கணக்கு போட்ட கவுதம் மேனன் கவிழ்த்துவிட்ட ஹாரிஸ் ஜெயராஜ் -அஜீத் பட அரசியல்

ஒரு படத்தின் டிசைன் செய்வதுதான் உலகத்திலேயே மிகவும் கஷ்டமான விஷயம். ஈகோ, கோபம், முன்ஜெம்ம பகை எல்லாவற்றையும் மறந்துவிட்டு கைகோர்க்க முன் வந்தாலும், சம்பளம் வந்து குறுக்கே நிற்கும். அதையும் சரி செய்துவிட்டு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம் என்றால், அதற்குள் எந்த சந்திலிருந்து எந்த அம்பு வருமோ என்கிற அச்சத்தோடுதான் அந்த பிளாஷ் நிமிடத்திற்காக காத்திருக்க வேண்டும்.

இந்த அசகாய சூர அடிதடிகள் அஜீத்- கவுதம்மேனன் இணையும் புதிய படத்திற்கும் வந்து தொலைத்திருப்பதுதான் வருத்தத்திலும் வருத்தம். கடந்த சில தினங்களாகவே அஜீத் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்றொரு செய்தி உலவிக் கொண்டிருக்கிறது. மின்னலே காலத்திலிருந்தே கவுதம்-ஹாரிஸ் காம்பினேஷனுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தானே என்கிற அலட்சியத்தின் காரணமாக, ஹாரிசுக்கு அவ்வப்போலு பில் பாக்கி வைத்து நட்பையே கெடுத்துக் கொண்டார் கவுதம். வெளிப்படையாக அவர் குறித்து அதிருப்தி தெரிவிக்காமல், ‘நல்லவனுக்கு அழகு சொல்லாம போறதுதான்’ தத்துவத்தை கடைபிடித்த ஹாரிஸ், கவுதமை விட்டு ஜென்ட்டிலாக விலகிக் கொண்டார்.

அதற்கப்புறம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானோடு இணைந்த கவுதம், விண்ணை தாண்டி வருவாயா என்கிற கவுரவமான ஹிட் கொடுத்தார். அதற்கப்புறம் வழக்கம் போல கவுதமின் கஞ்சத்தனத்திற்கு ரஹ்மானும் பலியாக இனி இவரோடு கூட்டு இல்லை என்று ஒதுங்கிக் கொள்ள, இசைஞானியை சேர்த்துக் கொண்டு நீதானே என் பொன் வசந்தம் தந்தார் கவுதம்.

இப்போது அஜீத் படம். இதில் என்ன நடக்கிறது இப்போது? நமது நியூதமிழ்சினிமா.காம் களத்தில் இறங்கி திரட்டிய தகவல் இது.

மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜோடு சேர நினைத்த கவுதம், வழக்கம்போல செய்திகளை மீடியாவில் கசிய விட, எல்லாரும் பரபரப்பாக செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஹாரிஸ் வட்டாரத்தில் விசாரித்தால், இனி ஜென்மத்திற்கும் கவுதமுடன் சேர்கிற எண்ணம் அவருக்கு இல்லவே இல்லை என்கிறார்கள். ஹாரிஸ் அனுமதியில்லாமலே வெளியிடப்பட்ட செய்திதான் அது என்றும் மறுக்கிறார்கள். இந்த செய்திகளையெல்லாம் படித்த ஹாரிசும், கவுதமை தொடர்பு கொண்டு தனது அதிருப்தியை தெரிவித்துக் கொண்டாராம். நான் இந்த படத்தில் பணியாற்ற முடியாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இறுதியாக கிடைத்த செய்தியின்படி அஜீத்- கவுதம் கூட்டணியை சிறப்பிக்க அனிருத் முன் வந்திருக்கிறாராம். நல்ல காம்பினேஷன்!

 

Harris declines Gautham Menon, but Anirudh ready to step in!

There have been reports in the media for the past couple of days that Harris Jayaraj will be teaming up with director Gautham Menon for Ajith’s film. The fans were thrilled to hear the news as the Gautham-Harris combo is known to given melodious hits. It was also said that both have decided to bury their past and begin a new life.

Your portal newtamilcinema.in started collecting the information on the authenticity of the reports. We have found through our known sources that it was the director who leaked the reports through media about Harris Jayaraj’s doing the music, and the music composer is in no mood to team up with the director. In the fact the sources have confirmed that the composer will never ever team up with Gautham in films, pointing out that the divide between them cannot be cemented. They also said that Harris on seeing the news himself called up the director and expressed his displeasure about the reports.

Gautham Menon, having parted ways with Harris, joined with AR Rahman in Vinnai Thandi Varuvaya which made history both in music and as well as box office. For unknown reasons Gautham Menon roped in Ilayaraja for Neethane En Ponvasantham. Now he is in dilemma as to whom he should opt to for Ajith film. Probably the sentiments must have driven him to rope in Harris Jayaraj due to success rate of the duo.

As things stand now Harris is not likely to team up with Gautham and it is heard that Anirudh is ready to step in to help Gautham Menon. Wish the combination works at the box office!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Cinema Spice Magazine Pocket Issue Launch By Nikesha Patel & Ravi Thyagarajen Photos

[nggallery id=359]

Close