கடைசி நேரத்தில் சேர்த்த பாட்டு முனியம்மாவுடன் ஆட்டம் போட்ட சிவா
இம்மாதம் 16 ந் தேதி ‘மான் கராத்தே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு பாடலை புதிதாக சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார்களாம். படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் இப்போது வீட்டுக்கு வீடு இருக்கும் தொலைக்காட்சி பெட்டி போலாகிவிட்டார். பெண்களுக்கு பிடித்தவர் என்பதைதான் இப்படி சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த பாடல் அவர்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் பரவை முனியம்மாவோடு சிவகார்த்திகேயனை ஆட விட்டுவிட்டார்கள்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இப்போது அவருடன் முனியம்மாவும் பாடியிருக்கிறார். செம குத்தாட்டமாக அமைந்திருக்கும் இப்பாடல், வருத்தப்படாத வாலிபர் சங்க பாடல்களின் ஹிட்டையெல்லாம் கூட முறியடிக்கும் என்கிறார்கள்.
படத்தின் ஸ்பெஷல் இது மட்டுமல்ல, கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறாராம். திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் திருக்குமரன்.
மான் கராத்தே படத்திற்கு மியூசிக் அனிருத். உள்ளூர்ல இருந்தா ஓவரா நோட்டம் விடுறாங்க என்று மும்பையிலேயே தங்கிவிட்டார் அனிருத்.
அவர் எங்கிருந்தா என்ன? பாட்டு பிச்சுகிட்டா அது போதும்.
Siva Karthikeyan croons and dances with Paravai Muniamma!
The shoot of Siva Karthikeyan’s Maan Karate is on the verge of completion, when the director suggested an intro song for Siva would go well with female audience. Immediately it was made known to Anirudh who scores music for the film. He immediately tuned a ‘kuthu’ number and roped in Paravai Muniamma to sing the song. He also made that Siva too joins Paravai in crooning the song, which has come out very well, say the sources.
The shoot of ‘kuthu’ song is being canned now, with Siva Karthikeyan and Paravai Muniamma. It is heard that it will be a intro song for the hero ‘Peter’, by Paravai Muniamma, who plays the role of Idly seller in the film. More than 100 dances are participating in the shoot. Siva Karthikeyan is elated as his status in the industry is going up and up. This is the first time he will be introduced through a song in the film, like any popular hero. When it rains, it pours!