கமல் அடித்தது காப்பியே அல்ல… இது மீடியாவின் கொடூர தாக்குதல்!

கடந்த ஒரு வாரமாக மீடியாவின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் கமல். அவரது ‘உத்தம வில்லன்’ கெட்டப் குறித்துதான் இந்த தாக்குதலை நடத்தி வருகிறது மீடியா. கமல் அடித்தது காப்பியோ காப்பி என்று கொக்கரிக்கிறது இந்த பலசாலி மீடியா. மேலோட்டமாக பார்த்தால் அது உண்மை போல தெரிந்தாலும், நிஜம் சற்று ஆழத்தில் கிடப்பதால் யார் கண்களுக்கும் புலப்படாமல் போய்விட்டதென்றே தோன்றுகிறது.

கேரளா என்றாலே திருவிழாக்களுக்கு பஞ்சமில்லாத பூமி என்பது பலருக்கும் புரியும். அங்கு கொண்டாடப்படும் ‘தேயம்’ என்கிற திருவிழாவில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோதான் அவரது கெட்டப்புக்கான மாடல் என்கிறது மீடியா. பிரான்சைச் சேர்ந்த பிரபல புகைப்படக்காரரான எரிக் லஃபோர்க் என்பவர் எடுத்த புகைப்படம்தான் அது. நியாயப்படி பார்த்தாலும் சரி, சட்டப்படி பார்த்தாலும் சரி. அந்த போட்டோவுக்குதான் அவர் உரிமை கொண்டாட முடியுமே தவிர, ஒட்டுமொத்த திருவிழாவுக்கே கொண்டாட முடியாது.

கதைப்படி அந்த திருவிழாவில் வேஷம் போட்டுக் கொண்டு கமல் கூத்தாடுவது போல ஒரு காட்சி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த காட்சியில் அவர் எப்படி தோன்றுவாரோ, அப்படிதானே மேக்கப் போட்டுக் கொள்ள முடியும்? கமல் ‘தேயம்’ மேக்கப்பை திருடிவிட்டார் என்று கூறிவிடுவார்களே என்பதற்காக நம்ம ஊர் ஸ்டைலில் வேப்பிலையை கட்டிக் கொண்டு ஆட முடியாதே? அப்படி ஆடினாலும் அது எப்படி தேயம் திருவிழாவாக இருக்க முடியும்? ஆக கமல் செய்தது முற்றிலும் சரியான விஷயம்தான்.

இன்னும் கூட புரியும்படி சொல்லலாம். இதோ- சசிகுமாரை வைத்து பாலா கரகாட்டக்காரர்களின் கதையை படமாக்கப் போகிறார். கரகத்தை தலையில்தான் வைத்தாக வேண்டும். அதை தோளில் தொங்க விட முடியாது. அப்படி தொங்கினால் அது கரகம் அல்ல. வேறு ஏதோ கெரகம். சசிகுமாரின் கெட்டப்பை பார்த்துவிட்டு, அவர் கரகாட்டக்காரன் ராமராஜனை காப்பியடிக்கிறார் என்றால் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படிதான் இருக்கிறது இந்த பிரச்சனையை அணுகுகிற விதமும்.

அதற்காக கமல் காப்பியே அடிக்க தெரியாதவர் என்று சப்பைக்கட்டு கட்ட நாம் தயாராக இல்லை. அது வேறு… இது வேறு… இந்த பிரித்துணரும் பக்குவம் ஒரு சார்பாக இருப்பதால்தான் காயப்பட்டு நிற்கிறார் கமல். விமர்சகர்களின் வேலை ஊசி குத்துவதுதான். அது தையலாக இருக்கும் பட்சத்தில் சந்தோஷம். கொலையாக முடியும் பட்சத்தில் வருத்தம். மீடியா தான் செய்து கொண்டிருப்பது எது என்பதை புரிந்து கொள்வது இந்த நேரத்தில் மிக மிக அவசியம்.

-ஆர்.எஸ்.அந்தணன்

Is it right to accuse Kamal for copying?

Kamal recently released the first look of his forthcoming film Uthama Villain directed by Ramesh Arvind. Right from popular English daily to all sundries, have pointed accusing finger at Kamal, as the picture of first look poster released more or less resembles the photo taken by a French photographer of the famous festival ‘Theyam’ celebrated in Kerala. He has brought out the beautiful painting done on the face of the man in his photograph. Kamal’s photo picture looks similar to the original barring for few corrections.

While the media cries wolf that Kamal has copied the photo for his first look, we will like to bring in some facts for our viewers. French photographer Eric Lafford had taken the photo during the ‘Theyam’ celebrations here in India. If Kamal is going to play an artiste who celebrates ‘Theyam’ festival in the film, it is natural that Kamal dons the similar paint and looks similar. It does not mean he has copied ‘Theyam’ festival rights. For example if Sasikumar is going to play ‘karagattam’ in the film ‘Karagattam’ directed by Bala, he could not be accused he is copying Ramarajan from Karagattakkaran. The artiste has to don the apt makeover and dress for the scene he will be acting in the film, which Kamal must have done for Uthama Villain as well.

By writing this we are not in the business to defend Kamal as he knows how to defend himself. Our position is that media while pointing out flaws should be careful accusing. The needle will be better placed if it stitches and not for pricking someone’s body.

3 Comments
 1. suprjaaa says

  nallave support panreenga.

 2. Rafeek says

  இப்போ நீங்க போட்டு இருக்கிற படம்..தேயம்.. மேக்கப்ன்னு வச்சுக்குவோம்.. இது போல எத்தனையோ காம்பினேஷன்..இருக்க.. அது ஏன் அந்த பெட்ரூமாஸ்லைட்..மாதிரியே.. கலர்.. போஸ்.. பொஸிசன்..எல்லாம்?
  எனிவே கமலுக்கு இது ஒரு மேட்டரே..இல்ல படத்துல இப்படி ஒரு காட்சி கூட இல்லாம போகலாம்..பட்..இனி வரும் காலங்களில் யார இருந்தாலும்..பஜாருல உஷரா இல்லைன்னா நிஜார் கழட்டப்படும்!!..

 3. ஜெஸ்ஸி says

  நல்லா காக்கா புடிக்கிரிங்க…. அப்படி பார்த்தா தமிழ் சினிமால இதுவரை யாருமே காப்பி அடிச்சதே இல்ல…..எல்லாமே அவங்கவங்க சொந்த சரக்கு தான்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ராஜாவின் பாட்டு மதுரையில்… ராகம் தேடி வரும் பண்ணைபுரம்!

பண்ணைபுரத்தின் இசைக் காற்று உலகம் முழுக்க வீசிக் கொண்டிருக்கிறது! இந்த ஒரு பெருமை போதும் அந்த கிராமத்திற்கு. ஆனால் அந்த மண்ணில் பிறந்து தன் இசையால் தமிழுலகத்தையே...

Close