கவாத்து…. போலீஸ் கதையில் இது எந்த டைப்?

சினிமாக்காரன் எவனாச்சும் குற்ற வழக்குல சிக்குனான்னா லத்திய காதுல விட்டு மூக்கு வழியா எடுத்துரணும் என்கிற ஆத்திரத்தை தருகிற அளவுக்கு போலீஸ்காரர்களை பேரவஸ்தைக்கு ஆளாக்குகிற சினிமாக்களும் அதை உருவாக்குகிற பித்தளை பிரம்மாக்களும் இங்குதான் நிறைய பேர் இருக்கிறார்கள். அதே நேரத்தில், அதே போலீஸ்காரர்களின் கம்பீரத்தை கதையாக சொல்லி, பதக்கம் குத்துகிற சினிமாக்களும் இங்கே உண்டு. தங்கப்பதக்கம், மூன்று முகம், காக்க காக்க, சாமி, சிறுத்தை, சிங்கம் என்று தொடரும் இந்த சிறப்புகளுக்கு நடுவில் இன்னும் எத்தனை கதைகள் வந்தாலும் செரித்து மகிழ இங்கே போலீஸ் கதை ரசிகர்கள் இருந்து கொண்டேயிருக்கிறார்கள்.

உலகத்திலேயே ஸ்காட்லாந்து போலீஸ்காரர்களுக்கு பிறகு தமிழக போலீஸ்தான் கிரேட் என்று சொல்ல வரும் சினிமாதான் ‘கவாத்து’. அப்படீன்னா? போலீசுக்கு தரப்படும் பயிற்சி என்று அர்த்தமாம். இன்னும் கண்டு பிடிக்க முடியாத குற்றங்கள் இங்கே மலிந்து கிடக்கின்றன. அவற்றின் தொகுப்புதான் இந்த படம் என்கிறார் படத்தின் இயக்குனர் ஜி.வி.பாலா. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பாலபரணியும் மரிய அமல்ராஜும் தயாரிக்கிறார்கள்.

வெண்ணிலா கபடிக்குழு நிதீஸ், புதுமுகம் ரியா, ஆடுகளம் நரேன், ஜான் விஜய் என்று நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது கவாத்து. பேர்ல இருக்கிற சீரியஸ் படத்தின் திரைக்கதையில் இருக்காதாம். எல்லாரும் சிரிக்கக் கூடிய போலீஸ் படம் என்கிறார்கள். போலீஸ் நெஞ்சுல பதக்கம் குத்துற படமாகவே இருக்கட்டும்… முதுகுல குத்துற காட்சி இருந்தா முடிந்தவரை டெலிட் பண்ணுங்க பாலா.

Kavathu – Police Story with a difference says director GV Bala

Indian Cinema in general has portrayed police force with good as well as poor image. But Kollywood has given the Police to bring smile on their faces with few films including Thanga Pathakkam, Moondru Mugam, Kakka Kakka, Samy, Singam, and many others.

Now director GV Bala is bringing out another Police Story, but with a difference. Kavathu (which refers to the Police training, says the director) is the title of the film. He says the film is about the unsolved mysteries in the shelves of the Police department, which he has entwined. He adds that he has told the story humourously but with all seriousness to make an impact on the audience. The film is produced by cinematographer Bala Bharani and Maria Amalraj.

The cast includes Vennila Kabadi Kuzhu Nitish, New face Ria, Adukalam Naren, John Vijay.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மயக்கம் வந்தால் தெளிய வைக்க ‘ கோலி சோடா ’ தயார்…!

பொய்யா சிரிச்சு, போலியா பதில் சொல்லி... இப்படியான வழக்கத்திலிருந்து விடுபட்டிருந்தது ‘கோலிசோடா ’ படத்தின் பிரஸ்மீட். அதிலும் படத்தில் நடிக்க வேண்டிய ஒரு பெண்ணை தேடி படத்தின்...

Close