor in their home production banner, so that he would get involved in it. They have also suggested to the director of the film, to keep the actor ‘engaged’. Good luck to them and the actor as well!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘எக்ஸ்ட்ரா போட்டுக் கொடுங்க…’ ஆரம்பத்திற்கு ஆர்யா தந்த நெருக்கடி!

மதாராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி மாதிரி எப்பவாவது ஹிட் கொடுக்கிற ஹீரோதான் ஆர்யா. ஆனாலும் சமுதாயத்தில் நிலவி வரும் ஹீரோக்களின் பஞ்சத்தை காரணம் காட்டி,...

Close