கண்டிப்பாரா அமீர்? எல்லைமீறும் பெப்ஸி தொழிலாளர் அராஜகம்
விட்டால், சினிமாக்காரங்க அவங்கவங்க வீட்ல வெந்நீர் வச்சாலும் அதுக்கும் பெப்ஸி அமைப்புல இருக்கிற சமையல்காரர் வந்துதான் அடுப்பேத்தணும் என்று கொடி பிடிப்பார்கள் போலிருக்கிறது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்று சொல்லப்படும் திரைப்பட ஊழியர்களின் கூட்டமைப்பினர். படப்பிடிப்பில் திடீரென நுழைந்து அமைதியை குலைப்பது. தயாரிப்பாளருக்கு முடிந்தவரை நஷ்டம் ஏற்படுத்துவது, கூட்டமாக வந்து கொந்தளிப்பை ஏற்படுத்துவதுதான் இவர்களின் பொழுதுபோக்கு. அப்படிப்பட்ட பெப்ஸி ஊழியர்களின் அட்டகாசம் இன்றும் தொடர்ந்தது. ‘ஆதியும் அந்தமும்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இவர்களின் அராஜகத்தை நேரில் கண்ட பத்திரிகையாளர்கள், ‘இவ்ளோ நாளா உங்களுக்காய்யா சப்போர்ட் பண்ணி எழுதிட்டு வந்தோம்’ என்று தலையிலடித்துக் கொண்டார்கள்.
என்ன நடந்தது?
பொதுவாக ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாதான் தயாரிப்பாளர் கடைசியாக சிரிக்கக் கூடிய நிகழ்ச்சி. அதற்கப்புறம் படம் ஓடினால் சிரிப்பார். இல்லையென்றால் இந்த விழாவில் சிரித்தபோது எடுத்த படத்தை வீட்டில் மாட்டி வைத்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து பார்த்து பெருமூச்சு விடுவார். பொதுவாக சொந்த பந்தங்கள், உறவுக்காரர்கள் எல்லாரையும் அழைத்து வந்து இந்த விழாவை ஏதோ காதுகுத்து, மஞ்சள் நீராட்டுவிழா போல அமர்க்களப்படுத்திவிடுவார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளரும் அப்படியொரு நிகழ்ச்சியைதான் ஏற்பாடு செய்திருந்தார். பெப்ஸி ஊழியர்களின் சாப்பாட்டை படப்பிடிப்பில் சாப்பிட்டு சாப்பிட்டு வெறுத்துப்போனவர், வேறொரு ஓட்டலில் இருந்து உணவுகளை வரவழைத்திருந்தார். இதை அறிந்து உள்ளே புகுந்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெப்ஸி தொழிலாளர்கள், தாட்பூட்டென தட்டுகளை வீசியெறிய ஆரம்பித்தார்கள். சாப்பிட்டு கொண்டிருந்தவர்களின் தட்டுகளையும் பிடுங்கி எறிந்த அவலமும் பத்திரிகையாளர்களின் கண் முன்னேயே நடந்தது.
ஷுட்டிங்கை வெளிநாட்டுல கொண்டு போய் வைக்கிறானுக. கேட்டா அஜீத்து, விஜய், விக்ரமுன்னு பெரிய ஹீரோக்களோட படம்னு சொல்றான். அங்கேயே சாப்பிட்டு தங்கி அங்கேயே படத்தை முடிச்சுட்டு வந்துர்றானுங்க. எங்க சங்கத்துல இருக்கிற சமையல் ஆட்களுக்கு வேலை கிடைக்கறதில்ல. இந்த மாதிரி சின்ன படம் பண்ணுறவனும் சரவண பவன், வசந்த பவன்னு போனா நாங்க விட முடியாதுல்ல? என்று பெரிய ஹீரோக்களையும் தயாரிப்பாளர்களையும் கூட வாய்ப்பு வந்தபடி ஏசித்தள்ளினார்கள் அவர்கள்.
வருஷம் முழுக்க சாப்பாட்டுக்கு வழி ஏற்படுத்தி தருகிற சின்னப்பட தயாரிப்பாளர்கள், ஒரு நாள் அதுவும் விழா நேரத்தில் கூட சுதந்திரமாக சாப்பிட முடியாது என்றால், இந்த கேடுகெட்ட செட்டப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிற பெப்ஸி தலைவர் அமீர் இவர்களையெல்லாம் களையெடுப்பாரா? அல்லது கண்டிக்காவாவது செய்வாரா?
Will Ameer act with an iron hand on the erroneous FEFSI members?
Day in and day out the unruly behaviour of FEFSI members are growing without any limit. Recently producer-director Ghazali narrated his experience with members of FEFSI and even wrote to the Producers’ Council.
On 12th Feb. makers of Aadhiyum Andhamum hosted the audio release event in Prasad Lab. When the event was over and the invitees and the press were on their way to the ‘lunch’, a bunch of unruly mob said to be members of FEFSI barged into the premises and created mayhem, throwing the food brought in to serve the guests. They even pulled out the plates the guests were eating. Their grouse was that they were not given the order to cook and supply for the event.
Journalists, who saw the employees of the caterers and guests are being bullied, intervened in a bid to restore order. They too were threatened and abused. FEFSI workers even snatched the mobile phone of a journalist from a popular Tamil weekly who attempted to record their unruly actions.
A senior journalist who covered the event was quoted as saying, “Firstly, this event is not a part of the filmmaking process. Even if they say that according to an agreement the FEFSI has with the Producers’ Council, producers cannot hire food caterers other than those registered with the FEFSI for film events, this is not how they should have put across their concerns. If they felt they had been wronged, they must have lodged a protest with the Producers’ Council instead of acting in an unruly fashion at a public event.”
The unruly acts of FEFSI members and staff is to be condemned and stringent action is to be taken against those members who are nothing but ‘arrogance personified’.
Will Ameer take actions against the erroneous members and initiate corrective measures?