கடனை கஷ்ஷ்ஷ்ஷ்ட்ப்பட்டு அடைத்தார் விஜய் இருப்பவர் போற்றட்டும்… இறந்தவர் வாழ்த்தட்டும்!

கடன் அன்பை முறிக்கும் என்பதை காலம் கடந்து புரிந்து கொண்டிருக்கிறார் விஜய். இன்று அவரை வைத்து படம் எடுத்து பாழாய் போன ஐந்து குடும்பங்களை அழைத்து அவர்களுக்கு நிதியுதவி செய்திருக்கிறார் அவர். (இந்த நிதியுதவியை அவருக்கு செய்தது தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியாக இருக்கலாம்) பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நிதியுதவி நிகழ்ச்சி உண்மையிலேயே பாராட்ட தக்கதுதான். ஏனென்றால், நெடுநாளைய கடன் ஒன்றை இன்று தெரிந்தோ, தெரியாமலோ அடைத்திருக்கிறார் விஜய்.

இன்று அவரிடமிருந்து நிதியுதவி பெற்ற குடும்பத்தில் ஒன்று ஆஸ்கர் எம்.பாஸ்கரின் குடும்பம். இந்த பாஸ்கர் விஜய்யை வைத்து விஷ்ணு என்ற படத்தை தயாரித்தவர். இந்த படத்திற்கு பிறகு இதே விஜய்க்கு அவர் பத்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். இவருக்கு கால்ஷீட்டும் கொடுக்காமல் அட்வான்சை திருப்பியும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் விஜய். வேறு வழியில்லாத பாஸ்கர் அப்போதே குமுதம் வார இதழில் காட்டசாட்டமாக ஒரு பேட்டியளித்தார். அதில் தன்னுடைய பத்து லட்சம் விஜய்யிடம் மாட்டிக் கொண்டு தவிப்பது பற்றி புலம்பி வைக்க, வேறு வழியில்லாமல் பணத்தை திருப்பிக் கொடுத்தார் விஜய்.

இந்த பத்து லட்சத்தை நான் ஒரு பைசா வட்டிக்கு விட்டிருந்தாலே நிறைய லாபம் கிடைச்சிருக்கும் என்று பலரிடமும் புலம்பி வந்தார் பாஸ்கர். தனது மறைவுகாலம் வரைக்கும் விஜய்யின் பாஸ்போர்ட் சைஸ் படத்தை கூட பார்க்க விருப்பமில்லாமலே செத்துப்போனார் அவர்.

இன்று விஜய் அவரது குடும்பத்திற்கு வழங்கியிருக்கும் தொகை, பாஸ்கர் புலம்பிய மாதிரி வட்டித் தொகையாக இருக்குமோ? வாழ்த்தட்டும் அவரது ஆத்மா!

Vijay’s noble gesture to struggling producers

Ilayathalapathy Vijay hosted an event today to honour and express his gratitude and help to 5 producers who produced his films in his initial stages. They included, ‘Vasantha Vaasal’ M Rajaram, ‘Rajavin Parvayile’ Soundarapandian and ‘Once  More’ CV Rajendran and presented them with a cheque of Rs 5 lacs each. Mr Balaji Prabhu, the son of late producer M Baskar, who produced Vishnu and Mrs. Shantha, wife of late KRG, the producer of Minsara Kanna also were the recipients of Vijay’s love.  

In his speech he mentioned that these producers are like mother who took great care of him during the shooting of their films. “Felt sad when heard about their struggling and wanted to help them. Helping the people can be at any point of time. It struck me in my thought so I had decided to call them to my office and help them. Because of my Manager’s insistence I had to make the event public,” explained Vijay.

Vijay’s act of helping those who are struggling in life will be a great one indeed. Though he might have made some mistakes during the initial stages, the maturity in age and experience, perhaps would have made him to amend now.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தலைமுறைகள் விமர்சனம்

கொஞ்சம் கொஞ்சமாக கருவாடாகிக் கொண்டிருக்கிற தலைமுறைகளுக்கு, நீச்சலின் சுகத்தை நினைவுபடுத்தியிருக்கிறார் பாலுமகேந்திரா. ‘எல்லாம் போச்சே’ என்று கவலைகொள்கிற ஒரு கிழவனின் ஆயாசத்தையும், இனிமேலும் போக விடக்கூடாது என்கிற...

Close