‘கண்ணில்லை… ஆனால் படம் இயக்குவேன்!’ -ஸ்ரீதரை மீட்ட வில்லன் மனசு!

‘கண் போன பாதையில் கால் போகலாமா?’ -இது புரட்சித்தலைவரின் அட்வைஸ். ஸ்ரீதரை பொறுத்தவரை அது சூழ்நிலைக்கு பொருந்தாத வரிகள். ஏன்? அதை தெரிந்து கொள்வத்கு முன் ஸ்ரீதரை தெரிந்து கொள்வது முக்கியம்.

கண் போன பின்னாலும் கால் போகலாம்… என்று நிரூபித்திருக்கிற இவர் ஒரு உதவி இயக்குனர். அன்பு, கோடம்பாக்கம், புதிய கீதை, ஜாம்பவான், வெண்ணிலா கபடிக் குழு என சுமார் அரை டஜன் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். வாழ்க்கையில் யாரையாவது ஒரு தயாரிப்பாளரை சந்தித்து கதை சொல்லி அவரை அசர வைத்து ஒரு வெற்றிப்படத்தை இயக்கிவிட வேண்டும் என்கிற வெறி இருந்தது அவருக்கு. ஆனால் அதைவிட வெறியோடு அவரை துரத்திக் கொண்டு வந்தது விதி.

2011 ம் ஆண்டு கோயமுத்துரில் ஒரு தயாரிப்பாளரை பார்க்க சென்றார் ஸ்ரீதர். சாலையை கடக்கும் போது மிக கொடூரமான ஆக்சிடென்ட். அள்ளிப் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். உயிரை காப்பாற்றிய மருத்துவர்களால் அவரது கண்களை காப்பாற்ற முடியவில்லை. ஒரு கண் ஸ்பாட்டிலேயே கூழாகிவிட, இன்னொரு கண் நல்லவேளையாக உயிரோடு இருக்கிறது. ஏராளமாக செலவு செய்து ஆபரேஷன் செய்தால் அந்த ஒரு கண்ணிலும் பார்வை கிடைக்குமாம்.

அவ்வளவு செலவு செய்ய இயலாத குடும்பம் கண்ணீரோடு ஸ்ரீதரை தன் வீட்டோடு வைத்துக் கொண்டது. ஆனால் அவர் கண்ட கனவு வீட்டோடு இருக்க விடவில்லை ஸ்ரீதரை. கண்ணே இல்லாவிட்டாலும் படம் இயக்க முடியும் என்று நம்ப வைத்தது அவரது விடா முயற்சி. இதை ‘குருட்டு நம்பிக்கை’ என்று கேலி பேசியவர்களும் இங்கு இருந்தார்கள்.

ஒரே ஒரு நல்லவர் மட்டும் ‘குட்டிப்புலி’ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ராஜசிம்மனின் நம்பரை ஒருவர் கொடுத்து இவர் ஹீரோவாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். போய் கதை சொல் என்றாராம். அடையாறில் இருக்கும் ராஜசிம்மன் வீட்டுக்கு கிளம்பினார் ஸ்ரீதர்.

இனி ராஜசிம்மன் வாயால் மிச்சத்தை கேளுங்கள்-

ஸ்ரீதர் எனக்கு போன் செய்ததும், சரி வாங்க என்று கூறியிருந்தேன். வீட்டுக்கு அருகில் வந்தவர், சார் நான் பஸ் ஸ்டான்ட்ல இருக்கேன் என்றார். நானும் அங்குதான் நின்றிருந்தேன். அந்த பஸ் ஸ்டாப்பில் ஒரு பார்வையற்றவர் மட்டுமேதான் உட்கார்ந்திருக்காரு. நீங்க எங்க இருக்கீங்க என்றேன். நான்தான் சார் அது என்றார் ஸ்ரீதர். எனது சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது.

அவரை அழைத்துக் கொண்டு காரில் செல்லும்போதே அவரது கண்பார்வை பறிபோன கதையை சொல்லிவிட்டார். முதலில் உங்களுக்கு கண் கொடுப்பதுதான் என் வேலை. அதற்கு எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்றேன். நான் ‘அகனா’ என்ற ஏழை எளியோருக்கு உதவுகிற அமைப்பை நடத்தி வருகிறேன். ஒரு காலத்தில் ஆட்டோ டிரைவராக என் வாழ்க்கையை தொடங்கி, ஷேர் ஆட்டோ ஓட்ட துவங்கி, பின்பு நடிகன் ஆனவன் நான். சுமார் இருபது முதியவர்களை வைத்துக் கொண்டு இலவச பராமரிப்பு இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறேன்.

பலரிடம் கையேந்தியாவது இவருக்கு கண் பார்வை வரவழைச்சுடணும் சார்’ என்றார் ராஜசிம்மன்.

இருவரும் சேர்ந்தே கையேந்த ஆரம்பித்திருக்கிறார்கள். இயக்குனர் சங்கத்தில் ஸ்ரீதர் உறுப்பினர் இல்லையாம். ரூல்ஸ் வந்து குறுக்கே நிற்கிறது அவர்களுக்கு. இவர் பணியாற்றிய எந்த படத்தின் இயக்குனருக்கும் மனம் இருக்கிற அளவுக்கு பணம் இல்லை. அல்லது பணம் இருக்கிற அளவுக்கு மனம் இல்லை.

ராஜசிம்மன் நடத்தி வரும் டிரஸ்ட்டின் பெயர் அகனா. அப்படியென்றால் சூரிய வெளிச்சம் என்று பொருளாம். அகனாவின் உதவியோடு ஸ்ரீதர் சூரிய வெளிச்சத்தை பார்க்கிற நாள் எப்போது வருமோ? இதற்கான பதில் இரக்கமுள்ளவர்களின் ‘பையில்’ இருக்கிறது.

Loss of eyes did not deter this young lad’s ambition

Sridhar, who worked as a AD in about half a dozen films, including that of Puthia Geethai and Vennila Kabadi Kuzhu, is full of beans and enterprising. His ambition to become a director in Kollywood, was cut down by destiny. While on his way to meet a producer to narrate his script, at Coimbatore, he met with a major accident, in which he lost one eye completely and the other one damaged very badly. The doctors told him that he could get back his vision in the salvaged eye, but he needs to spend lot of money. His family thus put a stop for his ambition and asked him to confine at home. Sridhar however did take destiny’s act as a challenge and wanted to take it head on to achieve his goal. Through a common friend, he got the phone number of Rajasimhan who acted as villain in Kutti Puli, and contacted him. The actor asked him to meet him. “Seeing Sridhar as blind, was a rude shock to me” revealed Rajasimhan. After hearing his story, Rajasimhan told him that his prime responsibility is to get back the vision for Sridhar, before helping him in his ambition. Though Sridhar did contact those directors under whom he worked, he could not get any financial help, for various reasons. But Rajasimhan is firm in his thought that he would organize sufficient funds through his ‘Agana’ an old age home, he is running, for the aged. Now the brave hearts Rajasimhan and Sridhar are seeking help from those who have large heart. Those who wish to help Sridhar, may contact the editor.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
3D படத்தில் நடிக்கிறார் சூர்யா… – இது லிங்குசாமியின் விருந்து!

இரண்டு ஸ்டேஷன்களுக்கு நடுவில் முள்ளை வைத்துக் கொண்டு ரேடியோ கேட்பது மாதிரி, மூளை கிறுக்கேறி போகும் போலிருக்கிறது சூர்யா ரசிகர்களுக்கு. ஒரு சேனல் லிங்குசாமி, இன்னொரு சேனல்...

Close