காக்கா முட்டை- குழந்தைகளுக்கு விருது
62 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா புதுடில்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்படமான காக்கா முட்டை படத்திற்கு சிறந்த குழந்தைகளுக்கான திரைப்பட விருதும், இப்படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்களான ரமேஷ் மற்றும் விக்னேஷ், இருவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திர விருதும் கிடைத்துள்ளது .
இப்படத்தை தனுஷ்’ன் வுண்டர் பார் பில்ம்ஸ், இயக்குனர் வெற்றிமாறனின் க்ராச்ஸ்ரூட் பிலிம் கம்பெனி மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளது..
சிறந்த திரைப்படத்திர்க்கான விருதை, நமது குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து நடிகர் தனுஷ் பெற்றுக்கொண்டார். மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருதுகளை விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஜனாதிபதியிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்டனர்.
மணிகண்டன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.