கதறவைத்த சண்டாளன்கள்…. காவல் துறையில் பரோட்டா சூரி புகார்!

அட சண்டாளைங்களா…. பரோட்டா சூரி அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைதான் இது. தெரிந்தோ தெரியாமலோ அவர் உச்சரித்த இந்த வார்த்தை, ஏகப்பட்ட சண்டாளன்களை உருவாக்கியிருக்கிறது அவருக்கு எதிராக.

சூப்பர் ஸ்டார் ரஜினி ‘இவன் வேற மாதிரி படம்’ நல்லாயிருக்கு என்றொரு கடிதம் கொடுத்தாரல்லவா? சூரி பெயரில் ஒரு ட்விட்டர் அக்கவுன்ட் ஒன்றை ஓப்பன் பண்ணிய இந்த சண்டாளன்கள் ‘அவரு சொல்லிட்டா கூட்டம் வந்துருமா?’ என்கிற ரேஞ்சில் அதில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டார்கள். இந்த ஸ்டேட்டஸ். போட்ட கொஞ்ச நேரத்திலேயே பற்றிக் கொண்டு எரிய, அதைவிட பிரமாதமாக எரிந்தது சூரியின் வயிறு. இது போலி என்பதே புரியாமல் புரோட்டா மாவுக்கு பதிலாக இவரையே பிசைந்துவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள். ‘அட போக்கத்த பயலுவளா… எனக்கு ட்விட்டரும் தெரியாது. அக்கவுண்டும் தெரியாது. டீக்கடையில கூட நான் அக்கவுண்ட் வச்சதில்ல. ஏண்டா என் பேரை சொல்லி எழவு கூட்டுறீங்க’ என்று கதற ஆரம்பித்துவிட்டார் சூரி. சமயோசிதமாக ஒரு வேலை செய்தார். சக நடிகர் சிவகார்த்திகேயனின் ட்விட்டர் அக்கவுண்ட்டில் சூரிக்கு ட்விட்டர் அக்கவுன்ட்டே இல்லை என்று அறிவித்து ஒரு ஸ்டேட்டஸ் போட சொன்னார். நிமிஷத்தில் பிரச்சனை முடிந்தாலும், ‘தலைவர் காதுக்கு போச்சுன்னா அவருதான் என்ன நினைப்பாரு?’ என்று பதறிப் போனார். நல்லவேளை அவர் இவரை மன்னித்துவிட்டதாக கேள்வி.

இதற்கிடையில் இந்த சண்டாளன்களை வேரறுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் சூரி. இன்று கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகாரும் கொடுத்திருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பது இதுதான்-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும்நான் பொதுமக்கள் மத்தியிலும் – ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த மரியாதையுடன் விளங்கி வருகிறேன். பொது விவகாரங்களில் தலையிடுவதோ அல்லது எதைப் பற்றியும் கருத்து சொல்வதோ கிடையாது. ஆனால் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசியிருப்பதாக கூறி சில பத்திரிகையாளர்கள் என்னிடம் கருத்து கேட்டார்கள். பதறிப்போன நான் அது பற்றி விசாரித்த போது எனது பெயரில் விஷமிகள் சிலர் ‘ஃபேஸ் புக்’ கணக்கு ஆரம்பித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது தெரிய வந்தது. டுவிட்டர், ஃபேஸ்புக்கில் பங்கேற்கும் அளவுக்கு நான் படித்தவன் இல்லை. ஆனால் எனது பெயரில் 3 ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கி எனக்கு எதிரான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். எனவே, எனது பெயரிலான ஃபேஸ்புக் கணக்குகளை முடக்கி வைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல்லி மிட்டாயா பார்த்து பார்த்து ஜல்லியடிக்கிறீங்களே… நீங்கள்ளாம் யார்றா?

Parotta Soori yet another victim of Cyber-crime!

Recently super star Rajini had appreciated Vikram Prabhu’s Ivan Vera Mathiri, in which Parotta Soori too will be playing an important role. Some miscreants developed a fake twitter account in the name of Parotta Soori and posted a comment saying, “If Rajini appreciated the film, will the film become hit?”, and made a status also. Rajini fans got enraged and when contacted Soori he was dismayed and told them that he did not have any twitter account. He immediately contacted his friend Siva Karthikeyan and asked him to post that Soori does not hold any twitter account, and marked the status. Siva did it obligingly for his friend.

Meantime he filed a complaint with Commissioner of Police about the fake twitter account created in his name.  In his complaint Soori has said that he has no twitter or face book accounts. “Some miscreants have opened the fake account and posted indecent comments abusing super star Rajinkanth. When press contacted me I was shocked and tensed. I have no twitter or face book accounts as I am not that much literate. I there request you to please block the fake accounts and take appropriate action against the assailants,” Soori had said in his complaint.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
V4 Film Awards 2013 ல் டைரக்டர் பாலா, நடிகர்கள் சத்யராஜ், விஜய்சேதுபதி, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பலர்

[nggallery id=105]

Close