கதை கருவான பாலியல் பலாத்காரம்

அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் ஆர்.எல்.யேசுதாஸ் வழங்க சரவணா பிலிம் மேக்கர்ஸ் சுதாகர் தயாரிக்கும் படம் “ காதல் 2014 “ இந்த படத்தில் ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். மற்றும் மணிகண்டன் நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அப்புக்குட்டி, பசங்க சிவகுமார், வேல்முருகன், கம்பம் மீனா, ஷர்மிளா, அழகப்பன், ராஜபாண்டி, ஷிவாணி, சேலம் சின்ன கருப்பு ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ரித்தீஷ்கண்ணா
விவேகா, லலிதானந்த், சுகந்தன் பாடல்களுக்கு பைசல் இசையமைக்கிறார்.
கலை – சுந்தர்ராஜன் / நடனம் – தினா, ராதிகா, சதீஷ் / எடிட்டிங் – சங்கர் தயாரிப்பு நிர்வாகம் – ராம்சங்கர் / தயாரிப்பு மேற்பார்வை – ராமமூர்த்தி
இணை தயாரிப்பு – R.Y.சஜீத்
தயாரிப்பு – B.சுதாகர்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சுகந்தன்.

படம்பற்றி இயக்குனர் சுகந்தனிடம் கேட்டோம்…. இன்று இந்தியா முழுக்க தினசரி பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வருவதே பாலியல் பலாத்காரங்கள் தான் அதைதான் இதில் கதை கருவாக வைத்திருக்கிறோம். இளம் காதலர்களான ஹரீஷ் – நேகா இருவரும் அடர்ந்த கட்டுப் பகுதிக்குள் செல்வதை பார்த்த ஒரு குரூப் பின் தொடர்கிறது. ஹரீஷை கட்டிப் போட்டு விட்டு நேகாவை கற்பழித்து விடுகிறார்கள். அதற்க்கு பிறகு அவள் அந்த வேதனையை நினைத்து வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டாளா ! இல்லை அதை மறந்து வாழ்க்கை போரட்டங்களை எதிர்நோக்கி பயணமானாளா? இதை தான் படமாக்கி இருக்கிறோம். இன்று நாட்டுக்கு தேவையான கருத்தைத் தான் பதிவு செய்திருக்கிறோம். படத்தை பார்த்து பெரிது பாராட்டிய ஆர்.எல்.யேசுதாஸ் உடனே மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார் என்றார் இயக்குனர். விரைவில் படம் திரைக்கு வருகிறது.

Read previous post:
ரஜினி கமல் அஜீத் விஜய் கூட்டு சேர்க்கிறார் விஷால்

கோபுரமாகவே இருந்தாலும் இடிஞ்ச பிறகு குவியல்தானே...! ஒரு காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடந்த இடம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்த இடம் என்றெல்லாம் பெருமை பொங்க...

Close