கமல் என்கிற புத்தகப்புழுவுக்கு கவிஞர் புவியரசு போட்ட இரை

படைப்பாளியான கமல் ஒரு படிப்பாளியும் கூட. அப்படிப்பட்டவருக்குதான் புத்தங்களின் அருமை புரியும். அறிமுகமில்லாத சிறு எழுத்தாளர்களின் புத்தகங்களையும் கூட நேரம் கிடைத்தால் வெளியிட்டு உதவுகிற நல்ல மனம் அவருக்கு உண்டு. இதன் விளைவாக அடிக்கடி அவரது அலுவலகத்திலேயே புத்தக வெளியீட்டு விழா நடைபெற்று அந்த புகைப்படங்களை அனுப்பி வைப்பார் அவரது பி.ஆர்.ஓ நிகில். இப்போது அவரை பற்றியே ஒரு புத்தகம் வருகிறது என்பதையும் அதையும் கமலே பெற்றுக் கொண்டார் என்பதும் சற்று ஸ்பெஷலான செய்திதான். அந்த புத்தகத்தின் பெயர் அபூர்வ நாயகன்.

வெள்ளைக்கே வெள்ளை சேர்த்த ராமராஜ் காட்டன் அதிபர் கே.ஆர்.நாகராஜன் முயற்சியால் உருவானதுதான் இந்த புத்தகம். அதனால் புத்தகத்தை அவரே வெளியிட்டார். 1960-ல் திரைத்துறையில் நுழைந்து, 55 வருடங்களாக தனது உழைப்பின் மூலம் தமிழகத்தின் பெருமையை தரணியில் உயர்த்திய தமிழனுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சமர்ப்பணமாக இப்புத்தகம் அர்ப்பணிக்கப்படுகிறது என்றார் அவர்.

கமலஹாசனின் அபூர்வ புகைப்படங்களும், அவர் நடித்த திரைப்படங்கள் குறித்த தகவல்களும் பல முன்னணி கவிஞர்களின் வாழ்வியல் கவிதைகளும் அடங்கிய தொகுப்பாக, அரிய களஞ்சியமாக இப்புத்தகம் உருவாகியிருக்கிறது. இந்த முயற்சியை கவிஞர் புவியரசு செய்திருக்கிறார். அவருக்கு நமது ஸ்பெஷல் பாராட்டுகள்.

A Book on Kamal Hassan – Aboorva Nayagan

Sometime back The leading English daily The Hindu released a book on super star Rajinikanth. Now, Ramraj Cotton Mills Chief KR Nagarajan on his own conceived the idea of writing a book on Kamal and his deeds for the past five and a half decades in film industry. Kamal who himself a avid reader of whatever books that are available to him, to add to his versatile knowledge. That is the reason many a times he adopts and incorporates useful information to the film industry in his films before others catch up on it.

Aboorva Nayagan, the title of the book has collections of rare pictures of the actor in his movies and life related poems of renowned Tamil poets. The book is the exhaustive repository of Kamal Haasan’s achievements and contribution to Tamil Cinema. The book has come into life due to the efforts put in by Mr. Nagarajan and Kavignar Puviyarasu who compiled the information for the book.

Releasing the book Mr. Nagarajan has said that his company Ramaraj Cotton Mills dedicates the book to Kamal one of the finest actors of Indian Cinema for his 55 years of hard work and dedication through which he had taken Tamil Cinema across the globe.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
SRI PRIYANKA STILLS

[nggallery id=153]

Close