“கவுதம் மேனனும்… சூர்யாவும்… கொஞ்சம் கடந்த காலமும்…” – நன்றியே உன் விலை இவ்ளோ சீப்பா?

நன்றியே உன் விலை என்ன?

யாராலும் கணிக்க முடியாத விலைதான் அது என்பதை சமீபத்தில் கவுதம் மேனனிடம் காண்பித்திருக்கிறார் சூர்யா. ‘உன்னால்தான் வளர்ந்தேன், உன்னால்தான் நிமிர்ந்தேன்’ என்றெல்லாம் மப்பில் வசனம் பேசி, மறுநாளே குடலுக்குள் விரலை விட்டு வாந்தியோடு சேர்த்து அந்த வார்த்தைகளையும் துப்பிவிடும் வழக்கம் கோடம்பாக்கத்தில் நிறைய பேருக்கு இருக்கிறது. குடிப்பழக்கம் இல்லாத சூர்யாவும் இந்த ‘உன்னாலே உன்னாலே’ வை மறந்ததுதான் ஆச்சர்யம்.

கவுதம் மேனனா சூர்யாவுக்கு ஹிட் கொடுத்தார்? அதற்கு முன்பே நந்தாவில் வென்றவர்தானே சூர்யா? இவர் ஏன் அவருக்கு நன்றியோடு இருக்க வேண்டும்? இந்த கேள்விகள் ரசிகர்களை சுற்றி சுற்றி வரலாம். கோடம்பாக்கத்தின் பாக்ஸ் ஆபிஸ் விபரம் தெரிந்தவர்களுக்கும், அதையெல்லாம் விட அமெரிக்காவிலிருந்து படம் எடுக்கிற ஆசையில் கோடம்பாக்கத்துக்கு வந்து ‘நந்தா’வால் நொந்து போன ரகுவையும் தெரிந்தவர்களுக்கு மேற்படி கேள்விகளுக்கான பதில் கட்டாயம் தெரிந்திருக்கும். நந்தா நல்ல படம். ஆனால் தயாரிப்பாளரை தெருவுக்கு கொண்டு போன படம்.

நந்தாவை வைத்து சூர்யாவின் சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை, கவுதம் மேனனின் ‘காக்க காக்க’வை வைத்துதான் தீர்மானிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, சூர்யாவின் வாழ்க்கையில் ஜோதிகா என்ற ஒளி வீச காரணமாக இருந்தவரே கவுதம் மேனன்தான். ‘காக்க காக்க’ சமயத்தில்தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதை நன்கு வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் கவுதம். அதோடு விட்டிருந்தால் அவர் கமர்ஷியல் ஆசாமியாகவே கருதப்பட்டிருப்பார்.

இந்த காதலை நிறைவேற்ற விட மாட்டேன் என்று சிவகுமார் குதித்தபோது, சூர்யா கோபித்துக் கொண்டு ஓடிப்போய் தங்கியது கவுதம் மேனனின் வீட்டில்தான். அதுவும் இரண்டு மாதங்கள்….! அதற்கப்புறம் ஒரு நாள் கவுதம் மேனன் தன் அம்மாவுடன் சூர்யாவின் வீட்டிற்கு சென்று, அவர்களை ஆறுதல் படுத்தி இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்த கதையையெல்லாம் கோடம்பாக்கத்தின் இண்டு இடுக்கையெல்லாம் விடாமல் அலசும் புள்ளி விபர புலிகள் மட்டுமே அறிந்த ராஜ ரகசியம்.

ஏ.ஆர்.முருகதாஸ் சூர்யாவை சந்திக்க முடியாமல் திணறி, தான் இயக்குவதற்காக வைத்திருந்த ‘கஜினி’ கதையை கவுதம் மேனனிடம்தான் முதலில் சொன்னார். அதற்கப்புறம் கவுதம்தான், ‘தம்பி… இது நல்ல கதை. கேளுங்க. பெரிய ஹிட்டடிக்கலாம்’ என்று சூர்யாவிடம் அனுப்பி வைத்தவர். இப்படி சூர்யாவின் வாழ்வில் எல்லை கல்லாக இருந்தவரான கவுதம் மேனனைதான், ஸ்பீட் பிரேக்கர் என்று அவதுறு பரப்பி கால்ஷீட் இல்லை என்று அனுப்பி வைத்துவிட்டார் சூர்யா.

உங்க கடனையெல்லாம் அடைச்சுட்டு வாங்க, கால்ஷீட் தர்றேன். என் படத்தை அறிவிச்சுட்டு அதில் வரும் பணத்தை வச்சு உங்க கடனை அடைக்கக் கூடாது என்று சூர்யா போட்ட கண்டிஷனுக்காக தன் வீட்டை விற்று கடனையெல்லாம் அடைத்தாராம் கவுதம்மேனன்.

இப்போது வீடும் போச்சு… சூர்யாவின் 55 கோடி ரூபாய் பிசினசில் வரும் லாபமும் போச்சு. ஆனாலும் கூலாகவே இருக்கிறார் கவுதம். ஏனென்றால், ஐ படத்திற்கு பிறகு விக்ரம் நான் நடிக்கிறேன்ங்க உங்க படத்துல என்று கூறியிருக்கிறாராம் கவுதமிடம்.

