கவுண்டரின் கவலை
‘கரைச்சல் அரசன்’ கவுண்டமணிக்கு சமீபகாலமாக கோபமான கோபம். ‘நல்லா அடிக்கிறானுங்கப்பா ஜால்ரா…’ என்று தன்னை சந்திக்க வரும் அத்தனை பேரிடமும் குமுறிக் கொண்டிருக்கிறாராம்.
என்ன பிரச்சனை? இவர் நடித்துக் கொண்டிருக்கும் 49 ஓ படத்தின் பாடல்களில் ஒன்றை முதலில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் கவுண்டர் வெளியிட சொன்ன பாடல் வேறு. அது… ‘ஓட்டு போடுங்க ஓட்டு போடுங்க…’ என்ற பாடல். அதில் எழுதப்பட்டிருக்கும் வரிகள் ஒவ்வொன்றும் நிகழ்கால அரசியல்வாதிகளின் தாவங்கட்டையை போட்டுத் தள்ளுகிற வரிகளாம்.
இந்த நேரத்தில் எதுக்குடா வம்பு என்று நினைத்த தயாரிப்பு தரப்பு ‘அம்மா போல அள்ளித்தரும் மழைதான்’ என்று வேறொரு பாடலை வெளியிட்டுவிட்டது. இதில்தான் கவுண்டரின் ‘ஈகோ’ கரகரப்பாகிக் கிடக்கிறது.