கலகம் ஆரம்பம்… – ஹன்சிகா மேனேஜருக்கு கல்தா!

அதுக்கென்ன கொடுத்துட்டா போச்சு… என்று கூறிக் கொண்டே கைகளை மறைக்கிற வித்தை யாருக்கு தெரிகிறதோ, இல்லையோ? ஹன்சிகாவின் அம்மாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. சிம்பு- ஹன்சிகா லவ் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ந்து நிற்பதால், உள்ளம் உலர்ந்து உறக்கம் தொலைந்து நிற்கிறார் இந்த பாசக்கார அம்மா.

வெட்ட வெட்டதான் தாடி வளரும் என்பது போல, இந்த காதலும் வெட்ட வெட்ட வளர்ந்துட்டா என்ன செய்வது என்கிற கவலை ஒருபுறம் இருக்கிறது அவருக்கு. இருந்தாலும் சமாளிச்சுரலாம் என்கிற தன்னம்பிக்கையும் வளர்ந்து நிற்கிறதாம். இப்போ குரு பலன் இல்ல. அதனால் மூணு வருஷம் போகட்டும் என்று கல்யாணத்தை தள்ளிப்போட்ட மகராசி, அடுத்து சுற்றியுள்ள குரோட்டன்ஸ்களை வெட்ட ஆரம்பித்திருக்கிறாராம். முதல் கட்ட முயற்சி என்ன தெரியுமா?

ஹன்சிகாவின் மேனேஜரை வீட்டுக்கு அனுப்பியதுதான்! ஹன்சிகா தற்போது எந்த படப்பிடிப்பில் இருக்கிறார்? அடுத்து எந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்? எந்த ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்? யார் யாரெல்லாம் அவருக்கு போன் செய்தார்கள்? போன்ற விபரங்களையெல்லாம் மணி கணக்கு தவறாமல் ஒப்பித்து வந்தாராம் ஹன்சிகாவின் காதலரான சிம்புவிடம். எந்த ரகசியத்தையும் மறைக்க முடியாமல் தவித்த பாசக்கார அம்மா, அந்த மோசக்கார மேனேஜரை அழைத்து உங்கள் சேவையை இத்தோடு நிறுத்திக் கொள்ளவும் என்று கூறிவிட்டாராம்.

கையில இருந்த காசோலையை நானே பவுண்ட்ஸ் பண்ணிட்டேனே… என்று தவியாய் தவிக்கிறாராம் மேனேஜர். மூடிய ஏடிஎம் -ல் முடிஞ்சளவுக்கு கார்ட்டை தேய்த்துப் பார்க்கிறாராம். நடக்குமா இனிமேல்?

Hansika – Simbu’s Love affair gets its first victim

When every one seems to happy with the union of Simbu-Hansika pair in real life, there is an indirect villain too, which we now seems to learn. In order to thwart the growing of the ‘love’ with her daughter, the sinister mother is doing all that would be possible so that the ‘affair’ will end in failure. She first managed to get the marriage postponed citing ‘horoscopic’ situations, by another 3 years. Having earned 3 years time gap, she has now started putting hurdles. God knows what will be her future plans on this? Presently, Hansika’s manager has fallen as the victim of this love affair. He used to update all the information pertaining to Hansika, right from which shoot she is in to which hotel she stays and who are all talking to her, etc., etc. This was found out by the passionate mother, and immediately she showed him the ‘exit’ gate. While he regrets that he lost a potential opportunity in his career, he is also making his efforts to retrieve the ‘lost’ opportunity. Will he succeed? Only time will tell.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“ஆபிஸ்லேயே இருங்க வர்றேன்!” – அஜீத்தின் வரவால் ஆடிப்போன தயாரிப்பாளர்…

    ‘ஆண்டவா... பிரசாதத்தை வாளியோடு கொடுத்திட்டீயேப்பா’ என்று திக்குமுக்காடி போயிருக்கிறார் ஏ.எம்.ரத்னம். பின்வரும் தகவலை கேட்கிற கடன்கார சீமான்கள், ஏ.எம்.ரத்னத்திடம் ‘கொடுக்கிறப்ப கொடுங்க சார். முதல்ல...

Close