கவலைப்படாதீங்க… நான் இருக்கேன்! டைரக்டரை நெகிழ வைத்த ஆர்யா….

ஆல் இன் ஆல் அழகுராஜா பட விமர்சனங்களில் அப்படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம் – ஐ கும்மு கும்மு என்று குமுறிவிட்டார்கள் சினிமா விமர்சகர்கள். உச்சி மீது விழுந்த அத்தனை விமர்சனங்களையும் கண்டு அப்செட் ஆகாமல் வீறு கொண்டு எழுந்துவிட்டார் அவர். பாஸ் என்கிற பாஸ்கரன் மூலம் ஆர்யாவின் மார்க்கெட்டில் செங்கல் ஜல்லி பூசி அவரை ஸ்டிராங் ஆக்கியவரல்லவா? அந்த உரிமையில் இவர் ஆர்யாவிடம் போய் நிற்க, அழாதீங்க. கண்ணை துடைச்சுக்கங்க என்றெல்லாம் அவரை ஆறுதல் படுத்திய ஆர்யா, வரும் டிசம்பரிலேயே கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.

அழகுராஜாவில் தன்னை சுதந்திரமாக செயல்பட விடவில்லை. அதனால்தான் இப்படியாகிருச்சு என்று தனக்கு நெருக்கமான சிலரிடம் மட்டும் மனம் விட்டு புலம்பிய ராஜேஷ், இந்த முறை இழந்த புகழை மீட்காமல் ஓய மாட்டேன் என்று சபதமே போட்டிருக்கிறாராம். ரணகள சமாச்சாரத்திற்கு பிறகு நடக்கப் போகும் இப்படத்தில் யாரை ஹீரோயினாக்குவது என்பது பெரிய சீட்டுக்குலுக்கல் திருவிழாவே நடந்திருக்கிறது ஆர்யாவுக்கும் இவருக்கும்.

இருவரும் ஒருமனதாக டிக் அடித்த அழகி, தமன்னாவாம். ஆர்யா என்றால் அவருக்கும் ஓ.கேவாம். விரைவில் வரப்போகும் இந்த தமன்ஸ் பட அறிவிப்பை கோடானு கோடி தமன்னா ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதில் பெருமை கொள்கிறது NTC.

Tamannaa Bhatia roped in to pair with Arya

After hitting the lowest in his career, director Rajesh has taken the recent failure in All in All Azhagu Raja in his strides. It has been said that he was not allowed to work on the film independently which is one of the reasons for its failure. But Rajesh was not worried and he had already made his plans in his mind and drove to Arya. The actor on his part, comforted and cajoled his ‘nabenda’ Rajesh and assured that they both would do a film for which Arya has given the dates from Dec. itself. With renewed vigour Rajesh is said to have told everyone that this film would retrieve all his fame and talents which he lost in AAAR. It is also said that both Arya and Rajesh have zeroed in on Tamanna to play the female lead, who has also given an ‘in principle’ nod.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஸ்ரேயாவுக்கும் அந்த டைரக்டருக்கும் லவ்வாமே?

ide பல்லு முளைக்கிற வயசுல பால்புட்டி தேடுனா ஊரே சிரிக்கும். ஆனால் இது புரியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. என்னவாம்? கிட்டதட்ட கல்யாண வயசை தாண்டிவிட்டார் அவர்....

Close