மழையே பொய்த்தாலும், கடல்நீரை குடிநீராக்குற வித்தை தெரிஞ்சவங்கதான் இங்கயிருக்கிற எல்லாரும். அது சூர்யாவுக்கு மட்டுமல்ல, அவரைப்போல உயரத்தில் நின்று பூமியை பார்த்து சிரிக்கும் அத்தனை பேருக்கும் புரிந்தால் போதும்.

-ஆர்.எஸ்.அந்தணன்
www.newtamilcinema.in

Gratitude – Where are you hiding?

Gratitude is one word prevalent in every language – old or dead – across the globe. Poets, Pundits and story writers have all written about this one cute word in their works. Even mothers and fathers have inculcated this cute word while bringing up their kids. Despite all these, human race is very often forgets this one word regularly, which is very sad. It is even more sad, when we see a person who throws away the word to air after he or she has become successful. Is it so difficult to adopt the word in one’s life?

Please don’t get me wrong. I am not sounding philosophic. All I wanted to make you known is my hour sadness after seeing Suriya’s press release, how deeply it hurts. Just imagine, if this has hurt a person like me, how hard will it be on the person who actually undergoes such a situation. I am not briefing for any one here. I just put the facts in front of you to make your value judgement.

Suriya, the super hero, now, was a novice, till Kakka Kakka was released. He was like any other passable actor with no hits and nothing to write about. People may say there was Nandha before that which got a name for Suriya. Yes, it did. He got a name, but use is the name, if it is not famous or popular? Name does not bring money, until the name becomes famous and popular, in film industry. For that matter, in any industry. So Suriya earned the popularity and has earned a ‘star status’ only after Kakka Kakka.

After earning a status, Suriya’s stocks hitherto in dumps, started to show up. Popularity brought him films. He started to become choosy in selecting the films. But no film worth its name made an announcement that Suriya is indeed arrived for Kollywood, till Varanam Ayiram hit the screens. After this film by Gautham Menon, there is no looking back, for Suriya, as he continues his journey, till now, with a high percentage of success rate. Mind you, after this film, Gautham gave an opening to Simbu too who was also suffering badly for recognition in the industry, and that film had opened up floodgates to Simbu, too.

In between, AR Murugadoss who was a new comer then, approached Gautham Menon with the script of Gajini and requested his help to rope in Suriya for the film. Suriya who was an upcoming actor then, might have less demands and would listen to director while making a film, made Murugadoss to rope in Suriya. Gautham who heard the story recommended Suriya to listen the script and do the film. Suriya’s Gajini is history now.

Gautham developed personal friendship with Suriya from the days of Kakka Kakka till it was snapped by Suriya the day before. Prbably Gauthem may still have the love, which is now onc-sided. While it cannot be denied that Kakka Kakka influenced his love on Jyothika, his wife, now,  Suriya’s father Sivakumar was stubborn, not to allow the marriage of Suriya-Jyhothika. Hurt, confused and depressed Suriya (those who have such situations can understand the mind of Suriya then), took refugee at Gautham Menon’s home, where his mother too showered love on Suriya. Gautham later went with his mother to meet Sivakumar to convince him to get his son Suriya married to Jyothika. He was able to get the consent from Sivakumar but on one conditions that Jyothika to severe her connection with films and her family once and for all. Thus we the fans too deprived of a bubbly Jyothika’s films, since then.

Any person who gets a star status with the help of his friend, and also a good wife of his choice, again with the help of his friend, would disregard his friendship for the sake of popularity. What is puzzling is, if we are able to gauge the work of Gautham in his films, would not be Suriya not aware of it. Indeed he does. He said that he waited over a year for Gautham to give him a constructive story for him to give the nod and starts shooting. Any one would have accepted Gautham’s project blindly without even hearing the story, but Suriya. While others who have seen Gautham have much more confidence in that man, while Suriya who got two big hits from that man, wants the story to be told first for him to give the nod.

Yes, Gautham is in financial mess. He needs badly a hit to get back into reckoning as well as to clear off his financial mess. Who will be in a better position to help him – a friend or a stranger? My dear readers, you decide.

What is more disquieting me is the fact that Sivakumar being a strict disciplinarian with good ethics, himself, and a great orator of Tamil literature, could not help his son Suriya to understand the ethical facets of life!

 

2 Comments
 1. jaijay says

  aammam suriya kaka kaka la full story ketu dhane naducharu

 2. senthilkumar says

  How many of them working with their first company even after 14 or 15 years. We have respect them, but when we want to go up, leave the company and choose the better one in the current situations. No one cannot blame, and point out that, you are not respecting the first company.

  It is like that, he acted more than two films after, Goutam Menon earned more money with them for this film.

  If SURYA has no market, will he direct film with him.

  No body is perfect, and cannot pointed the mistake with each and every steps.

  If we understand this we can understand others very well.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நஸ்ரியாவுக்கு ரிட்டர்ன் டிக்கெட்? முதல் ‘கல்தா’ ஜீவாவிடமிருந்து…

டிக்கெட் முன்பதிவு மையத்தில் ஒரே கூட்டம். அத்தனை பேரும் ஒரே ஆளுக்கு டிக்கெட் எடுக்க கூடியிருப்பதுதான் ஆச்சர்யம். அதுவும் ரிட்டர்ன் டிக்கெட். ‘ஒரு நடிகை நாடகம் காட்டுகிறார்...

Close