கலீஜ்… பேமானி… செம திட்டு திட்டிய பாடகி

பொதுவாக புகழ் பெற்ற பாப் பாடகர்களை ஒரு படத்தில் பாட வைக்கிறார்கள் என்றால் அந்த படத்தை பார்க்காமலே சொல்லிவிடலாம்… அது டைட்டில் சாங்தான் என்று. ஆனால் அந்த கால்குலேஷனை தகர்த்தெறிந்தார் ஸ்ரீ. இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவராம். டமால் டூமீல் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட்டில் இவர்கள் திரையிட்ட பாடல்தான் டமால் டூமீல். தமனின் இசையில் பிரபல பாப் பாடகி உஷா உதுப் பாட, பாட, நமக்கு சுரீர் சுரீர் என்றது. ஏனென்றால் வரிகள் அப்படி.

அர்த்தம் புரிந்து பாடினாரா, இல்லை செந்தமிழ் என்று நினைத்து ரசித்தாரா தெரியாது. பாடலின் நடுவே கலீஜ்…. பேமானி என்று இஷ்டத்திற்கும் வரிகளை போட்டிருந்தார் பாடலாசிரியர் கருணாகரன். இது டைட்டில் பாடல் இல்லை. படத்தில் வருகிற முக்கியமான சூச்சுவேஷன் பாடல். வரிகள் இப்படியெல்லாம் இருக்கே என்று நினைக்கலாம். அந்த வரிகளுக்கும் படத்தின் சில காட்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. அதனால்தான் அப்படி என்று சமாதானப்படுத்தினார் ஸ்ரீ.

பிளாக் காமெடி டைப் படம்தானாம் இது. வைபவ் ஹீரோ. ரம்யா நம்பீசன் ஹீரோயின். பாண்டிய நாடு படத்தில் வரும் ஃபைவ் ஃபைவ் கலாச்சி ஃபைவ் என்ற பாடலை பாடியவர் ரம்யா நம்பீசன்தான். அந்த சென்ட்டிமென்ட்டா, அல்லது குரல் அழகா தெரியாது. இப்போது அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாடலையாவது அவரே பாடி விடுகிறார். இந்த படத்திலும் ரம்யாவை பாட வைத்திருக்கிறாராம் ஸ்ரீ. (அதுக்கு தனி பேமென்ட், தெரியும்ல…)

பீட்சா படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடிக்க கேட்டாங்க. நான் கதையை கேட்டுட்டு தள்ளி தள்ளி போட்டுகிட்டு இருந்தேன். இந்த கதை ரொம்ப பிடிச்சிருந்தது. டமால் டூமீல் எனக்கு இன்னொரு பீட்சாவா இருக்கும் என்றார் ரம்யா நம்பீசன். அப்படியே ஆகட்டும்…

முக்கிய குறிப்பு – இப்படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

Audio of Damal Dumil launched

Audio launch of Damal Dumil was held on 7th Jan. at the Prasad Lab, Chennai. Music composer Thaman has composed the songs for the film. The song by Usha Uthup was showcased in the event which has full of indecent words in the lyrics. We wonder how Usha agreed to sing such a song with bad lyrics, penned by Karunakar. When asked about the lyrics, the director Sree, said that the lyrics has direct relation to the situation in which the song is to be played.

Sree who was the assistant to Shankar will be debuting in direction with Damal Dumil, said that the film is a black comedy. Mahat and Remya Nambeesan play the lead in the film. Remya and Simbu have crooned a song each in the film.

Remya said that she agreed to do the film as she finds it is as good as Pizza and would do well at the Box Office.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டமால் டுமீல் படத்தில் வைபவ்- ரம்யா நம்பீசன்

[nggallery id=109]

Close