கதையே இல்லாமல் ஒரு படம்! – புதுமை விரும்பி பார்த்திபனின் ‘பலே’ துவக்கம்…

வைரமுத்து கவிப்பேரரசு என்றால் அவரது மகன் மதன் கார்க்கி கவி சிற்றரசுதானே? (பட்டம் உபயம்- பேச்சு சித்தர் பார்த்திபன்) இன்று பிற்பகல் சுமார் நாலு மணியளவில் அவருக்கு இந்த பட்டத்தை சூட்டினார் பார்த்திபன். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் துவக்கவிழா நிகழ்வில்தான் இப்படி பட்டதாரியாக்கினார் மதன் கார்க்கியை. படத்தின் தலைப்பையும் இப்படி வித்தியாசமாக யோசிக்க பார்த்திபனால்தான் முடியும். அதிருக்கட்டும்… கவி சிற்றரசுவின் ஒரு பாடலை அங்கு வாசிக்க வைத்தார்கள் அவரது குரலிலேயே! ஏற்ற இறக்கத்தோடு அவர் வாசித்து முடிக்க, கிறக்கத்தோடு கேட்டு ரசித்தது நிருபர் கூட்டம்.

பாடலின் சாரம்சமே கதையை பற்றியும், திரைக்கதையை பற்றியும், வசனத்தை பற்றியும், இயக்கத்தை பற்றியும்தான். அதை அழகான தமிழால் கோர்த்திருந்தார் கவிப்பேரரசின் வாரிசு.

இனி படத்தை பற்றி…. ‘என் இரண்டு படங்களை தவிர மீதி படங்கள் அத்தனையும் நானே தயாரித்ததுதான். ஏனென்றால் என்னுடைய வித்தியாசமான முயற்சிகளுக்கு என் பணத்தை செலவு செய்தால்தானே சரியாக இருக்கும். அதனால்தான். கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான கதைகளை எழுதி வைத்திருந்தேன். தயாரிப்பாளர் சந்திரமோகனை பார்த்து ஒரிரு கதைகளை சொல்லியும் வைத்திருந்தேன். அந்த நேரத்தில்தான், ‘நீங்க கதை திரைக்கதை வசனம் இயக்கம்னு ஒரு கதை வச்சுருக்கீங்களாமே, அதை சொல்லுங்க’ என்றார் அவர்.

சார்… அந்த படத்துல கதையே கிடையாது. வெறும் திரைக்கதை மட்டும்தான்னு சொல்லி சில சீன்களை அவருக்கு சொன்னேன். இந்த படத்தையே பண்ணிடலாம்னு சொன்னார். இதில் நான் நடிக்கவில்லை. முற்றிலும் புதுமுகங்கள்தான் நடிக்கிறாங்க என்றார் பார்த்திபன்.

இந்த படத்தில் கதையே இல்லைன்னு சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். பார்த்திபன் அந்த விஷயத்தில் வீராதி வீரனாச்சே? பார்க்கலாம் இவர் கொளுத்தப் போவது ஊதுவர்த்தியா, இல்லை கொசுவர்த்தியா என்று.

Director Parthieban launches his next film

Parthieban was concentrating on acting for some time now, though it has been years he took to direction. Recently he announced that he would be directing his film, titled ‘Kathai, Thiraikkathai, Vasanam, Iyakkam. The film launch was held today, the 7th Nov. Speaking on the occasion he heaped praises on Madhan Karky, son of Kavi Perarasu Vaira Muthu. He, not only adorned the title, Kavi Sitrararu on Madhan, he also made him to recite a lyric penned by him for the film. Madhan lived up to his image by citing an excellent lyric elaborating on the nuances of, ‘story, screen play, dialogues and direction’ to the amazement of everyone present there. Parthieban said that the film does not have a story line, but a strong screen play, making a strong anticipation, for his film, from day one. He also said that he would stick to directing the film and will not act. The film will have all new faces, he added.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புட்டுகிச்சா… இல்லையா? – நல்லா பண்ணுனாங்கப்பா லவ்வு…!

சிம்பு - ஹன்சிகா லவ்வுக்கு குறுக்கே பகவதிபுரம் ரயில்வே கேட்டைவிட பலமான கேட் ஒன்று விழுந்துவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியிருக்கிறது. ஹன்சிகாவின் அம்மாவுக்கு மட்டுமே கட்டி சர்க்கரையாக இனிக்கும்...

Close